Friday, June 28, 2024

அவங்க அப்பா பெயரெல்லாம் என்ன ஆட்டுக்காரா?

 


என் அப்பாவின் பெயர் கருணாநிதி என்றிருந்தால் எனக்கு   முதலமைச்சர் பதவி கிடைத்திருக்கும், என் அப்பாவின்                                                                              பெயர்  குப்புசாமி  என்பதால்தான்  கிடைக்கவில்லை என்று புலம்பிய ஆட்டுக்காரனே!

 ஜெய்சங்கரும் நிர்மலா சீத்தாராமனும் கடந்த மக்களவை தேர்தலிலும் சரி, தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் சரி, போட்டியிடவில்லை.

 ஆனாலும் அவர்கள் முன்பும்  அமைச்சர்களானார்கள். இப்போதும் அவர்கள் அமைச்சர்களாகி உள்ளனர்.

 தேர்தலில் போட்டியிடாமலேயே அவர்கள் இருவருக்கும் அமைச்சர் பொறுப்பு தங்கத் தட்டில் வைத்து கொடுக்கப்படுவதற்கு அவர்களின் அப்பாவின் பெயர்தான் காரணமாக இருக்கும். இல்லையா ஆட்டுக்காரா?

 அந்த பெயர்கள் என்னவென்று தெரிந்தால் சொல்லேன். . .

 பிகு: ரொம்ப நாள் முன்னாடியே எழுதினதுதான். வேஸ்ட் ஆகக்கூடாதுன்னு இன்றைக்கு பதிவு செய்து விட்டேன் . . .

Thursday, June 27, 2024

நீட் – நடத்துவது ??????

 


பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் அழுதால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என்பதுதான் “நீட்” தேர்வு வேண்டாம் என்பதற்கான முக்கியக் காரணம்.

இப்போது என்ன நிலைமை?

 நீட் பயிற்சி மையங்கள் இப்போது தரகு மையங்களாக மாறி விட்டது. “நீட்” மூலம் தரம் உறுதி செய்யப்படுகிறது என்பதெல்லாம் கட்டுக்கதை ஆகி பணம் உள்ளவர்களுக்கு சீட் வாங்கித்தரும் தரகர்களாக பயிற்சி மையங்களும் நீட் தேர்வின் நிர்வாகிகளும் மாறியுள்ளனர்.

நீட் அமைப்பின் தலைமை நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார்.

 பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 குற்றச்சாட்டுக்களும் ஆதாரங்களும் பல மாநிலங்களிலிருந்தும் குவியத் தொடங்குகிறது. கைதுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 “நீட்” தேர்வை  ஒட்டு மொத்தமாக நீக்க வேண்டும் என்பதற்கு இவற்றை விட இன்னும் ஒரு முக்கியமான காரணம் புதிதாக கிடைத்துள்ளது.

 ஆம்.

 நீட்டை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி என்ன மாதிரியான அமைப்பு?

 அரசின் துறையா?

அரசு நிறுவனமா?

 இல்லை, இல்லை, இல்லை.

 


மன மகிழ் மன்றம், குடியிருப்போர் அமைப்பு (பதிவு செய்யப்படாத டுபாக்கூர் சங்கங்களை குறிப்பிடவில்லை) போல சாதாரண “சொஸைட்டி”.

 ஆமாம்.

 சொஸைட்டி சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட சாதாரண சொஸைட்டி.

 எந்த சட்டத்தின் படியும் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. அதனால் யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டிய பொறுப்பும் இல்லாத அமைப்பு. இதனை நம்பி பல லட்சம் மாணவ/மாணவியரின் எதிர்காலத்தை ஒப்படைத்திருப்பது கொடுமையானது. பி.எம் கேர்ஸ் நிதிக்கு முன்பாகவே மோடி அரசு செய்த மோசடி நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸியை சொஸைட்டி என்ற அளவிலேயே வைத்துக் கொண்டது. அதிலிருந்தே தெரிகிறது மோசடி செய்யும் நோக்கில்தான் மோடி அப்படி உருவாக்கினார் என்பது.

 அதனால் உரக்கச் சொல்வோம்.

