Monday, November 16, 2015

பாரீஸ் பயங்கரவாதம் - கோழைத்தனம்



பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாதச் செயலில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்துள்ளது துயரத்தையும் கோபத்தையும் தருகிறது.

இதற்கு நாங்கள்தான் பொறுப்பு என்று ஐ.எஸ் பெருமையோடு ஒப்புக் கொண்டுள்ளது. 

மதத்தின் பெயரால் செய்யப்பட்டுள்ள இந்த பயங்கரவாதச் செயல் கடுமையான கண்டனத்திற்குரியது. கடவுளின் பெயரால் செயல்படும் இந்த இயக்கத்தை கடவுள் (!) கூட மன்னிக்க மாட்டார்.

தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்கள் ஏன் தங்களின் உண்மையான எதிரிகளோடு மோதுவதற்குப் பதிலாக அப்பாவிகளை மட்டுமே குறி வைக்கிறார்கள்? 

வடி கட்டிய கோழைத்தனத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

துயரத்தில் மூழ்கிய பிரான்ஸ் மக்களுக்கு துணை நிற்போம்.

தீவிரவாதத்தை துடைத்தெறிவோம் என்று சொல்கிற அதே நேரத்தில் அதன் ஊற்றுக்கண் எங்கேயுள்ளது என்பதையும் பார்த்து அதற்கெதிராகவும் குரல் கொடுத்திட வேண்டும்.

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண், அல் கொய்தா, தாலிபன், ஐ.எஸ் என்று எந்த இயக்கத்தை எடுத்துக் கொண்டாலும் அதனை ஊக்குவிக்கும் பணியை செய்தது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பதை மறக்க முடியாது. 

தீவிரவாதத்திற்கு எதிரான குரல் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் எழுந்திட வேண்டும்.
 

3 comments:

  1. கடவுளின் பெயரால்
    மதத்தின் பெயரால்
    கடும் கண்டனத்திற்கு உரிய செயல்
    கோழைத்தனமான செயல்தான்

    ReplyDelete
  2. முத்தங்களின் சத்தம் கேட்ட நாட்டில் வெடிச்சத்தம்...
    யுத்தங்கள் தேடி அலைந்ததால் வந்த வினை..

    ReplyDelete
  3. ஐ.எஸ் பயங்கரவாதிகளை போராளிகள் என்று அழைக்கபட வேண்டும் ஒரு அரசியல் தலைவர் சொல்லியிருக்கார். அப்படியிருக்க இந்த பயங்கரவாதச் செயலை கண்டித்த நீங்கள் பாரட்டுக்குரியவர்.

    ReplyDelete