Sunday, September 30, 2018

சபரி மலை - சம்பிரதாயங்கள் மாறலையா?




அனைத்து வயது பெண்களையும் சபரி மலையில் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் உருப்படியான தீர்ப்பொன்றை அளித்துள்ளது.

அதை விமர்சிக்கிற பலர் முன்வைக்கிற ஒரே வாதம் “சம்பிரதாயங்களை மாற்றக் கூடாது”

சபரிமலைக்கு நான் சென்றது கிடையாது. ஆனால் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்பவர்களை அறிந்துள்ளேன்.

கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து கொண்டு நாற்பத்தி எட்டு நாட்கள் விரதமிருந்து பெரும் பகுதி தூரத்தை நடந்து சென்றவர்களை அந்த காலத்தில் அறிந்திருக்கிறேன்.

இப்போது அப்படியெல்லாம் அந்த சம்பிரதாயப்படித்தான் செல்கிறார்களா?

மாலையில் மாலை போட்டுக் கொண்டு இரவு புறப்பட்டு விடுகிறார்கள். “பெரிய பாதை” ,”சிறிய பாதை” என்ற வழிகளில் எல்லாம் எத்தனை பேர் செல்கிறார்கள்? பயணத்தின் தூரமும் பயணத்தின் சிரமமும் வெகுவாகக் குறைந்து விட்டதே! இதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர்கள் சொல்லும் சம்பிரதாயம் காணாமல் போய் விட்டதல்லவா?

மண்டல பூஜை காலத்திலும் மகர விளக்கு காலத்திலும் மட்டும்தான் சபரி மலை திறந்திருக்கும் என்பார்கள். பின்பு விஷூவின் போது திறக்கப்பட்டது. இப்போது ஒவ்வொரு மாதமும் திறக்கப்படும் என்று சொல்கிறார்கள்.

சபரிமலை கோயில் பிரசாதமான அரவணைப் பாயச தயாரிப்பு, பேக்கிங் ஆகியவற்றில் மாற்றமே கிடையாதா?

வசதிக்காக பல சம்பிரதாயங்கள் கைவிடப்படுகிற வேளையில் பாலின சமத்துவம் என்ற உரிமைக்காக  இந்த சம்பிரதாயம் கைவிடப்படுவதில் எந்த தவறும் இல்லை.

மேலும் ஐயப்பனின் பிரம்மச்சர்யம் பாதிக்கப்படும் என்று அபத்தமாக பேசும் ஒரு சிலரிடம் சின்னதாக ஒரு கேள்வி

ஐயப்பன் அவ்வளவு பலவீனமானவரா என்ன?

கடவுளை நம்புபவர்கள்தான் கடவுளை இழிவுபடுத்துகின்றனர், மறுப்பாளர்கள் அல்ல . . .

5 comments:

  1. Acceptable and appreciable arguments.as u asked everything has been changing,why not this?

    ReplyDelete
  2. இதன் பெயர் சம்பிரதாயம் அல்ல. பெண்களை இழிவு படுத்துவது. எம் தாயையும், மனைவியையும் மகளையும் அவமதிப்பது.

    ReplyDelete
  3. ஆண்களுக்கு என்று தனியாக கோயில் இருக்ககூடாதா ?
    பெண்களுக்கு என்று தனியாக பல அம்மன் கோயில்களுக்கும் , பகவதி கோயில்களுக்கும் உண்டே

    ReplyDelete
  4. வரவர உச்சநீதிமன்றம் எல்லாவற்றிலும் தலையிடுகிறது.
    கலாச்சாரம் ஆன்மீகம் குறிப்பாக ஹிந்து மத ஆலய வழிபாடுகள்
    தனி மனித ஒழுக்கம், இது நல்லதற்கல்ல . சட்டம் மத ரீதியான
    கொள்கைகளில் தலை இடுவது வருங்காலத்தில் எல்லா மதத்தினரையும்
    சங்கடப்படுத்தலாம்.முதலில் தவறும் செய்யும் அரசியல்வாதிகள்,வங்கியில்
    கடன் வாங்கி நாட்டை விட்டே ஓடுபவர்கள், குற்றம் செய்பவர்கள் இவர்களை தண்டியுங்கள்
    பிறகு மற்ற விடயங்களுக்கு வரலாம்.

    ReplyDelete
  5. இந்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில் எனக்கு ஆர்வம் இல்லை.
    காரணம் இதுவரை பல கடவுள்களிடம் சென்று அருள் பெற்று செல்வங்கள் குவித்துவந்த இந்திய பெண்களை,இனி ஐயப்பன் கோயிலுக்குள்ளும் செல்லலாம் என்று அனுமதித்து மேலும் அருளும் செல்வங்களும் பெற்று கொள்வது அவசியமா?
    இந்த தீர்ப்பை பற்றி பெண்களே தெரிவிக்கும் கருத்துகளில், மதம் சொல்லும் காலம் காலமாக நாம் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கும் உரிமை நீதிமன்றங்களுக்கு கிடையாது என்று ஆண்களின் கருத்தையே அப்படியே பெண்களை கொண்டு சொல்ல வைத்துள்ளார்கள். அது நாம் பர்தாவுடன் எங்களை நாங்களே மூடிக் கொண்டு தான் இருப்போம் என்று இஸ்லாமிய பெண்களை வைத்தே இஸ்லாமிய மதவாத ஆண்கள் சொல்ல வைத்ததையே எனக்கு நினைவுபடுத்தியது.

    //AnonymousOctober 1, 2018 at 10:09 AM
    சட்டம் மத ரீதியான கொள்கைகளில் தலை இடுவது வருங்காலத்தில் எல்லா மதத்தினரையும்
    சங்கடப்படுத்தலாம்.//

    ReplyDelete