 “நீட்” தேர்வை அகற்று . . .

”நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி”யை கலைத்திடு

Wednesday, June 26, 2024

ஆட்டுக்காரா, பின் என்ன எழவிற்கு?

 


ஆட்டுக்காரன் உதிர்த்த ஒரு முத்து கீழே . . .


தன் பெயருக்குப் பின் எம்.பி, எம்.எல்.ஏ பட்டம் தேவையில்லை என்றால் பின் என்ன எழவிற்காக 2021 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சியிலும் 2024 மக்களவைத் தேர்தலில் கோவையிலும் நின்று தோற்றுப் போனாராம்?

எந்த காலத்திலும் அப்படி அழகு பார்க்கும் வாய்ப்பை தமிழ்நாடு தராது என்பதால் திராட்சை கிட்டா நரியாக வஜனம் பேசுது தெய்வக்குழந்தையின் தெய்வ வாரிசு ...


Tuesday, June 25, 2024

மழையில் நனைகிறார் அயோத்தி ராமர் . . .

 




உத்திர பிரதேச மாநிலத்தில் பருவ மழை தொடங்கி விட்டது.

நல்ல விஷயம்தானே என்றுதானே நினைக்கிறீர்கள்!

புதிதாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில் ராமர் விக்கிரகத்திற்குத்தான் நல்ல செய்தியில்லை.

ஆமாம்.

கோயில் கர்ப்பகிருகத்தின் மேல் கூறை மழையில் ஒழுகுகிறது. கோயிலெங்கும் சுவர்களில் தண்ணீர் கசிகிறது.

"எத்தனை பொறியாளர்கள் இருந்து என்ன பயன்?இப்படி கோயில் கட்டுமானம் மழைக்கு தாங்கவில்லையே!"

இப்படி புலம்பியிருப்பவர் அயோத்தி கோயிலின் தலைமைப் பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ்.

பாவம்! அவருக்கு தெரியவில்லை.

மோடி கைய வச்சா அது ராங்காதான் போகுமென்று . . . 

Monday, June 24, 2024

ஒத்த செருப்பு உருவாக்கிய . . .

 


அபூர்வப் பிறவி மீது வாரணாசியில் வீசப்பட்ட ஒத்த செருப்பு உருவாக்கிய கார்ட்டூன்கள்  கீழே . . .

 





ஒத்த செருப்பு என்ற பெயரில் தமிழ்நாடு  திரைப்படமே அளித்தது குறிப்பிடத்தக்கது.

மணல் கொள்ளையில் ஆட்டுக்காரன் பங்கு எவ்வளவு?

 


பதிவின் தலைப்பிற்கும் படத்திற்கும் காரணம் ஆட்டுக்காரனின் நெருங்கிய சகா திருச்சி சூர்யாதான். வரும் பணத்தில் ஆட்டுக்காரனுக்கு எவ்வளவு செல்கிறது என்பது மட்டுமே என் கேள்வி.

இதை விட இன்னொரு ஸ்பெசல் ஐடம் வேறு கொடுத்துள்ளார். அது பிறகு . . .


Saturday, June 22, 2024

Friday, June 21, 2024

அப்படியென்ன சமூகத்தரம் பாழானது?

 


நேற்று முன் தினம் எழுதிய "நீட் - எதிர்ப்புத் தீ பரவட்டும்  என்ற பதிவை முகநூல் நீக்கி விட்டது.


இந்த பதிவால் அப்படி என்ன முகநூலின் சமூகத் தரம் பாழானது என்று தெரியவில்லை. 

சங்கிகள் அனுதினமும் செய்யும் நச்சுப் பிரச்சாரத்தால் பாழாகாத சமூகத் தரத்திற்கு நீட் எதிர்ப்பு மட்டும் பிரச்சினையாகிறது.

சமூகத் தரம் என்பதை விட மிகவும் கடுப்பேற்றியது வேறு ஒன்று.

லைக்கிற்கும் ஷேருக்கும் தவறான பதிவு போடுகிறாய் என்று சொல்கிறது.

அடேய் மார்க், இந்த லைக்கையும் ஷேரையும் வச்சி என்னய்யா செய்யறது? ஒரு ரூபாய் கடலை மிட்டாய்க்குக் கூட பிரயோசனம் கிடையாது.

