Monday, June 10, 2024

மோடியின் மயிலிறகு மாலைக்கு ஜெயில்

 


கீழேயுள்ள படத்தை பாருங்கள். மோடிக்காக மயிலிறகில் மாலை, கிரீடம், செங்கோல் எல்லாம் தயார் செய்து அனுப்பியிருக்கிறார்கள்.


 

இதில் என்ன செய்தி என்று கேட்கிறீர்களா?

 ஒரு ஆண் மயிலின் அனைத்து தோகைகளும் இல்லாமல் இந்த மாலையை தயார் செய்திருக்க முடியாது.

 அதனால் என்ன? ஒரு மயிலை பிடித்து அடித்து இறகுகளை பிடுங்கி இருப்பார்கள். இதெல்லாம் ஒரு செய்தின்னு பதிவெழுத வந்து விட்டாயா என்ற உங்கள் குரங்குக்குளியல் (மனதின் குரல்) எனக்கு கேட்டு விட்டது.

 இந்திய கானுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972 ன் படி மயிலை கொல்வதோ அல்லது அதன் இறகுகளை பிடுங்குவதோ குற்றச்செயல். ஏழாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கலாம், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

 மயில் தன் இறகை உதிர்த்தால் அதை வேண்டுமானால் பொறுக்கிக் கொள்ளலாம். ஆனால் பிடுங்குவது தவறு. சட்ட விரோதம்.

 மோடிக்காக தயார் செய்யப்பட்ட மயிலிறகு மாலையில் உள்ள இறகுகளைப் பார்த்தால் புதிதான இறகுகளாக தெரிகிறது. கொன்று பிடுங்கினார்களா அல்லது கொல்லாமல் பிடுங்கினார்களா என்று தெரியவில்லை.

 தமிழ்நாட்டு அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாலையை தயாரித்தவர்களையும்  அணிந்து கொண்டவர்களையும் கைது செய்ய வேண்டும்.

 இப்போது மோடி அணியவில்லை என்று சிலர் சால்ஜாப்பு சொல்லலாம். ஆனால் ஹைதராபாத்தில் ராமானுஜர் கோயில் திறப்பு விழாவிற்கு சென்ற போது அவர் மயிலிறகு மாலையோடுதான் போஸ் கொடுத்தார்.

 


ஆகவே அவரை …………………

 

No comments:

Post a Comment