Monday, March 16, 2026

ஒரு கோடி தரப்போகும் புமா ஆஜான் ஜெமோ

 


ஞான பீட திராட்சை கிட்டாத புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகன், இன்று அதிகாலை 05 மணிக்கு முகநூலில் ஒரு பதிவு எழுதியுள்ளார்.  வைரமுத்து மீதும்  ஞானபீடம் கொடுப்பவர்கள் மீதுமான கடும் கண்டனம்தான் பதிவின் சாராம்சம்.

அந்த பதிவில் பார்த்த ஒரு காமெடி கீழே . . .

இந்த இரவு முழுக்க பெண்களின் அழைப்புகள். கண்ணீருடன், கொந்தளிப்புடன். ஏதோ தங்களுக்கு தனிப்பட்ட முறையில் அநீதி இழைக்கப்பட்டது போல. ஒரு தமிழ்ப்பெண்ணாகவே அவமானம் கொள்கிறார்கள் என்றனர். “ஏன் இந்த ஞானபீடைகளிடம் நாம் சென்று நிற்கவேண்டும்? நாம் உருவாக்குவோம் நமக்கான விருதை. அதை விட பெரிய விருதை. நான் என் நகைகளை முழுக்க தந்துவிடுகிறேன்” என்று பல பெண்கள் சொன்னார்கள். அவர்கள் கண்ணீருடன் சொன்னது ஓர் ஆணை.

அப்படி எத்தனை பெண்கள் கண்ணீரோடு அவருடன் பேசினார்கள் என்று தெரியவில்லை. ஒருவர் கூட சொல்லாமல் ஓராயிரம் பேர் சொன்னதாக கதை விடத் தெரியாதா ஆஜானுக்கு? அது ஏன் தமிழ்ப்பெண்ணாகவே அவமானம் கொள்ள வேண்டும்? அப்படியென்றால் அவர்கள் நிஜத்தில் தமிழ்ப்பெண்கள் கிடையாதா?

அடுத்து வருவது அவரது அறிவிப்பு

இதோ நாங்கள் அறிவிக்கிறோம், இந்திய வரலாற்றின் மிகப்பெரிய இலக்கிய விருது. உலக இலக்கியத்திலும் இந்திய இலக்கியத்திலும் சாதனைப் படைப்புக்கான LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE . ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது டெல்லியிலும் நியூயார்க்கிலும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். விருதுத்தொகை இந்திய ரூபாயில் ஒரு கோடி. (ஏறத்தாழ ஒரு லட்சம் டாலர்)
இந்த செய்தி டெல்லியிலும், சென்னையிலும், நியூயார்க்கிலும் முறையாக அறிவிக்கப்படும்.


விருதின் பெயரைக் கூட தமிழில் வடிவமைக்க மனமில்லாத இந்த சுய மோக சங்கிதான் தமிழின் முதன்மையான எழுத்தாளர், தமிழ் இலக்கிய பாதுகாவலர் என்றால் சிரிப்பு மட்டும்தான் வருகிறது.

வருடம் தோறும் ஒரு கோடி ரூபாய் நீர், உமது கால்களில் விழுந்து கிடப்பவர்களுக்கு கொடுக்க எத்தனைப் பெண்களின் நகைகளை அறுக்கப் போகிறீர்களோ?

பிகு: ஜெமோ முக நூல் பதிவில் உள்ள இந்த வரிகளை கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார். அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும்.
இது ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. இது அந்த ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. இந்த விருதோ, அந்த எழுத்தாளரோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
அகிலனுக்கு கிடைத்த ஞானபீடம் தமிழை சிறுமை செய்தது. ஐம்பதாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை எந்த இலக்கிய மேடையிலும் உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்தவேண்டியதில்லை என்று இந்தியா முடிவு செய்தது.

இது தொடர்பாக எழுத்தாளரும் திரைக்கலைஞருமான தோழர் கவிதா பாரதி பகிர்ந்து கொண்ட ஒரு தகவல் ஆஜானின் தோலை உரிக்கும்.

No comments:

Post a Comment