Thursday, June 20, 2024

கள்ளக்குறிச்சி - கூட்டுக்களவாணிகளை விடக்கூடாது

 


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் துயரத்தையும் அளிக்கிறது.

வருடத்திற்கு ஒரு முறை இது போன்ற சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கள்ளச்சாராய விற்பனை ஒன்றும் திருட்டுத்தனமாக நடைபெறுவதில்லை. எங்கே யார் காய்ச்சி, யார் விற்கிறார்கள் என்பதெல்லாம் போலீஸ், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள், நிர்வாகத்தை நடத்தும் அதிகாரிகள் என  அதிகார வட்டத்தில் உள்ள அனைவருக்கும் நிச்சயம் தெரியும்.

ஆனால் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள், காரணம் எளிதானது. கள்ளச்சாராய வியாபாரிகள் மூலம் வரும் காசு வாயை மூட வைக்கும்.

இப்போது கள்ளக்குறிச்சி மரணங்களுக்கு காரணமான குற்றவாளிகள், அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய கூட்டுக்களவாணிகள் அத்தனை பேரையும் கைது செய்து கடுமையான தண்டனை தர வேண்டும். 

அப்படிச் செய்தால்தான் இனி இது போன்றதொரு துயரம் நடக்காது.


இதுதாண்டா பாஜக சம நீதி

 

என்னத்தான் பாஜக உட்கட்சி விவகாரமென்றாலும் கருத்து சொல்லாமல் இருக்க முடியவில்லை.




டமில்மூசிக்குக்கு ஆதரவாக ஆட்டுக்காரனுக்கு எதிராக பேசியதால் குண்டாஸ் புகழ் கல்யாண்ராமன் நீக்கம்.

ஆட்டுக்காரனுக்கு ஆதரவாக டமில்மூசிக்குக்கு எதிராக பேசிய திருச்சி சூர்யாவும் நீக்கம்.

ஒரே சமயத்தில் இருவரை நீக்கி சம நீதியை நிலை நிறுத்தியது பாஜக.

ஆமாம் இன்னும் எத்தனை நாள் ஆட்டுக்காரனும் திருச்சி சூர்யாவும் செத்து செத்து விளையாடுவாங்க?

Wednesday, June 19, 2024

"கவச்” எங்கேய்யா மோடி?

 


ரயில் விபத்துக்களை தவிர்க்க “கவச்” என்றொரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து ரயில்களிலும் பொருத்தப்பட்டு விட்டது என்று சில வருடங்களுக்கு முன்பு ஆரவாரமாக மோடியால் அறிவிக்கப்பட்டது.

 20 சதவிகித ரயில்களில் கூட “கவச்” பொருத்தப்படவில்லை என்ற மோசமான உண்மை, கடந்த வருடம் ஒடிஷாவில் 200 உயிர்களைக் குடித்த விபத்தின் போதுதான் தெரிய வந்தது.

 ஒரு கொடிய விபத்திற்குப் பிறகாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் எதுவும் நடக்கவில்லை என்பது இன்னொரு விபத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

 இந்த ஒரு வருடத்தில் என்னதான் நடந்துள்ளது?

 வந்தே பாரத் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை நடத்தும் ரயில்களை அதிகரித்துள்ளார்கள், அதற்கு கொடியசைக்க தெய்வக் குழந்தை ஊர் ஊராகப் போனது.

 ஆறே கால் லட்ச ரூபாய் செலவில் மோடியின் மூஞ்சியோடு புகைப்படம் எடுக்க செல்ஃபி பாயிண்ட் ஸ்டேஷன் ஸ்டேஷனாக அமைக்கப்பட்டது.

 சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் வெட்டப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டது.

 சீனியர் சிட்டிசன்களுக்கான  சலுகை வெட்டப்பட்டது தொடர்கிறது.

 ரயில்வே நிலத்தை விற்கும் முயற்சி, தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என்று ரயில்வேவிற்கு மூடு விழா காணத்தான் ஆசைப்படுகிறது மோடி அரசு.

