Monday, April 6, 2015

பிரதமர் மோடி மரியாதைக்குரியவர்தானா?




http://static.dnaindia.com/sites/default/files/2015/02/19/311791-suit.jpg

தோழர் என்.நன்மாறன் பற்றி நான் எழுதிய பதிவிற்கு  Taruada  என்பவர் அளித்த பின்னூட்டம் கீழே உள்ளது.

Mr. Ramani,

///
பத்து லட்ச ரூபாய் கோட்டு போடவோ, எழவு வீட்டில் கூட மூன்று முறை உடை மாற்றவோ அவர்கள் நரேந்திர மோடியா என்ன? ///

Remove this low grade statement about our and your respected prime minister.

I agree that Mr. Nanmaran was not rich. While I appreciate that your principles make the people also not rich.

Modi's vision is far sighted. He uses his dress to make money for India. His dress money goes back to people . That is smartness of a lease. Please understand

அனாமதயேமாக வருவதற்குப் பதிலாக ஏதோ புரியாத பெயரில் அவ்வப்போது பின்னூட்டம் எழுதி வருகிறார். அவரது பக்கம் சென்று பார்த்தால் விபரங்கள் எதுவுமில்லை. சரி அது ஒன்றும் பிரச்சினையில்லை.

அவர் சொல்லியுள்ள விஷயங்கள்.

எனக்கும் அவருக்கும் நமக்கும் மோடிதான் பிரதமர். அவரை மரியாதையோடுதான் அணுக வேண்டும். அவரது பத்து லட்ச ரூபாய் கோட் பற்றியும் எழவு வீட்டில் கூட மூன்று முறை உடை மாற்றியது பற்றிய விமர்சனம் என்பது தரக்குறைவானது. கோட் மூலம் தேசத்தின் வளர்ச்சிக்கு மோடி பணம் சேர்த்துள்ளார். தொலைநோக்கு பார்வை கொண்டவர் மோடி.

இவை அந்த தருடா சொல்லியுள்ள கருத்துக்கள். அவரைப் போலவே கருத்துக்கள் உடையவர்கள் இருப்பார்கள் என்பதால் கொஞ்சம் விளக்கமாகவே பதில் சொல்ல ஆசைப்படுகிறேன்.

நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மோடிதான் எனக்கும் பிரதமர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் மோடி தன்னை யாருக்கான பிரதமராக கருதிக் கொண்டிருக்கிறார்? அவரது நடவடிக்கைகளும் கொள்கைகளும் அவசரமாக கொண்டு வந்த சட்டங்களும் அவசரச் சட்டங்களும் யாருக்காக இருக்கிறது. இந்தியாவின் நூற்றிப் பத்து கோடி மக்கட்தொகைக்காகவா?  துயரம் தோய்ந்த வார்த்தைகளில் பதில் சொல்ல முடியும். மக்கட்தொகையில் 0.0000001 %   கூட இல்லாத மிகப் பெரும் செல்வந்தர்களுக்காக மட்டுமே தனது இதயத்து துடிப்புக்களை மோடி ஒதுக்கி வைத்துள்ளார்.

பத்து மாத நடவடிக்கைகளும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதைக் காட்டிலும் உள்நாட்டு, பன்னாட்டுக் கம்பெனிகளின் செல்வாதாரத்தைப் பெருக்குவதற்கு மட்டுமே பயன்பட்டுள்ளது. விரிவாகவே பல பதிவுகள் எழுதப்பட்டுள்ளது. திரு Taruada  நேரத்தை ஒதுக்கி வாசித்தால் ஒரு வேளை அவருக்கு தெளிவு பிறக்கலாம். எந்த வித தொலைநோக்குப் பார்வையும் இல்லாதவர் மோடி என்பதையும் அவர் உணர்ந்து கொள்ளலாம்.

சரி பத்து லட்ச ரூபாய் கோட் விஷயத்திற்கு வருவோம்.

ஜெயலலிதா தன் வளர்ப்பு மகன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியதற்கும் தன் பெயரைப் பொறித்த ஆடையை மோடி அணிந்து கொண்டதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இதனை தமிழில் சொல்வதை விட ஆங்கிலத்தில் சொல்வது கொஞ்சம் பொருத்தமாக இருக்கும்.

