Thursday, May 30, 2024

பு.மா ஆஜானை காப்பியடித்த மோடி

 


யார் சொன்னார் என்ற தகவல் இல்லாமல் “திரைப்படம் வந்த பின்னரே காந்தியை உலகுக்கு தெரியும்” என்ற அற்புதமான கருத்தைத்தான் முதலில் பார்த்தேன்.

இது போன்ற அரிய கருத்துக்களை வெளியிடும் ஆற்றல் நம் புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகனுக்கு மட்டுமே உரியதல்லவா என்று அவர் பக்கம் போய் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். பிறகு இன்னொன்றும் தோன்றியது. ஜெமோ அப்படியெல்லாம் தன்னைத் தவிர இன்னொருவருக்கு அதிலும் வெளிநாட்டு கிறித்துவர் ரிச்சர்ட் அட்டன்பரோவுக்கெல்லாம் பெருமை தர மாட்டாரே என்பது நினைவுக்கு வந்தது. பிறகுதான் தெரிந்தது அது மோடி சொன்னது என்று.

மோடியின் கருத்து பற்றி என்ன சொல்ல? அந்த முட்டாளுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று சென்று விட முடியுமா? கோட்சேவை கும்பிடும் மோடி எனும் ஜந்து மகாத்மா காந்தியினை இழிவு படுத்துவது இது முதல் முறையல்ல. மகாத்மா காந்திடின் சிறப்பு என்று ஏராளமாக இருக்க, தூய்மை என்ற ஒன்றை மட்டும் வைத்து சொச்ச பாரத் என்று விளக்குமாறோடு ஒரு நாள் போட்டோஷூட் முடித்த ஆள்தானே இது!

இந்த முறை மகாத்மாவை இழிவு படுத்த மோடி கையாண்ட டெக்னிக் காப்பியடித்தது. புளிச்ச மாவு ஜெயமோகனிடம் காப்பியடித்தது.

“பின் தொடரும் நிழலின் குரல்” என்ற அந்தாளின் கம்யூனிசத்தின் மீது வெறுப்பை கக்கும் நாவலைப் படித்த பின்பே “லெனின் என்று ஒருவர் இருந்தார்” என்று தனது வாசகர்கள் அறிந்து கொண்டார்கள் என தடம் இதழிற்கு அளித்த நேர்காணலில் பெருமையாக சொல்லிக் கொண்டார்.

லெனின் யாரென்று தெரியாத கூமுட்டைகள்தான் அவரது வாசகர்கள் என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஆஜோனுக்கோ அப்படிப்பட்ட கூமுட்டைகள் வாசகர்களாக இருப்பதுதான் பெருமை.

மோடி தன் பாணியை காப்பியடித்து விட்டார் என்று ஆஜான் எப்போது எண்பது பக்க கட்டுரை எழுதப் போகிறாரோ?

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்…

மோடி, ஜெயமோகன் போன்ற சில்லறைகளால் மகாத்மா காந்தியின் புகழையோ, புரட்சித்தலைவர் தோழர் லெனினின் புகழையோ சிறுமைப் படுத்திட முடியாது. இந்த சில்லறைகள் நெருங்க முடியாத சிகரத்தின் உச்சியில் இருப்பவர்கள் அந்த மகத்தான இரு தலைவர்களும் . . .

 

No comments:

Post a Comment