கீழே உள்ள பதிவை எழுதிய பெண்மணி பாஜகவின் மகளிர் அணி பொறுப்பாளர். ஆபாசமாகவும் அசிங்கமாகவும் எழுதக்கூடியவர்.
கௌசல்யா சங்கர், ஃபாத்திமா பாபு ஆகிய பெண் ஆளுமைகளை இழிவு படுத்தி வாங்கிக் கட்டிக் கொண்டார். வாச்சாத்திப் போராளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களை அசிங்கமாக ஒருமையில் எழுதிய போது நான் சூடாக பதிலடி கொடுத்தேன்.
நேற்று முகநூல் இந்த அம்மையாரின் பதிவொன்றை மெனக்கெட்டு எனக்கு காண்பித்தது.
தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் குஷ்புவை உருவக்கேலி செய்த அவருக்கு நான் எழுதிய பின்னூட்டம் கீழே . . .
சனாதனம் கொடுக்கும் தைரியம், மேட்டிமை புத்தி கொடுக்கும் திமிர்.
தோழர் பெ.சண்முகமும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சங்கரை மணம் செய்து அவரை பறி கொடுத்து ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்ட களத்தில் நிற்பவர் கௌசல்யா. ஃபாத்திமா பாபுவும் குஷ்புவும் இஸ்லாமியர்கள். அதனால்தான் அவர்கள் மீதெல்லாம் இந்த சங்கிப் பெண்மணி வெறுப்பைக் கக்குகிறார்.



No comments:
Post a Comment