Thursday, November 5, 2015

எங்கள் தவறுதான் மிஸ்டர் கமலஹாசன்

மும்பைக் கலவரங்களின் போது திரைக் கலைஞர்களை அணி வகுத்து அன்றைய பிரதமர் நரசிம்மராவிடம் கேள்விக்கணைகளை தொடுத்த கமலஹாசனை நான் அறிவேன். அப்போது உங்கள் தைரியம் பிடித்திருந்தது.

உங்களது மிகச் சிறந்த படமாக இன்று வரை நான் கருதுகிற “ஹேராம்” என்கிற படத்தில் மத வெறியர்களை, பிரிவினை சக்திகளை, காவிக் கூட்டத்தை அம்பலப்படுத்திய  துணிச்சலை நான் ரசித்திருக்கிறேன்.

முதலாளிகள் தங்கள் தொழிலாளிகளை சுரண்டுகிற அவலத்தைச் சொன்ன “அன்பே சிவம்” படத்தை அவசியம் பாருங்கள் என்று நான் பலருக்கு பரிந்துரைத்துள்ளேன்.

சில அவதாரங்களின் ஒப்பனை சரியில்லை என்றாலும் அமெரிக்காவின் ஆயுத வியாபாரத்தைப் பேசுவதால் “தசாவாதரம்” இன்றும் கூட பார்க்கிற ஒரு படம்தான்.

குஜராத்தில் நிகழ்ந்த “கருவருத்தல்” பற்றி “உன்னைப் போல் ஒருவன்” காமன் மேன் விவரிக்கையில் அவருக்கு மட்டுமல்ல, எனக்குக் கூட லேசாக கண்ணீர் துளித்தது. “குஜராத்தில் மோதிப் பாத்தா என்ன ஆகும் தெரியுமா? என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொண்டுதான் வசனம் வைத்ததாக நினைத்துக் கொண்டேன்.

திரைப்படத் தொழிலில் சம்பாதிக்கிற காசை அதிலேயே முதலீடு செய்கிறவர் என்பதால் மாறுபட்டு நிற்கிறவர் என்றும் கருதியுள்ளேன்.

இன்னும் அதிகமாக “விஸ்வரூபம்” எடுக்க வேண்டிய நேரத்தில்தான் உங்கள் சறுக்கலும் தொடங்கியது. “குழந்தைகளை அமெரிக்கா கொல்லாது” என்ற வசனத்தை வைத்துள்ளீர்கள் என்ற முழுச்சோற்றுப் பூசணிக்காய் வசனத்திற்காகவே விஸ்வரூபத்திலிருந்து நான் விலகி நின்றேன் என்பதையும் உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

விஸ்வரூபம் பிரச்சினைக்காக தமிழகத்தின் மனசாட்சியுள்ள மக்கள் எல்லாம் உங்கள் பக்கம் நின்றார்கள். ஆனால் அதன் பின்பு உங்களை ஜெயா டிவியில் பார்க்கிற போது “இவரும் வியாபாரிதானோ” என்று யோசிக்கத் தொடங்கினார்கள்.

“கருவருத்தல்” கொடுமையின் நாயகன் மோடியோடு ‘ஸ்வச்ச பாரத்” தூதராக காட்சியளித்த போது இவருக்குள் ஏதோ அசுத்தம் புகுந்து கொள்கிறதே என்று யோசித்தேன்.

எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் விருதுகளை திரும்பி அளித்த போது நீங்களும் அப்படி உங்களின் தேசிய விருதுகளை திருப்பித் தர வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பித் தராத ஆதங்கம் மனதின் மூலையில் இருந்த போதும் அவர்களாவது ஒரு கடுமையான கண்டன அறிக்கை மூலம் ஆறுதல் அளித்தனர். உங்களை அப்படி அறிக்கை விடச் சொல்லிக் கூட யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் விருதுகளை திருப்பித் தருபவர்கள் அதன் மூலம் அரசாங்கத்தை அவமதிக்கிறார்கள் என்று பாஜக பிரச்சார ஊது குழல்கள் சொல்வதையே நீங்களும் அப்படியே எதிரொலித்து மோடி மீதான விசுவாசத்தை நிரூபித்துக் கொள்வீர்கள் என்றுதான் நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

அரசாங்கம் என்றால் மக்கள் என்பதும் அரசியல் சாசனப்படி நடக்க வேண்டியதுதான் ஒரு அரசாங்கத்தின் கடமை என்பதும் மக்களின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டியதுதான் அரசாங்கத்தின் கடமை என்பதையும் மெத்தப் படித்த உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

அந்த கடமையை நிறைவேற்ற இந்த அரசாங்கம் தவறியுள்ளது என்பதையும் "நான் நினைத்ததை திரைப்படமெடுக்கும் எனது கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும்" என்று போர்க்குரல் கொடுத்த உங்களுக்கு மக்களின் உணவு உரிமை பறிக்கபடுவதைப் பற்றி தெரியவில்லையா?

விருதுகளை திருப்பித் தருவது ஒன்றும் புதிதல்ல என்று சொன்னதால் அது சுதந்திர போராட்ட காலத்திலிருந்து தொடரும் ஒரு போராட்ட வழிமுறை என்பதும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். அப்படி இருக்கையில் அதனால் பயன் இல்லை என்று அருண் ஜெய்ட்லிக்களும் அமித் ஷாக்களும் சொல்வதையே நீங்களும் வழிமொழிந்திருப்பது வியப்பளிக்கிறது என்று சொல்வதை விட வெறுப்பளிக்கிறது.

