
இவர்கள் எல்லாம் யார் என்று கேட்கிறீர்களா?
இந்த நிமிடத்தில் தமிழ்மணத்தில் உள்ள இன்றைய முப்பது சூடான இடுகைகளில் ஒன்பது இடுகைகள் இவர்களது பெயர்களில்தான் உள்ளது. வேறு வேறு பெயர்களில் இருந்தாலும் எல்லா இடுகைகளும் செல்வது பயணக்கட்டுரை.ப்ளாக்ஸ்பாட் என்ற வலைப்பக்கத்திற்குத்தான்.
சரி அங்கே போனாலும் அந்த பதிவை படிக்க முடியுமா?
ஒரு நாலு விளம்பரங்கள் பதிவின் மீது வந்து உட்கார்ந்து கொண்டு நம்மைப் பார்த்து இளிக்கும்.
ஏற்கனவே திரு வருண் இது பற்றி எழுதியிருக்கிறார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் தமிழ்மணத்தால் எடுக்கப்படவில்லை. நம்முடைய நேரத்தை இந்த பயணக்கட்டுரை விரயம் செய்கிறது. எரிச்சலூட்டுகிறது.
முன்பு ஒரேயடியாக பாலியல் சார்பான பதிவுகள் வந்த போது அனைவரும் குரல் கொடுத்ததால் தமிழ்மணம் நடவடிக்கை எடுத்தது.
இப்போதும் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
கீழே அந்த பட்டியல் இருக்கிறது/

பிரபல ஜுவல்லரி நிறுவனம் ஒன்றுக்காக அல்லும் பகலும் உழைக்க ஆரம்பித்துவிட்டார் நடிகர் பிரபு. எந்நேரமும் அந்த ..



திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடை பற்றி .

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்... சமையல் பிரியர்களே Share ...
..


சென்னை தியாகராய நகரில் ரூ.200 கோடி முதலீட்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் புதிய நகை கடை அமைக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் ...
வணக்கம்
ReplyDeleteநல்ல தகவலை பகிர்ந்துள்ளீர்கள் தாங்கள் சொல்வது போல விளம்பரம் ஒரு பிரச்சினை... பொறுத்திருந்து பார்க்கலாம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//நம்முடைய நேரத்தை இந்த பயணக்கட்டுரை விரயம் செய்கிறது. எரிச்சலூட்டுகிறது.//
ReplyDeleteஅதே தாங்க.
இது பற்றி பழனிகந்தசாமி ஐயா முன்பு ஒரு பதிவு எழுதியிருந்தார்.
http://swamysmusings.blogspot.com/2014/12/blog-post_98.html
Well said.
ReplyDeleteநல்ல பதிவு. நானும் இந்த அனுபவத்தை பெற்றிருக்கிறேன். தமிழ்மணம் இதை கவனித்தால் நல்லது.
ReplyDeleteதமிழ் மணம் நிர்வாகத்தினர் சரி செய்வார்கள் என நம்புவோம்
ReplyDeleteAll these posts are copy and paste from following sites.
ReplyDeleteThatstamil.com
Newtamilcinema.com
Etc.
// நம்முடைய நேரத்தை இந்த பயணக்கட்டுரை விரயம் செய்கிறது. எரிச்சலூட்டுகிறது. //
ReplyDeleteஅதே, அதே....!
பதிவின் பெயர் தான் ' பயணக்கட்டுரை.ப்ளாக்ஸ்பாட் ' மற்ற படி அங்கு மருந்துக்கும் பயணமும் இல்லை காட்டுரையும் இல்லை. எல்லாமே வெறும் காப்பி பேஸ்ட் பதிவுகள் தான்.
வருணின் இடுகைக்கு பின்னர் தமிழ்மணத்தின் நடவடிக்கை இருக்கும் என்றே நினைத்தேன்.....
ஆமாம் நண்பரே, நானும் ஓரிருமுறை இந்தப் பதிவுகள் தமிழ்மணத் தரவரிசையில் முதல் பத்துக்குள் வந்தபோது என்னதான் இருக்கிறது என்று பார்க்கப் போனபோது எனக்கும் இந்த விளம்பரக் கொசுக்களின் தொல்லை தொடர, ஓடிப்போய்விட்டேன். இவை அனைத்தும் ஒரே வலைப்பக்கம் செல்வதை நீங்கள் சொன்னபிறகுதான் நான் கவனித்தேன். சரியான பதிவு. தமிழ்மணம் சரிசெய்ய வேண்டும். செய்யும் என்று நம்புகிறேன். நன்றி நண்பரே.
ReplyDelete