 இதெல்லாம் செய்யத் தெரிந்த மத்திய அரசுக்கு விபத்தை தவிர்க்க மட்டும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

 காரணம்?

 திமிர், அலட்சியம், பொறுப்பின்மை, இத்யாதி, இத்யாதி . . .

 இந்த எழவெடுத்த ஆட்சியில் இன்னும் என்னென்ன நடக்குமோ?

 

 

 

 

 

 

 

நீட் - எதிர்ப்புத் தீ பரவட்டும்

 


தமிழ்நாடு மட்டும் எதிர்த்துக் கொண்டிருந்த நீட் தேர்வுக்கு எதிரான குரல் மற்ற மாநிலங்களிலும் இப்போது பரவத் தொடங்கி விட்டது.

உ.பி. மஹாராஷ்டிரா, குஜராத், பீகார் மாநிலங்களிலும் எதிர்ப்பு தொடங்கி விட்டது.

பயிற்சி மையங்கள் என்ற பெயரில் செயல்படும் தரகு மையங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வசதி கொண்ட பெரும் செல்வந்தர்கள் வீட்டு வாரிசுகள் மட்டுமே மருத்துவக் கல்வி பயில முடியும் என்ற நிலையை உருவாக்கியதுதான் நீட் தேர்வின் சாதனை.

பயிற்சி மைய தரகர்களும் நீட் தேர்வு ஆணையமும் இணைந்து செய்யும் முறைகேடுகள் இப்போதுதான் வெளி வரத் தொடங்கியுள்ளது. 1563 என்பதெல்லாம் சொற்ப எண்ணிக்கை. கடலின் அடியே மூழ்கியிருக்கும் பெரும் பனிப்பாறையின் நுனிதான் குஜராத் முறைகேடு.

.001 தவறு கூட இருக்கக்கூடாது என்று சொல்கிறது உச்ச நீதிமன்றம். நீட் தேர்வே முறைகேடுகளின் மையமாகிப் போனதால் அதற்கு வாய்ப்பில்லை. 

எனவே ஒரே தீர்வு

நீட் தேர்வை அகற்றுவதுதான்.

அந்த கோரிக்கையை வலியுறுத்தும் மக்கள் குரல் வலுக்கட்டும்.

எதிர்ப்புத் தீ பரவட்டும் . . .

Monday, June 17, 2024

குனிந்த தலைகளும் நிமிராத வால்களும்??


பொதுத்தேர்தலில் மோடிக்கு கடிவாளம் போடப்பட்டு விட்டது. ஆனால் அது மற்ற சங்கிகளுக்கு இன்னும் புரியவில்லை. அதனால்தான் பழைய ஞாபகத்தில் இன்னும் மிரட்டுகிறார்கள்.

 


பழைய புளிச்சுப் போன உதாரணம்தான். வேறு வழியில்லை.

 நாய் வால் நிமிராது. 

அதனால் நறுக்கி விட்டால் ஆட்டாது.

  

அவரு அவங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு

 

திருச்சூரில் உள்ள ஒரு சர்ச்சுக்கு தங்கத்தில் ஜபமாலை செய்து தருகிறார். 

இந்திரா காந்திதான் இந்தியாவின் அன்னை என்று சொல்கிறார்.

இ.கே.நயனாரும் கே.கருணாகரனும்தான் என் குருமார்கள் என்று வேறு சொல்கிறார்.

எல்லாமே நடிப்பாக இருந்தாலும் கூட பாஜகவால் தங்களின் திருசூர் எம்.பி சுரேஷ் கோபி சொல்வதை, செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவங்களுக்கு இவரு சரிப்பட்டு வர மாட்டாரு . . .

Sunday, June 16, 2024

மணிப்பூர் நாட்டாமை மாற்று உன் தீர்ப்பை . . .

 


ஆலமரத்தடியோ, செம்போ இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் ஏழு வருடம் யாரும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது என்ற தீர்ப்பு மட்டும் சொல்லப்பட்டுள்ளது.

எங்கே?

அதான் தலைப்பிலேயே இருக்கிறதே!



மோடி செல்ல அஞ்சுகிற மணிப்பூரில்தான் . . .

யாருக்கு?

