Saturday, November 21, 2015

எந்நாளும் மறவோமே!

எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் தோழர் திண்டுக்கல் ஆர்.நாராயணன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார். தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் காலத்தில் பணியில் சேர்ந்து சங்கத்தை கட்டிய முக்கிய தூண்களில் ஒருவர். தொன்னூறு வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கியவர். தோழர் நாராயணன் அவர்களுக்கு செவ்வணக்கம். 

அவர் பற்றி இந்த ஆண்டு துவக்கத்தில் 01.02.2015 அன்று எழுதிய பதிவை இங்கே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 

உங்கள் பெயரை நீங்கள் மறந்தால் என்ன?

மதுரையில் நேற்று எங்கள் சங்கத்தின் ஆறாவது தமிழ் மாநில மகளிர் மாநாடு  நடைபெற்றது. 
அம்மாநாட்டில் எங்கள் சங்கத்தின் மூத்த தலைவ்ர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்  துவக்க காலத் தலைவர் தோழர் திண்டுக்கல் ஆர்.நாராயணன் கலந்து கொண்டார். தொன்னூற்றி மூன்று வயதான அத்தோழர் பேசுகையில் 'இப்போதெல்லாம் என் பெயரே எனக்கு மறந்து போகிறது" என்று குறிப்பிட்டார். சங்கத்தின் துவக்க காலத்தையும் தற்போதைய காலத்தையும் ஒப்பிட்டு  அடைந்துள்ள முன்னேற்றம்  குறித்த  பெருமிதத்தையும் பகிர்ந்து கொண்டார். "எந்த ஒரு பலனும் போராட்டம் இல்லாமல் பெற்றதில்லை. போராட தயாராக இல்லாத மனிதன் வாழ்வதற்கு தகுதியிழக்கிறான், Never Say Die, Never Accept Defeat, Fight Continuously" என்று எழுச்சியளிக்கும் விதத்தில் பேசினார்.

பிறகு மாநாட்டு அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற ஒரு இளைய பெண் தோழர் பேசியதுதான் அருமை.

அவர் தோழர் நாராயணன் தன்னுடைய பெயரே தனக்கு மறந்து போகிறது என்பதை குறிப்பிட்டு

"உங்களுடைய பெயரை நீங்கள் மறந்தால் என்ன சார்? உங்களுடைய தியாகத்தாலும் உங்களுடைய பணிகளாலும் இன்று நீங்கள் நிகழ்த்திய அற்புதமான உரை மூலமாகவும் உங்கள் பெயர் எங்கள் மனதில் என்றும் நினைவில் இருக்குமே சார்"

அதுதானே நம் பெயரை நாம் மறந்தால் என்ன?

மற்றவர்கள் மறக்காமல் இருக்கும்படி நம் செயல்பாடு அமைய வேண்டும் என்பதுதானே முக்கியம். 
 
எங்களின் மூத்த தோழர் காஷ்யபன் எழுதியதையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 
 
எங்களின் தொழிற்சங்க தந்தை
" தோழர் நாராயணன் அவர்களுக்கு "
அஞ்சலி !!!


"நான் அப்போது ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சுதந்திரத்திற்கு முன்பு.மூத்த உழியர்கள் ஜனவரி முதல் தேதி அதிகாரிகளை பார்த்து வாழ்த்து சொல்வார்கள். வேறும் கையோடு அல்ல. ஆப்பிள்,ஆரஞ்சு, அல்லது இனிப்பு பொட்டலங்களோடு செல்வார்கள்.

நான் புதியவன்.என்னையும் அழைத்து சென்றார்கள். எங்கள் கிளை அதிகாரி kRK .பட் என்பவர். எல்லரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். பரிசுபொரு ளைகொடுத்தார்கள். என் முறை வந்த போது நானும் சென்றேன். நான் கையில் எதுவும்கொண்டு செல்லவில்லை.
கைகுலுக்கினேன். 

What Narayanan you are very Hot ? என்றார் அதிகாரி.

எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

I am always hot sir ! என்று சொல்லி வைத்தேன் 

அவர் முகம் சிவந்து விட்டது.

In That case I Will pour ice cold Water on your head !"என்றார் அதிகாரி.

அவர் என்னவோ மிகப்பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போன்று வந்திருந்த சக ஊழியர்கள் சிரித்தார்கள். எனக்கு மிகவும் அவமானமாக  இருந்தது. என்ன செய்ய ?  நான் ஒரு சாதாரண டைப்பிஸ்ட் ! அவ்ர்கிளை மேலாளர்.

காலம் மாறியது..

1960ம் ஆண்டு. இன்சூரன்ஸ் துறை நாட்டுடமை யாக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. மதுரை மண்டல அலுவலகத்தில் நான் பாணியாற்றிக் கொண்டிருந்தேன் ..KRK பட் இப்போது மண்ட மேலாளராஇருக்கிறார்ஹை திராபாத்திலிருந்து  மதுரை மண்டலத்திற்கு மாற்றலாகி வந்தார் .

வந்தவர் தொழிற்சங்க நடவடிக்கைகளை பற்றி விசாரித்திருக்கிறார். பழைய ஓரியண்டல்  நாராயனன் தான் இப்போது மண்டல சங்க தலைவர் என்று கூறியிருக்கிறார்கள். கோட்டு சூட்டு போட்ட  மண்டல மேளாளரான krk பட் சேம்பரை விட்டு எழுந்து நான் இருக்கும் அறைக்கு வந்தார். 

hallo ! naaraayanan ! how are you ? என்று கைகுலுக்கினார்


நான் அன்றும் டைப்பிஸ்ட் தான்> இன்றும் டைப்பிஸ்ட்தான்.

ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு.

அன்று ஒரியண்டல் கம்பெனியில்  தொழிற்சங்க அமைப்பு இல்லை. இன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்ற தீரமிக்க சங்கம் இருக்கிறது." அது தான் வித்தியாசம்."


(961ம் ஆண்டு நாராயணன் அவர்கள் மதுரையிலிருந்து திண்டுக்கல் மாற்றலாகி சென்றார்கள் . அப்போது ஊழியர்கள் கூட்டத்தில் பேசியது)

அர்ப்பணிப்பும் தியாகமுமே வாழ்வின் அடையாளமாய் வாழ்ந்து காட்டிய தோழரை எந்நாளும் மறவோம்.

தோழர் நாராயணன் அவர்களுக்கு செவ்வணக்கம்
  

3 comments:

  1. அஞ்சலியில் நாங்களும் கலந்துகொள்கிறோம்.

    ReplyDelete
  2. Never Say Die, Never Accept Defeat, Fight Continuously" புது தெம்பை அளித்திருக்கிறது... பகிர்விற்கு நன்றி அய்யா

    ReplyDelete
  3. ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete