இவை
பிரசுரிக்கக்கூடாத புகைப்படங்கள் அல்ல. முதலாளித்துவ ஊடகங்களால் பிரசுரிக்க
முடியாத புகைப்படங்கள்.
முக்கடல்
சங்கமிக்கும் கன்னியாகுமரி,
வீர மண்
ஜாலியாபாக்
செங்கோட்டையாம்
கொல்கத்தா
வணிகத்
தலைநகர் மும்பை
என நான்கு
மையங்களிலிருந்து மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை, கொள்கைகளை முன்வைத்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள்
பயணம் செய்து நிறைவாக புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் 19.03.2013 அன்று
நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தின் புகைப்படப் பதிவுகள் இது.
மாற்றுப்
பாதைக்கான போர் முழக்கப் பயணமாக, கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் நேரடியாக
மக்களிடத்தில் செய்திகளை கொண்டு சென்றது அதிர்வலைகளை உருவாக்கியது. அதன்
தொடர்ச்சியாகத்தான் பொதுக்கூட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான தோழர்கள் அணி திரண்டனர்.
சொகுசு
ரதங்கள், சொகுசு கேரவன் வேன்கள் கிடையாது. சாமானிய மக்கள் பயணிக்கும் வேன்கள்தான்.
அதிலேதான் நாடெங்கும் சென்று வந்தார்கள். எழுச்சி மிக்க கூட்டம் அது. எளிய பாமர
மக்கள் நாடு முழுதிலிருந்தும் சாரைசாரையாக அணி திரண்டு வந்தார்கள். முழக்கங்கள்
எழுப்பிய வண்ணம் அரங்கில் நுழைந்த காட்சி சிலிர்ப்பூட்டியது.
பெரும்
ஊடகங்கள் நிகழ்ச்சிக்கு தங்கள் அவுட் டோர் வேன்களில் வந்த போதும், மக்கள் மேடையை
பார்க்க தடை செய்கின்ற விதத்தில் புகைப்படக்காரர்கள் மறைத்து நின்ற போதும், எல்லா ஊடகமும் இந்த
முக்கியமான நிகழ்வை இருட்டடிப்பே செய்தன.
மார்க்சிஸ்ட்
கட்சியின் வலிமையை எடுத்துரைக்கும் காட்சிகளை முதலாளித்துவ ஊடகங்களால் எப்படி காண்பிக்க முடியும்?
பின் குறிப்பு
: இந்த புகைப்படங்கள் அடுத்தவர்களின்
பதிவுகளிலிருந்து அவர்களுக்கு நன்றி கூட சொல்லாமல் காப்பி அடித்து வெளியிடும்
புகைப்படங்கள் அல்ல. நானே கைக்காசு செலவழித்து டெல்லி சென்று நேரடியாக எடுத்த
புகைப்படங்கள்.
பி.கு : ஒரு
காமெடி பீஸ் அனாமதேயம் நான் கடையை மூடி விட்டதாய் நினைத்து அல்ப சந்தோஷம்
அடைந்துள்ளது. நான்கு நாட்கள் ஊரில் இல்லாததால் நான் இறந்து விட்டேன் என்று கூட
அந்த கேடு கெட்ட அனாமதேயம் சந்தோஷப்பட்டிருக்கும். இதோ நான் நன்றாகவே உள்ளேன்
என்பதை இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு அது புகையட்டும். எத்தனை பின்னூட்டங்களை
அது எழுதினாலும் அது எல்லாம் டெலீட்தான். ஆகவே டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்.
ராமன் அவர்களே! ஜார்கண்டிலிருந்தும்,ஜலந்தரிலிரிந்தும்,ஜலகோனிலிருந்தும் ,வந்திருந்த தோழர்களிடம் பேசி அதனயும் சேர்த்து ஒரு Writeup கொடுத்திருக்கலாம்! தவற விட்டிர்களே! ---காஸ்யபன்.
ReplyDeleteGood show.
ReplyDelete