Monday, March 4, 2013

இவர்கள் பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதிகள்

இது ஒரு வேலூர் கூத்து.

ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக வேலூர்
மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் பிரம்மாண்ட
பேனர்கள் மற்றும் வேலூர் பழைய பேருந்து
நிலையம் முன்பாக இருந்த சாலையில்
சிறிய அளவிலும் ஏராளமான பேனர்கள் 
வைத்திருந்தார். கவுன்ஸிலரின் சார்பாக 
அவர் கணவர்தான் வைத்திருந்தார் என்பது
வேறு விஷயம்.

கழக அரசியல் மரபின்படி பிறந்த நாள் அன்று
அமைச்சராக இருந்த டாக்டர் விஜய், வேலூர்
மேயர் ஆகியோரின் பெயரோடுதான் அந்த
பேனர்களும் இருந்தன.

விஜய் போனார், வீரமணி வந்தார்.

வீரமணியை வாழ்த்தி பிரம்மாண்ட பேனர்கள்
வந்ததில் ஆச்சர்யமில்லை. ஜெ பிறந்தநாளுக்காக
வைக்கப் பட்ட சிறிய பேனர்களில் விஜய் பெயர்
நீக்கப்பட்டு வீரமணி பெயர் சேர்க்கப்பட்டு 
பிறந்த நாள் முடிந்த பின்னும் அம்மாவிற்கு
வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இரவோடு இரவாக மாறியது பேனர்கள்
மட்டுமா, விசுவாசமும் கூட.

பதவியில் உள்ளவர்களுக்கு சரியான முறையில்
சரியான நேரத்தில் ஜால்ரா அடிக்கும் 
இது போன்ற பேர்வழிகள் பிழைக்கத் தெரிந்தவர்கள்
 

2 comments:

  1. அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் சமுதாயப் பணி. தங்களின் அனுபவம் இளைஞர்களுக்கு நல் வழிகாட்டுதலாக இருக்கும். இனி வரும் நாட்களில் நம் சந்ததிகள் நல்லவர்களாகவும் மனித நேயம் மிக்கவர்களாகவும் தயாள குணம் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டுமே அன்றி பணம் பண்ணும் இயந்திரங்களாக இருக்கக் கூடாது என்று கருதும் எண்ணம் கொண்டவர்களில் நானும் ஒருவன். உங்களது சிந்தனைகள் செயலாக்கம் பெற துணையாக இருக்க என்னால் முடியும்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு நண்பரே

    ReplyDelete