Thursday, June 6, 2024

மோடியை கைவிட்ட ராம் லல்லா

 


மக்களவைத் தேர்தலில் மிகச்சிறப்பான, மகிழ்ச்சியான ஒரு முடிவு உத்தரப் பிரதேச மாநிலம் ஃபைஸாபாத் தொகுதி முடிவுதான்.

இந்துக்களுக்கு மத உணர்வுகளை தூண்டி, இல்லையில்லை மத வெறியூட்டி தன் பக்கம் ஈர்க்க பாஜக பயன்படுத்திய முக்கியமான விஷயம் அயோத்தி ராமர் கோயில்தான். பாபர் மசூதியை இடிக்க ரத்த யாத்திரை போனார்கள். பின்பு பாபர் மசூதியை இடிக்கவும் செய்தார்கள்.

அனைத்து நீதிமன்றங்களும் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது. பாபர் மசூதி இடிப்பு குற்ற வழக்கிலிருந்தும் தப்பினார்கள். மசூதி இருந்த இடமும் அவர்களுக்கே தரப்பட்டது.

ராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்லி போன தேர்தல் வரை ஓட்டு கேட்டார்கள். இந்த முறை ராமர் கோயில் கட்டிவிட்டோம் என்று சொல்லி ஓட்டு கேட்டார்கள்.

ஆனால்

ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி ஃபைஸாபாத் தொகுதியில் உள்ளது. அந்த தொகுதியில் பாஜக தோற்று சம்ஜ்வாடி கட்சியின் வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வென்று விட்டார்.

ராமர் கோயிலை வைத்து செய்த அரசியல் அயோத்தியிலேயே எடுபடவில்லை என்பதைத்தான் இது உணர்த்துகிறது.

அயோத்தி மக்களின் தேவை கோயில் அல்ல, தங்களின் வாழ்வியல் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதுதான்.

அதனால்தான் அங்கே சமஜ்வாடி பெருமளவு வென்றுள்ளது. புல்டோசர் ராஜாவிற்கு பிரேக் போட்டு விட்டார்கள்.

போன தேர்தலின் போது கங்கை தன் கனவில் சொன்னதால் வாரணாசியில் போட்டிட்டதாக கதை விட்டார். அவங்க கட்சிக்கு இந்த முறை ஓட்டு போடாதீங்கன்னு குழந்தை ராமர் உபி மாநில மக்களின் கனவில் சென்று சொல்லியிருப்பாரோ! தன்னை வைத்து அரசியல் செய்வதை அவரும் எத்தனை நாள்தான் சகித்துக் கொள்வார்!

பிகு : அயோத்தியில் தோன்றிய  வெறுப்பிற்கு காரணம் என்னவென்ற ஒரு தகவலை கீழே படியுங்கள்.


 

அயோத்தி தோல்வி காரணமாக அம்மக்கள் மீது எப்படி வெறுப்பு கொட்டப் படுகிறது என்பதை இந்த பதிவில் படியுங்கள்.

 


No comments:

Post a Comment