ஆல்பிரட் கன்னாகம் ஆர்தர்..

யார் இவர்?

அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி அவர்.

என்ன தவறு செய்தார்?

ஐக்கிய நாகா மக்கள் கூட்டமைப்பு என்ற மணிப்பூரில் உள்ள 21 நாகா இனங்களின் பஞ்சாயத்து ஆல்பிரட் ஆர்த்தரை அனைத்து நாகா அமைப்புக்களும் நாகா குடும்பங்களும் ஏழாண்டுகள் சமூக புறக்கணிப்பு செய்வது என்று அறிவித்தது.

நாகா மக்கள் முன்னணி என்ற கட்சியின் வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வென்றதுதான் அவர் செய்த தவறு.

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் முயற்சி தொடங்கி விட்டது.  


Friday, June 14, 2024

சங்கி மானஸ்தன் அடிச்சான்யா பல்டி

 


ஆட்டுக்காரனின் அல்லக்கையும் பாஜக ஐ.டி செல் என்றழைக்கப்படும் வார் ரூமின் பொறுப்பாளர், அமித்ஷா ,டமில் ம்யூசிக்கை மிரட்டியதும் போட்ட பதிவு கீழே உள்ளது.


டமில்மூசிக்கை ஆட்டுக்காரன் சந்தித்து சமரச உடன்பாடு எட்டப்பட்டதும் அந்த அல்லக்கை பழைய பதிவை நீக்கி விட்டு போட்ட புதிய பதிவு கீழே.


இந்த சங்கிகளுக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை என்று எதுவும் கிடையாது என்பதை ஆட்டுக்காரனும் டமில்ம்சூக்கும் மட்டும் நிரூபிக்கவில்லை, அவர்களின் அல்லக்கைகளும் கூட . . .

படிச்சிட்டு சிரிக்கக் கூடாது.

 


கீழேயுள்ள பதிவை ஆட்டுக்காரனின் ஒரு அல்லக்கையின் ட்விட்டர் பக்கத்தில் பார்த்தேன். அதை படித்து முடித்ததும் சிரிக்கக் கூடாது.


என்ன? சிரிப்பை அடக்க முடியலையா?

பில்ட் அப் கொடுத்து கொடுத்து அடி வாங்கிய பின்பும் திருந்த மாட்டாங்க போல!

என்ன செய்ய நாய்களின் வால் எப்போதுமே நிமிராதே!

Thursday, June 13, 2024

அயோத்தி - அதுக்குள்ளயேவா????

 


கீழே உள்ள செய்தியை படியுங்கள்


உலகிலேயே மிக அதிகமான வசூலை அள்ளித் தரும் வாடிகனை மிஞ்சி விட்டது. அயோத்தியிலிருந்து வரும் வருமானம் கொண்டு மொட்டைச் சாமியார் அந்த மாநிலத்தையே தலை கீழாக மாற்றி சிங்கப்பூர் ரேஞ்சிற்கு மாற்றப் போகிறார் என்றெல்லாம் சொன்னார்களே, அதெல்லாம் வெறும் கானல் நீர்தானா?

பாஜகவை உள்ளூர் மக்கள் தேர்தலில் கைவிட்டால் வெளியூர் பக்தர்களும் கைவிடுகின்றனரே!

என்னை வைத்து அரசியல் செய்யாதே என்று ராம் லல்லா எச்சரிக்கிறாரோ?

கோவையில் ஆட்டுக்காரனை என்னய்யா செஞ்சீங்க?

 


ஆட்டுக்காரனுக்கு கோவை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

ஏன் என்று கேட்கிறீர்களா?

கீழேயுள்ள செய்தியை படியுங்கள் . . .


இந்த அறிக்கையே டமில் ம்யூசிக்கை கட்டுப்படுத்தும் முயற்சி என்று தெரிகிறது. அது அவங்க கட்சி பிரச்சினை. நமக்கு அவசியமில்லை.

வாழ்க்கையில் எப்போதும் கோவை விமான நிலையத்தில் பேட்டி இல்லை என்று மனம் நொந்து சொல்லும் அளவிற்கு கோவை விமான நிலையத்தில் ஆட்டுக்காரனை என்னய்யா செஞ்சீங்க? சம்பவத்தின் வீடியோ. கீடியோ?

