Thursday, November 12, 2015

இவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல, வள்ளல்கள்.





வாட்ஸப்பில் வந்த செய்தி இது.

பூனாவில்  தீபாவளி அன்று நடைபெற்ற செய்தி இது.

பிறரிடம் கையேந்துவதன் மூலம் வாழ்க்கையை ஓட்டுபவர்கள் அவர்கள். அடுத்தவர்களின் கருணையில்தான் இவர்களின் பிழைப்பு நடக்கும். அப்படிப் பட்டவர்கள்தான் தங்களுக்கு கிடைத்த சொற்பத் தொகையிலிருந்து ரூபாய் ஆறாயிரத்தைத் திரட்டி தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்காக பாடுபடுகின்ற NAM என்ற அறக்கட்டளைக்கு அளித்திருக்கிறார்கள்.

இவர்களின் கைவசம் இருப்பு ஏதும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் பாசமும் கருணையும் அன்பும் ததும்பி வழிகின்றது. அதனால்தான் அடுத்தவர் உதவியையே நம்பி இருப்பவர்களாக இவர்கள் இருப்பினும்  இவர்களாலும் அடுத்தவர்களுக்கும் உதவ முடிகிறது.

யார் கண்டது? இவர்களில் பலர் கூட ஒரு காலத்தில் விவசாயிகளாக இருந்திருக்கலாம்! தற்கொலை என்ற முடிவுக்குச் செல்லாமல் அடுத்தவர் தயவை நம்பி வாழலாம் என்ற முடிவிற்குத் தள்ளப்பட்டிருக்கலாம். காதல் தோல்விகளும் ஆண்மைக்குறைவுமே விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என்று மோடியின் அமைச்சர் போல ஆணவமாக பார்க்காமல் இருப்பதற்கு அது கூட காரணமாக இருக்கலாம்.

இவர்கள்தான் உண்மையான வள்ளல்கள்.



5 comments:

  1. உண்மைதான்..உண்மையான வள்ளல்கள் இவர்களே..

    ReplyDelete
  2. போற்றுதலுக்கு உரிய வள்ளல்கள்

    ReplyDelete
  3. அன்பின் தோழர் ஒரு தொடர் பதிவுக்காய் நான் உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன்....முடிந்தால் இணையவும்...நன்றி அதற்கான இணைப்பு http://killergee.blogspot.in/2015/11/1.html

    ReplyDelete
  4. தொடர் பதிவிற்கு அன்புடன் அழைக்கின்றேன்...

    இணைப்பு : http://naanselva.blogspot.com/2015/11/Kadavulai-Kanden-Chain-Post.html

    நன்றி...

    ReplyDelete
  5. என் குடும்பம், எனக்குன்னுதான் யோசிச்ச எனக்கு இவர்களைப் பார்த்து வெட்கம்தான் வருது.

    ReplyDelete