உங்கள் வார்த்தைப்படி விருதுகளை திருப்பித் தருவது அரசாங்கத்தை அவமதிப்பதாகவே இருந்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற இந்த அரசாங்கம், இதை விட மோசமான அவமதிப்பிற்கும் தகுதியானது.

இந்த வார்த்தைகளை வேறு கலைஞர்கள் சொல்லியிருந்தால் அதை அப்படியே கடந்து போயிருப்பேன். உங்களது கடந்த கால வார்த்தைகள்தான் இப்போது கடுப்பை உருவாக்கிறது. 

ஹேராமும், அன்பே சிவமும் உங்களின் சமூக பொறுப்புணர்வின் வெளிப்பாடு என்று நினைத்து ஏமாந்தது எங்களின் தவறுதான். என்ன இனி இப்படி உங்களின் படம் வந்தாலும் பார்ப்போம். ஆனால் அவை எழுதிக் கொடுத்த வசனத்தை வாங்கிய காசுக்கு பேசினீர்கள் என்பதை புரிந்து கொண்டு போய்க் கொண்டே இருப்போம். 

சிலர் படம் ஓட வேண்டும் என்பதற்காக படத்திற்குள் சமரசம் செய்து கொள்வார்கள். நீங்கள் படத்திற்கு வெளியே செய்து கொள்ளத் தொடங்கியுள்ளீர்கள். அவ்வளவுதான்.
 

16 comments:

 1. உண்மைதான் நண்பர்
  படத்திற்கு வெளியே சமரசம்

  ReplyDelete
 2. கமலை கொலை செய்ய , அழிக்க , அவர் மீதும் அவர் குடும்பம் மீதும் வசை மாரி பொழிந்த முஸ்லிம் களுக்காக கமல் எதற்க்காக போராடனும் ?

  ReplyDelete
  Replies
  1. ஓஹோ, அப்படியா?

   Delete
  2. Mr . ananoy.. This is not an agitation for muslim.. not for or against any religion.. this agitation is to enforce the freedom of speech.., freedom of expressions.. and democracy.. recent days, there is a huge threat against individual rights, freedom of speech, expressions and democracy.. hence this agitation.. ! so dont link it to religion .. !

   Delete
 3. முதலில் இஸ்லாமிய தீவிரவாதத்தை கண்டிக்கும் மன உறுதி எல்லா எழுத்தாளருக்கும்இருக்கிறதா என்று கேளுங்கள் தோழர் ?இதில்நிறையஅரசியல் இருப்பதால் கமல் பின் வாங்கி இருப்பார் .அவர் வெறும் கலை வியாபாரி தானே ?

  ReplyDelete
  Replies
  1. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கும் கேவலமான சொற்றொடர் அது. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளர்கள் அனைத்து வகை தீவிரவாதத்தையும் கண்டிப்பார்கள். கண்டிக்கிறார்கள்

   Delete
 4. yes. அப்படி than.....

  ReplyDelete
 5. First go and fight for the bonded labourers bonded slaves working with all Muslim Tanners who operates from your district ambur, vellore, vaniyambadi, peranampet.
  Why this much hue and cry for muslims

  ReplyDelete
  Replies
  1. தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது என்பது போல முதலாளிகளுக்கும் மதம் கிடையாது மிஸ்டர் கோழை அனானி. இந்து மத முதலாளிகள் எல்லாம் அவர்கள் தொழிலாளர்களை எப்படி நடத்துகிறார்கள் சார்? Your Fanatic Comment is partial

   Delete
 6. என்ன தோழர் இவர்களுக்காய் உங்கள் எழுத்தை வீணாக்கிக்கொண்டு....நீங்களுமா இந்த நடிப்பு வியாபாரிகளை நம்பிக்கொண்டிருக்கிறீகள்?

  ReplyDelete
 7. Dear Shri Raman: There are three Bharat Rathna awardees in Nehru family, viz., Jawaharlal, Indira and Rajeev. Neither Sonia Gandhi nor Rahul Gandhi, the legal heirs of the Nehru family has spoken a word about returning the awards. They have not spoken about "award wapsi" because they firmly belived, like Kamalahasan that such "wapsi" would NOT serve any purpose.

  ReplyDelete
  Replies
  1. If Kamal kept quiet, there is no issue at all. He was just vomiting what the saffron brigade says

   Delete
 8. Thambi.. Modi is best PM in the Indian PM history. Far far better than I.K.G...

  ReplyDelete
  Replies
  1. அறிவு கெட்ட அனானி அண்ணே, எல்.கே.ஜி பசங்க கூட அந்தாள்தான் மட்டமான பிரதம மந்திரினு சொல்வாங்க

   Delete
 9. உங்களது கருத்து சரியானதே, நடிகர்களின் சொற்களையோ வசனங்களையோ நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இவர்களெல்லாம் வியாபாரிகள் சமூக அக்கறை என்பதெல்லாம் அவர்களுக்கு சரிபட்டு வராது.

  ReplyDelete