நேற்று ஒரு மகளிர் தோழரின் பெண்ணுடைய திருமண
நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றிருந்தோம்.
விழாவில் அமர்ந்திருக்கிற போது பழைய நினைவுகள்
நெஞ்சில் அலை மோதியது. கிட்டத்தட்ட பதினெட்டு
வருடங்கள் முன்பாக சென்றேன்.
அந்த பெண் ஊழியர் கருணை அடிப்படையிலான பணி
நியமனம் பெற்றவர். அவரது கணவர் எல்.ஐ.சி யில்
உயர்நிலை உதவியாளராக பணியாற்றியவர். கிட்டத்தட்ட
நாற்பது வயதிற்குள் இருக்கும் போது உடல் நலம்
பாதிக்கப்பட்டார். சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
சிகிச்சை பலனளிக்காமல் சிறு வயதிலேயே இறந்து போனார்.
மருத்துவ மனையிலிருந்து அவரது உடலை நாங்கள்தான்
வீட்டிற்கு எடுத்து வந்தோம். ஆம்புலன்ஸிலிருந்து உடலை
கீழே இறக்க அப்போது வேறு யாரும் இல்லாமல் நானும்
வேறு மூன்று தோழர்கள்தான் தூக்கிக் கொண்டு வந்தோம்.
அவருக்கு சின்னஞ்சிறியதாய் மூன்று குழந்தைகள். இவர்களை
என்ன செய்யப்போகிறேன் அன்று இந்த பெண் தோழர் கதறியது
இன்னும் நெஞ்சில் இருக்கிறது. அப்போது எல்.ஐ.சி யில்
பென்ஷன் திட்டத்திற்காக உடன்பாடு எட்டப்பட்டாலும் அரசாணை
வராததால் அமுலாகாத நேரம் அது.
காரியம் எல்லாம் முடிந்த பின்பு அவர்கள் வீட்டிற்குச் சென்று
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு விண்ணப்பம்
அளிக்குமாறு மூத்த தலைவர்கள் கூறிய போது அவர் முடியவே
முடியாது என்று மறுத்து விட்டார். வீட்டுக்குள்ளேயே இருந்த
அவருக்கு வேலை செய்ய வருவதில் அவ்வளவு தயக்கம்,
அவ்வளவு பயம்.
அவரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து பணியில் சேர வைத்தது
சங்கம். மிகுந்த கூச்ச உணர்வோடு வந்தவர்கள் காலம் உருண்டோட
உருண்டோட இன்றி இயல்பு நிலைக்கு வந்து விட்டார்கள். சில
வருடங்களுக்கு முன்பு முதல் பெண்ணின் திருமணமும் முடிந்து
விட இப்போது இரண்டாவது பெண்ணிற்கான திருமணமும்
நிச்சயமாகி விட முகத்தில் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும்
பார்க்க முடிந்தது.
இதற்கு அடிப்படை அவர்களது வேலை, வேலை கொடுத்த
நம்பிக்கையும் தைரியமும். குடும்பத்தலைவன் இறந்து
போய் விட்டால் எல்லாமே போய் விட்டது என்று இடிந்து
போய் நிற்காமல் இருப்பதற்கு தைரியம் அளிப்பது வேலை.
அந்த வகையில் பெண்களுக்கு வேலை என்பது மிக மிக
அவசியம். மத்திய அரசு கருணை அடிப்படையிலான பணி நியமனம்
என்பதை தொடரவில்லை. வங்கி, பொது இன்சூரன்ஸ் ஆகியவையில்
கூட இப்போது கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது
கிடையாது.
ரொக்கமாக எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் பணி
அளிக்கிற நம்பிக்கையை பணத்தால் அளித்து விட முடியாது.
இதை அரசுகள் உணர வேண்டும்.

தோழா! A.I.I.E.A-Zindabad !!---காஸ்யபன்.
ReplyDeleteபதிவுவின் மூலம் அரசுக்கும் பாடம்.
ReplyDeleteமற்ற துறைகளோடு ஒப்பிடுகையில் Lic யில் பெண் தோழர்களுக்கு பாதுகாப்பும் அதிகம். அதற்கு காரணம் சங்கம் என்பது யாவரும் அறிந்ததே!. ப்கிர்வுக்கு நன்றி.
உண்மை உண்மை ..
ReplyDeleteஇதை தான் சற்றே வேறு விதமாக சொன்னார் பெரியார் அய்யா அன்றே
Job is a must for women. When bread winner is lost, employment must be given
ReplyDeleteபணி அளிக்கிற நம்பிக்கையை பணத்தால் அளித்து விட முடியாது.
ReplyDeleteஉண்மை