It is a vulgar exhibition of wealth and power.

அந்த ஆடையை பரிசாக மோடி பெற்றதே தவறு. அதனை அணிந்து கொள்ளாமலேயே அரசு கஜானாவிற்கு அளித்திட வேண்டும். எந்த ஒரு அமைச்சரும் தான் பெறும் பரிசுப் பொருட்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆக அந்த பத்து லட்ச ரூபாய் கோட்டை அரசிடம் ஒப்படைக்காமல் அணிந்து கொண்டதே மோடி செய்த விதி மீறல்.

கோட்டை ஏலம் போட்டு பணத்தை ஏதோ திட்டத்திற்கு பயன்படுத்தியதற்காக நண்பர் தருடா மிகவும் புளங்காகிதம் அடைந்துள்ளார்.  மானத்தைக் காக்க கௌரவமான உடைகள் இன்னும் கிடைக்காத ஒரு நாட்டின் பிரதமருக்கு இப்படிப்பட்ட ஆடம்பரம் அவசியமா என்று நாடு முழுதும் கண்டனக் குரல் எழுந்த பின்பு அப்பிரச்சினையை திசை திருப்பும் முயற்சியாகத்தான் ஏலம் விடப்படுகிறது. அதுவும் கூட சட்ட விரோதம்தான். அரசின் கஜானாவில் ஒப்படைக்க வேண்டிய பொருளை ஏலம் விடுவதற்கு இவருக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆக இதிலே பெருமைப்படுவதற்கு எதுவுமே கிடையாது.

ஒபாமா இந்தியா வந்த போதும் சரி, அல்லது சிங்கப்பூர் லீ க்வான் யூ மரணத்திற்குச் சென்ற போதும் சரி ஏதோ திரைப்படக் கதாநாயகன் போல பல முறை ஆடை மாற்றியிருக்கிறார். அதனை ஒரு சாதனை போல அவரது எடுபிடிகளும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டுள்ளனர். இதுதான் ஒரு பிரதமருக்கு அழகா?

போகிற போக்கிலே நன்மாறனை பாராட்டி ஒரு வார்த்தை சொல்லி விட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகளால் யாரும் பணக்காரனாக ஆக முடியாது என்றும் சொல்லி விட்டுப் போயிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் எம்.எல்.ஏ, எம்.பி ஆகிய பதவிகள் மக்களுக்கு பணி செய்வதற்கான வாய்ப்பு, நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய இடங்களில் மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கான வாய்ப்பு என்றே பார்க்கப்படுகிறதே தவிர பணம் பார்ப்பதற்கான அமுத சுரபி அல்ல. அதனால்தான் தேர்தல் செலவுகளை கட்சி செய்யுமே தவிர வேட்பாளர்கள் செய்ய மாட்டார்கள். எம்.பி, எம்.எல்.ஏ ஊதியத்தைக் கூட கட்சிக்கு அளித்து விட்டு முழு நேர ஊழியர்களுக்கான அலவன்ஸை பெற்றுக் கொள்வார்கள்.

கவுன்சிலரான உடனேயே இன்னோவாவில் பறக்கிற ஊழல்வாதிகளை உருவாக்குகிற கொள்கைகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் அல்ல என்பதை நண்பர் புரிந்து கொண்டால் நலம்.

ஏழை மக்கள் எல்லா நலனும் பெற வேண்டும் என்று போராடுகிற இயக்கம் மார்க்சிஸ்ட் கட்சி. செல்வந்தர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி ஏழை மக்களிடம் உள்ளவற்றையும் பறிப்பதற்கு எதிராக குரல் கொடுக்கிற கட்சி மார்க்சிஸ்ட் கட்சி.

ஆனால் எழை மக்களிடம் உள்ளவற்றையும் பறிக்கிற, அவர்களிடம் உள்ள துண்டு துக்காணி நிலத்தைக் கூட தன்னுடைய உற்ற நண்பர்களாக இருக்கிற அதானி, அம்பானி வகையறாக்களுக்கு ஒப்படைக்க துடிக்கிறவர் மோடி.

