Monday, October 27, 2014

மண் சோறு சாப்பிட்ட வேலூர் மேயரின் கவனத்திற்கு

















மேலே உள்ள புகைப்படங்கள் எங்கள் வீடு அமைந்துள்ள தெருவில் இருந்து பிரதான சாலைக்கு செல்லும் சாலை. வெறும் இருநூறு மீட்டரில் எத்தனை குழிகள் என்பதைப் பாருங்கள். இந்த சாலை அமைக்கப்பட்டு மூன்று வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் இவ்வளவு லட்சணமாக உள்ளது.

இது வெறும் மாதிரி மட்டுமே. பெரும்பாலும் வேலூர் முழுதுமே இந்த நிலையில்தான் உள்ளது. வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டதே தவிர பணிகள் தரம் மிகவும் மோசமாகவே உள்ளது.

ஆனால் இதையெல்லாம் கவனிக்க எங்கள் மேயருக்கு எங்கே நேரம் இருக்கிறது. அம்மாவின் விடுதலைக்காக உண்ணாவிரதம், கடைகளை அடைக்கச் சொல்வது, மனிதச் சங்கிலி ஆகியவற்றுக்கே நேரம் கிடைக்கவில்லை. இதிலே மண் சோறு சாப்பிட்ட ஒரே பெருமையும் அவருக்கே உண்டு.

சரி அம்மாதான் ஜாமீனில் வெளியே வந்து விட்டீர்களே, இனியாவது மாநகராட்சிப் பணிகளை பார்ப்பார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தால், வழக்குகளிலிருந்து விடுதலை பெற மீண்டும் பூஜை, புனஸ்காரங்களை தொடர வேண்டும் என்று வேறு தலைமைக் கழகம் சொல்லி விட்டது.

ஆக அம்மா நிரபராதி என்று தீர்ப்பு வரும் வரை நாங்கள் இந்த சாலையில் செல்வதற்கு சபிக்கப்பட்டவர்கள்.

மேயருக்கு ஒரு ஆலோசனை. இந்த சாலையை சரி செய்தால் அடுத்த முறை நீங்கள் மண் சோறு சாப்பிட இந்த இடம் கூட பொருத்தமாக இருக்கும்

1 comment:

  1. //ஆக அம்மா நிரபராதி என்று தீர்ப்பு வரும் வரை நாங்கள் இந்த சாலையில் செல்வதற்கு சபிக்கப்பட்டவர்கள்.
    அம்மா நிரபராதி என்று தீர்ப்பு வந்தாலும் அம்மா செய்த ஊழலுக்கு வேறு வழக்குகள் வராமல் பாதுகாக்க பூஜைகள் செய்து மண் சோறு சாப்பிடுவார்.

    ReplyDelete