Saturday, March 23, 2013

ஜெயலலிதாவிடம் முலாயம்சிங் கற்றுக் கொள்ளாத பாடம்






கடந்த முறை நான் டெல்லி சென்ற போது நோய்டாவில் மாயாவதி அமைத்த  யானைப் பூங்கா   (இணைப்பு தரப்பட்டுள்ளது) பற்றி எழுதியிருந்தேன். அண்ணல் அம்பேத்கர் பூங்கா என்ற பெயரில் தனது தேர்தல் சின்னமான யானையை எங்கெங்கும் அவர் சிலையாக வடிவமைத்திருந்தார். உ.பி தேர்தலின் போது அந்த யானைகள் மீது தேர்தல் ஆணையம் வெள்ளைத்துணி போர்த்தி வைத்திருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இப்போது டெல்லி போன போதும் நோய்டாவில்தான் தங்கியிருந்தேன். யானைப் பூங்கா வழியாகத்தான் சென்று வர வேண்டும்.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் அந்த பூங்கா மூடப்பட்டிருக்கும்  அல்லது யானைகள் அகற்றப் பட்டு முலாயம்சிங் யாதவின் சைக்கிள் சின்னம் வைக்கப்பட்டிருக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன்.

ஆனால் நான் ஏமாந்து போனேன்.

பூங்கா இயங்கிக் கொண்டிருந்தது. மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். யானைகள் அப்படியே இருந்தன. மாயாவதி  உருவாக்கியிருந்த அமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

உத்தரப் பிரதேச அரசியலில் எலியும் பூனையுமாக மோதிக்கொண்டு இருந்தாலும் தமிழகத்தில் ஜெயலலிதா போல கருணாநிதி உருவாக்கிய  அனைத்தையும் மாற்றாதது கொஞ்சம் ஆரோக்கியான விஷயம்தான். இந்த அல்பத்தனத்தை முலாயம் கற்றுக் கொள்ளாதது நல்லதுதான்.


2 comments:

  1. எல்லா கட்சிகளுமே ஒழுங்கீனமனவைகளே ..அளவிலே வித்தியாசம் உண்டு ..(கம்யுனிஸ்ட் உட்பட) .. காரணம் பல உண்டு.

    நூலகம், புதிய சட்ட மன்றம், பல பல மேம்பாலம் ,மெட்ரோ ரயில் இன்னும் எவ்வளவோ தி மு க செய்தால் , அவர்களுக்கு நற் பெயர் போகுமே என்று அவைகளை எப்படியாவது யோசித்து , எவ்வளவு மக்கள் பணம் செலவு செய்தாவது, உதாசீன படுத்துவது மிகவும் மோசமான அணுகுமுறை ...

    ஏன் அவர்களை விட சிறப்பாக இன்னும் பலவற்றை செய்து மக்களுக்கு கட்ட வேண்டியது தானே. வெட்டி பெருமை எவ்வளவு நாள் நீடிக்கும் . முடியுமா ...அதிமுக செய்த சிறப்பான கட்டமைப்புகள் பெரிதாக நினைவுக்கு வரவில்லை

    ReplyDelete
  2. வாழ்க அரசியல்

    ReplyDelete