Thursday, November 19, 2015

பொருத்தமா புளுகுங்க டவுசர் பாய்ஸ்



முக நூலில் ஒரு காவி டவுசர் பாய் போட்டிருந்த பதிவுதான் மேலே உள்ளது. அதற்கு புத்தி கெட்ட நூறு பேர் லைக்  வேறு கொடுத்திருக்கிறார்கள். 

எங்கே மக்கள் பாதிக்கப்பட்டாலும் அங்கே முன்னணியில் நிற்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. சுனாமி, தானே, என்று கண் கூடாக பார்த்திருக்கிறார்கள். 

மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றும் உத்தர்கண்டில் மோடி செய்தது போல டுபாக்கூர் காமெடியெல்லாம் என்றும் செய்தது கிடையாது. உண்டியல் குலுக்குகிற கட்சி என்பதில் எங்களுக்கு சிறுமையே கிடையாது. நாங்கள் ஒன்றும் அதானியிடமும் அதானி மனைவியிடமும் மோடி போல தலை வணங்கி நின்றது கிடையாதே!

மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதை கீழே தந்துள்ளேன். இதை அந்த அதிமேதாவிகள் புரிந்து கொள்ளட்டும். 

------------------------------------------------------------------------------------------------------
விடிய விடிய போராட்டம் நடத்தி என்ன பன்னீங்க தோழர். .

இப்படிதான் ஒரு நண்பர் தொலைபேசினார்.

நிவாரண தொகைக்கு கணக்கெடுப்பதை முறையாக்கி உள்ளோம். பல இடங்களில் விடுபட்ட கணக்கெடுப்பை மீண்டும் சேர்க்க வைத்துள்ளோம்.

பல வாய்க்கால்களை தூர்வாரி நிலங்களில் தேங்கி இருந்த தண்ணீரை போக்கியுள்ளோம்.

முக்கியமாக பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியபட்டு அருகில் அமைய உள்ள சைமா சாயக்கழிவு நிறுவனங்கள் அடைத்து வைத்திருந்த 4 கி.மீ தூரத்திற்கான வடிகால் வாய்க்காலை தோண்டி எடுத்து பக்கிம்காம் கால்வாயில் இணைத்துள்ளோம்.

இதனால் 3000 (மூவாயிரம்) ஏக்கர் நிலங்களில் இருந்த நெற்பயிர்களை பாதுகாத்துள்ளோம்.

மாதியம் 2,30 மணிக்கு துவங்கி விடியற்காலை 2,30 வரை சிதம்பரம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் மக்கள் நல கூட்டணி சார்பில் தோழர் கே.பி தலைமையில் நடந்தது. அப்போராடம் எட்டிய வெற்றி இது.

-----------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல் கட்சி நிவாரணம் செய்யக் கூடாது என்று தோழர் ஜி.ஆர் சொன்னதாக கொஞ்சமும் கூசாமல் பொய் சொல்கிற அந்த காவி டவுசர் பாய்ஸ் கவனத்திற்காக சில படங்கள் இங்கே.

எங்கள் சங்கத்தோடு இணைந்து நிவாரணப்பணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் செயல்பட்ட போது எடுத்த படங்கள். 











இது மட்டுமல்ல, இன்னும் ஒரு புகைப்படத்தையும் பாருங்கள், காவிக்கும்பலே.

பதினோரு வருடங்களுக்கு முன்பு சுனாமி தாக்கிய நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தில் தோழர் ஜி.ஆர், தோழர் கே.பி ஆகியோரும் இருக்கிறார்கள்.



ஆகவே பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்கள். 

2 comments:

  1. முகநூலும் வாட்ஸ் அப்பும் தவறான தகவலின் குவியலாக மாறி வருகிறது! வருத்தமான விஷயம்!

    ReplyDelete
  2. நாம் தான் சொல்லமறந்துவிட்டோம் தோழர்...பிந்தைய தலைமுறைக்கு உமாநாத் தெரியவில்லை..உழைப்பாளர்கள் கொஞ்சம் சுயமரியாதையுடன் இப்போது இருக்கிறார்கள் என்றால்... எரிந்த வெண்மனிச்சாம்பலும், நடத்திய தலைமறைவுப்போராட்டங்களும் ஒரு தலைமுறையினர் தெரியாமலே வளர்ந்துவிட்டார்கள் தோழர்....மூன்றுபேராய் நின்று பேசுகின்றீர்கள் சாலையில் என்ன சாதித்தீர் என்கிறவர்களுக்கு சொல்லவேண்டும்....ஊருக்கு நாம் மூன்று பேர் இல்லை என்றால் ஊரே இருக்காது என்னும் உண்மையை...

    ReplyDelete