சரி, இந்த முடிவை ஆட்டுக்காரன் எங்கே சொன்னான் தெரியுமா?

கோவை விமான நிலையத்தில் 😁😁😁😁😁


Wednesday, June 12, 2024

தமிழிசையை அமித்து மிரட்டுவது ஏன்?

 


கீழேயுள்ள காணொளியை பார்த்து விடுங்கள். ஏற்கனவே பார்த்திருந்தாலும் பரவாயில்லை, இன்னும் ஒரு முறை பார்க்கலாம். தவறில்லை.


அமித்ஷா ஏன் தமிழிசையை மிரட்டுகிறார் என்பது நமக்கு தேவையில்லாத விஷயம். அது அவங்க உட்கட்சிப் பிரச்சினை. 

அமித்ஷா முகத்தின் கொடூரத்தை பார்த்தீர்கள் அல்லவா!

ஒரு பொது மேடையில் ஆளுனராக இருந்த ஒரு பெண்ணை இவ்வளவு கொடூரமாக மிரட்டுகிறாரே, அவர் மற்றவர் கண்ணில் படாமல் என்னென்ன கொடிய செயல்களை செய்வார்! செய்திருப்பார்! இந்த கிரிமினல் உள்துறை அமைச்சர்!

Tuesday, June 11, 2024

நாற்பதினால்தான் இதெல்லாம் சாத்தியம் . .

 


முந்தையதொரு பதிவில் சொல்லியிருந்தது போல நாற்பது எம்.பிக் களால் என்ன பயன் என்பது பற்றி கல்வியாளர் தோழர் இரா.எட்வின் எழுதியிருந்த பதிவை பகிர்ந்து கொள்கிறேன்

40/40 எடுத்து என்ன கிழித்துவிடப் போகிறீர்கள் என்ற கேள்வி பரவலாக வைக்கப்படுகிறது

இந்தக் கேள்வியைத்தான் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டு மக்களிடத்திலே கொண்டுபோகப் போகிறார்கள்

இதன் மூலம் எங்களால் மந்திரியாக்கக்கூட முடியவில்லை. எங்களுக்கு வாய்ப்புத் தந்தால்தானே அமைச்சராக்கி உங்களுக்கு நல்லது செய்ய முடியும்

என்ற நேரேஷனைத்தான் அவர்கள் ஆரம்பிக்கிறார்கள்

வேறொன்றும் இல்லை

முதலில் நாங்கள் நாற்பதல்ல

இருநூற்றி முப்பத்தி சொச்சம் நாங்கள்

இந்த எண் என்ன செய்திருக்கிறது என்றால்

என்ன சொன்னீர்கள்?

நானூறு கொடுங்கள்

ஒரே நாடாக்குகிறோம் என்றீர்கள்

அதை எங்கள் எண் உடைத்திருக்கிறது

அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றத் துடித்தீர்கள்

இப்போது அதுகுறித்துப் பேசிப் பாருங்கள்

சந்திரபாபு நாயுடு சாரே பதில் சொல்வார்

நாட்டின் பெயரை மாற்றுவோம் என்றீர்கள்

எங்கே முயற்சி செய்யுங்கள்

இஸ்லாமியர்களை அடக்குவோம் என்றீர்கள்

பாங்குச் சத்தமே இல்லாமல் செய்வோம் என்றார் ஒரு முதல்வர்

தைரியம் இருந்தால் இப்போது அப்படிப் பேசிப் பாருங்கள்

மதத்தின் பெயரால் இட ஒதுக்கீடு கூடாது என்றீர்கள்

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என்று தேர்தல் அறிக்கையில் சொன்னவர் கருணை இருக்கும்வரைதான் நீங்கள் பதவியில்

பிரதமர், அது இது எல்லாம் எங்களுக்குத் தேவை  இல்லை

எங்கள் எண்ணத்திற்கு மாறாக  நீங்கள் ஆசைப் பட்டதை செய்ய முடியாமா உங்களால்

 இப்போது சொல்லுங்கள்

 வென்றது நீங்களா? நாங்களா?