இந்தியாவை விலை பேசும் கூட்டத்தின் தலைவர். இந்திய மக்களை மதத்தின் பெயரால் பிரிக்க முனையும் சங் பரிவார் கூட்டத்தின் கொள்கைகளை அமலாக்க துடிப்பவர் மோடி. மூன்றாம் தர பேச்சுக்களை பேசிக்கொண்டிருக்கும் அமைச்சர்களின் தலைவர் அவர். சொந்த வாழ்விலேயே  நேர்மையை கடைபிடிக்காதவர் மோடி.

பிரதமராக இருக்கிற காரணத்தாலேயே அவர் மரியாதைக்குரியவராக மாறி விட மாட்டார். மரியாதை அளிப்பது போல அவரது நடவடிக்கைகள் மாறட்டும்.  தருடா போன்றவர்கள் எனக்கு உபதேசம் அளிப்பதை விட்டுவிட்டு அவர்களின் ஆதர்ஸ நாயகன் மோடிக்கு அறிவுரை வழங்கட்டும்.

8 comments:

  1. சரியான மறுப்பு

    ReplyDelete
  2. சரியான மறுப்பு

    ReplyDelete
  3. Where our BJP dealer for Tamil social media Mr.Taru? Odeetaraa?

    ReplyDelete
    Replies
    1. அவர் பிசியா இருக்காராம். பிறகு வந்து பதில் சொல்வதாக இன்னொரு பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளார். வரட்டும், நிதானமாகவே வரட்டும். பதில் சொல்லட்டும். காத்திருப்போம்

      Delete
  4. Mr. Raman,

    You are lucky to be India under Modi rule. Other if you live somewhere like even US, you might have been arrested for disrespecting head of state.

    Coming bCk to why you should respect him and the government, I am giving quick list of reasons which I posted on KM block also


    1. Modi improved India's image 1000 times in globe. That itlself is worth another term
    2. In just few months, clean India, Jan Dan, make in India, state planning group, and manymore achievements
    3. Even if Gandhi rules, none can prevent some antiingumbency. Some reduction in opinion poll can be ignored
    4. Just like we ask Modi to think outside gujarat, tamilnadu also should think as Indian citizens and go smooth with Modi. Until that we don't need to talk BIG on this.
    5. A govt that has no scam or violence or inaction is very pleasant surprise for us. What else we need from it.
    6. Minorities also understood the greatness of India culture and appreciate Modi to make them aware of their heritage
    7. There is not a single bjp leader who quit against Modi. It shows his strength. Just look at aap, congress, etc
    8. Stock market alone increased 30% and benefit retail public. That shows improvement in economy
    9. Farmers suicide has come down
    10. He never takes leave and works round the clock. Have you seen similar pm?

    Many more are there. If I continue the list it will become bigger than your blog. So stopping here

    Taru

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒரு மன நல மருத்துவரை அணுகுவது நல்லது. மோடி மேனியாவில் மூழ்கிப் போய்விட்டீர்கள். ஊடக மாயையா இல்லை நீங்களும் காவிக் கூட்ட பிரச்சாரகரா என்று எனக்கு தெரியவில்லை. உங்களின் அபத்தமான வாதங்கள் ஒவ்வொன்றையும் என்னால் முறியடிக்க முடியும். உங்களைப் போலவே எனக்கும் வேலைகள் இருக்கிறது. மோடி எனும் கற்பனை நாயகனின் முகத்தை அம்பலப்படுத்த வேண்டிய பிரதான பணி இருக்கிறது. உங்களைக் கண்டு பரிதாப்படுகிறேன். நம்பி ஏமாந்தோம் என்று நீங்களும் புலம்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை

      Delete
  5. This Taruda/Taru is roaming freely in all well written Tamil blogs. His aim is to spread toxic opinion of bjp. Tamil readers are kindly requested to disregard this kind of person. Give him as much as possible reply with correct fact and information. Then, they will run with jetty in hands!

    ReplyDelete