Sunday, November 15, 2015

தொடர் பதிவில் நானும்




கடவுளைக் கண்டேன் என்ற தொடர் பதிவில் என்னையும் எழுதச் சொல்லி நண்பர் செல்வகுமார் கேட்டுக் கொண்டார்.  நமக்கு ஒத்து வராத தலைப்பாகி விட்டதே என்பதால் கொஞ்சம் தாமதமாகி விட்டது. சரி கடவுளை விட்டு விடுவோம்.  சின்னதும் பெரியதுமாக இருக்கிற நமது ஆசைகளை  மட்டும் எழுதி வைப்போம் என்று தொடங்குகிறேன்.

1) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாத நிலை வேண்டும். வல்லான் பொருள் கொழிக்கும் தனியுடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை.

2) அரசியலிலும் நிர்வாகத்திலும் ஒழிந்திட வேண்டும் ஊழல்.

3) பாதுகாப்புச் செலவினங்களுக்காக பட்ஜெட்டில் பெரும் தொகை ஒதுக்கப்படும் நிலை மாற்றப்பட்டு கல்விக்கும் சுகாதாரத்திற்கும் போதுமான தொகை ஒதுக்கப்பட வேண்டும்.

4) மனிதர்களை ஜாதி கொண்டும் மதம் கொண்டும் பார்க்கிற, பிரிக்கிற இழிநிலை நீங்கிட வேண்டும்.

5) வேலையில்லா திண்டாட்டம் ஒழிந்திட வேண்டும்.

6) வாக்களித்த மக்களை புறக்கணித்து பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு வால் பிடிக்கும் அரசுகளை மக்கள் புறக்கணித்திட வேண்டும்.

7) வயிற்றுக்குச் சோறிடும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைத்திட வேண்டும்.

8)  கடுமையாக உழைத்து லாபத்தை பெருக்கும் தொழிலாளிகளுக்கு அந்த லாபத்தில் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும். 

9) இயற்கை அளித்த செல்வங்களை சுரண்டுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

10) தீவிரவாதிகளின் ஆயுதங்கள்  பறிக்கப்பட்டு மௌனமாக வேண்டும். அரசு பயங்கரவாதத்திற்கும் இது பொருந்தும்.

தோழர் செல்வகுமார், இது போதுமா? இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமல்லவா?
 

 

8 comments:

  1. ஆஹா...இது தான் தோழர் நீங்கள்....

    ReplyDelete
  2. தொடர் பதிவில் வந்துவிட்டீர்கள். கில்லர்ஜி ஆரம்பித்தார். என்னையும் அழைத்திருந்தார். நேரமின்மை காரணமாக எழுதுவதில் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் எழுதுவேன். நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே அருமையான பொதுநலமான ஆசைகள் இவைகள் நிறைவேற கடவுள் துணை அவசியமில்லை என்பது எனது கருத்து ஆனால் ? கண்டிப்பாக நிறைவேற்றலாம் எப்படி ? அது மக்கள் கையில் இருக்கின்றது இதோ வரப்போகிறது தேர்தல்... அதை அல்ல இதையாவது அறிவுக்கண்ணோட்டத்தில் சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் மக்கள் ஆட்சி என்று பெருமையாக சொல்கிறோம் ஆனால் ? நாமே மன்னர் ஆட்சியாக்கி விடுகின்றோம் இந்த பகுத்தறிவு நம்முள் அனைவருக்கும் தோன்றினால் அடுத்த வருடம் முதலே நமது நாடும் நாமும் முன்னேறுவது நிச்சயம்.
    மிகவும் ரசித்தேன் தங்களது ஆக்கப்பூர்வமான சிந்தனையை... வாழ்க நலம்

    நன்றியுடன் இந்த தொடர் பதிவை தொடங்கி வைத்த..
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    அடிக்குறிப்பு - நான் இந்தப்பதிவை தொடங்கி வைத்ததால் என்னை ஆத்திகத்தில் ஊறிப்போனவன் என்று நினைத்து விடாதீர்கள் பிறகு ஏன் ? இப்படியொரு தலைப்பு என்றும் தோன்றலாம் நகைச்சுவைக்காக தொடங்கி பொதுநல ஆசைகளை புகுத்திய எனது சிந்தனைகளை நேரமிருந்தால் காணவும்.

    ReplyDelete
  4. வணக்கம்

    வித்தியாசமான ஆசைகள்... கனவுகள் நிறைவேறட்டும்... வாழ்த்துக்கள் இப்படியான தொடர்பதிவுகள் நம்மைப் போன்ற வலைப்பதிவர்களை உச்சாகப்படுத்தும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. நண்பர் கில்லர்ஜி அவர்களின் பதிவு தொடர் சங்கிலியாய்
    ஒரு புதிய தாக்கத்தினையே ஏற்படுத்தி விட்டது
    தஙகளின் பகிர்வும் எண்ணங்களும் போற்றுதலுக்கு உரியவை
    நண்பரே
    எண்ணங்கள் நிறைவேறட்டும்

    ReplyDelete
  6. பாரதியாய் வேண்டும் வேண்டும் எனக்கேட்ட உங்கள் ஆசை நிறைவேறட்டும்..

    ReplyDelete
  7. தங்களின் பொதுநல சிந்தனைகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete