Tuesday, June 11, 2024

CM போஸ்ட் கொடுப்பாரோ மோடி?

 


புதிய ஒன்றிய அமைச்சர்களின் பட்டியலை பார்த்த போது பிரதாப் சந்திர சாரங்கியின் பெயர் விடுபட்டிருந்தது.

என்ன ஆனது மோடிக்கு? ஏன் சாரங்கியை கைவிட்டார் என்று யோசித்தேன்.

யார் அந்த சாரங்கி என்று கேட்பவர்களுக்காக ஐந்தாண்டுகள் முன்பு எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

Friday, May 31, 2019

மோடி சைக்கிளில் மறைத்த ரத்தக்கறை


மூங்கில் குடிசையில் வசிக்கும் ஏழை,
சைக்கிளில் மட்டுமே பயணிக்கும் எளிய வேட்பாளர்,
ஒடிஷாவின் மோடி

இப்படியெல்லாம் காவிகளால் சமூக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி.

ஒரு சாதாரண கதர் ஜிப்பா அணிந்த இந்த தாடி வைத்த மனிதர் நேற்று மோடியின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஒரு எளிய மனிதரை அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளார் மோடி என்று சங்கிகளின் பெருமிதத்திற்கு அளவே இல்லை.

ஆனால்  அந்த எளிமைக்குப் பின்னே ஒளிந்திருப்பது மோசமான ஒரு மனிதர், மத வெறி பிடித்த ஒரு மிருகம் என்பதை பி.பி.சி அம்பலப்படுத்தி உள்ளது.






கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் நினைவில் உள்ளாரா?

அவரும் அவரது இரண்டு மகன்களும்  எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நினைவில் உள்ளதா? பஜ்ரங் தள் என்ற ஆர்.எஸ்.எஸ் ஸின் அடியாள் பிரிவுதான் அந்த அராஜகக் கொலைகளை நிகழ்த்தியது என்பதும் நினைவில் உள்ளதா?

இந்தியாவை உலக அரங்கில் தலை குனிய வைத்த அந்த கொடூரக் கொலையை நிகழ்த்திய பஜ்ரங் தள் அமைப்பின் அன்றைய ஒரிஸா மாநிலத் தலைவராகவும் நேரடியாக அக்கொலையைச் செய்த தாராசிங்கின் வழிகாட்டியுமாக இருந்ததும் யார் தெரியுமா?

இதோ இப்போது
சைக்கிளில் பயணிக்கும் எளியவராகச் சொல்லப்படுகிற
மோடியின் புதிய மந்திரி
பிரதாப் சந்திர சாரங்கிதான்.

அந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டதால் தலை மறைவாக இருந்தவர் அவர்.

அது மட்டுமல்ல, 2001 ல் ஒடிஷா மாநில சட்டப் பேரவையை தாக்கிய கலவர வழக்கிலும் பிரதான குற்றவாளி இந்த மனிதர்தான்.

சமூக ஊடகங்களால் ஒரு குற்றவாளியை ஒரு குற்றவாளியை புனிதன் போல சித்தரிக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் இந்த சாரங்கி.

வெடிகுண்டு சாமியாருக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை என்று காலையில் மோடிக்கு நன்றி சொல்லியிருந்தேன். இப்போதுதான் தெரிகிறது சீனியாரிட்டி அடிப்படையில் சாமியாருக்குப் பதிலாக சாரங்கிக்கு கொடுத்திருக்கிறார் என்று.

இவருக்கெல்லாம் மந்திரி பதவி கொடுக்கலைன்னா வேறு யாருக்கு மோடியின் மந்திரியாகும் அருகதை இருக்கு என்று நீங்களும் நினைக்கிறீர்கள் அல்லவா!

ஒடிஷா மாநில முதல்வர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. மோடியின் ஆச்சர்யத்தை பார்க்கலாம் என்று கோடியாக்கள் சொல்கின்றனர். ஒருவேளை சாரங்கிக்கு முதல்வர் பதவி கொடுப்பாங்களோ?

அதிர்ச்சியோ,ஆச்சர்யமோ அவசியமில்லை.

அதான் பாரதி எழுதிட்டாரே!

பேயரசு ஆட்சி செய்தால்  பிணம் தின்னும் சாத்திரங்கள்

No comments:

Post a Comment