Wednesday, April 29, 2015

ஆச்சார்யா வருகை - அம்மாவிற்கு கிலியா?




இப்படி ஒரு தலைப்போடு எந்த தமிழ் நாளிதழாவது இன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளதா என்று தெரியாது.

ஆனால் அப்படி தலைப்பு இருந்தால் அது பொருத்தமாகவே இருக்கும்.

பவானிசிங்கின் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பு முதல் அடி என்றால் மீண்டும் ஆச்சார்யா வருவது அடி மேல் அடி. இனி புதிய விசாரணை அவசியமில்லை, ஆச்சார்யா வந்தால் என்ன? வராவிட்டால் என்ன என்ற கேள்வி எழலாம்.

ஆனால் கர்னாடக உயர்நீதி மன்றத்தோடு  முடிகிற பிரச்சினை இல்லை. மீண்டும் உச்ச நீதி மன்றம் செல்லும் போது அங்கே ஆச்சார்யாதான் வாதிடப் போகிறார், இந்த முறை மைக்கேல் குன்ஹா  கொடுத்த தீர்ப்பு என்ற பெரும் ஆயுதம் வேறு அவர் கைவசம் இருக்கப் போகிறது.

உச்ச நீதி மன்றத்தில் ஏதாவது "துண்டுக்கு அடியில் விரல்" மூலம் ஏதாவது அதிசயம் நடக்காவிட்டால்???

நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

ஓ.பி.எஸ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் சடாமுடி சாமியார்களாகவே மாறி விடுவார்களே!

8 comments:

  1. நீங்கள் எழுதிய கடைசிவரியை நினைத்தே பார்க்க முடியவில்லை..
    அதிசயம் நிச்சயம் உண்டு..

    ReplyDelete
  2. அப்போ 2016ல் தமிழகத்தில் பசக ஆட்சி தான் என்று சொல்லுங்கள்.......

    ReplyDelete
    Replies
    1. ஐய்யோ, அதெல்லாம் நான் ஒன்னுமே சொல்லலீங்க. ஆனா பசக (பாஜக) ஆட்சி கண்டிப்பா வராது

      Delete
  3. //ஓ.பி.எஸ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் சடாமுடி சாமியார்களாகவே மாறி விடுவார்களே!//

    நினைத்து பார்த்து சிரிப்பை அடக்க முடியாம சிரித்து கொண்டிருக்கேன்.

    ReplyDelete
  4. ஜெயலலிதாவுக்கும் கர்நாடகாவுக்கும் காவிரி நீர் தொடர்பாக
    பிரச்சனை உண்டு இப்போது கர்னாடக உயர்நீதிமன்றம்
    அவருக்கு தண்டனை அளித்தால் மேலும் தகராறு ஏற்படும் இந்த
    வழக்கை ராஜஸ்தான் அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்றுவது
    நல்லது

    ReplyDelete
    Replies
    1. innum ungalalam ooru nambuthu parunga...atha koduma....

      Delete
    2. யாரை சொல்றீங்க விகரம் என்ற புனைப்பெயரோடு வந்துள்ள அனானி அவர்களே?

      Delete