Tuesday, March 12, 2013

திமுக மீது மக்கள் பயமிழந்து விட்டார்களா?

திமுக  இன்று அறிவித்திருந்த பந்த் போராட்டத்திற்கு மக்கள்
ஆதரவு சிறிதும் இல்லை. வேலூரைப் பொறுத்தவரை திமுக
அலுவலகக் கட்டிடத்தில் இருந்த கடைகளைத் தவிர வேறு
எந்த கடைகளும் மூடப்படவில்லை.

கடந்த காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது 
இது போன்ற போராட்டங்கள் அறிவித்த போது கடையடைப்பு
நன்றாகவே நிகழ்ந்திருக்கிறது. இயல்பு வாழ்க்கை தொடர
வேண்டும் என்று ஆளும் கட்சி முயற்சிகள் மேற்கொண்ட
முயற்சிகளையும் மீறி மக்கள், வியாபாரிகள் ஆதரவளித்து
உள்ளனர்.

எங்கே யாராவது கலாட்டா செய்து கடைகளை அடித்து
நொறுக்கினால் என்ன செய்வது என்ற அச்ச உணர்வும்
ஒரு காரணம்.

இம்முறை கூட அந்த அச்ச உணர்வு காரணமாக பல
கடைகள் மூடப்படலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால்
அவ்வாறு நிகழவில்லை. அப்படிப்பட்ட பயம் எதுவும்
மக்களுக்கோ, வணிகர்களுக்கோ இருக்கவில்லை.

இந்த நிலைமைக்கு திமுகதான் காரணம்.
அவர்கள் மீது  மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதுதான்
காரணம்.

இலங்கைப் பிரச்சினையில் வாய்ப்பிருந்தபோது
அதையெல்லாம் கோட்டை விட்டு விட்டு
இப்போது டேஸோ என்று சொல்வதை யாரும்
நம்பத் தயாரில்லை.

சில்லறை வணிகத்தில் எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டே
மத்தியரசு முடிவிற்கு ஆதரவாக வாக்களித்த இரட்டை
வேட சந்தர்ப்பவாதத்தை மன்னிக்க வணிகர்கள்
தயாராக இல்லை.

இன்றைய அவல நிலைக்கு அவர்கள்தான் காரணம்.
எனவே கலைஞர் அடுத்தவர் மீதோ, ஆளும்கட்சி மீதோ
பழி போடுவதற்கு பதில் சுய பரிசோதனை 
செய்து கொள்ளட்டும்.
 

3 comments:

  1. சபாஷ் சரியாக சொன்னீங்க.

    ReplyDelete
  2. பயங்கரவாத விடுதலைப்புலிகளைப் பற்றி தமிழ் நாட்டில் மக்கள் என்றுமே கவலை கொண்டதில்லை.
    அவர்களிடம் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் வைகோ சீமான் நெடுமாறன் போன்ற தமிழ்பற்று பயங்கரவாத வியாபாரிகள்தான் தமிழ்நாட்டில் வேறு பிரச்சினையே இல்லை என்பதுபோல - தடை செய்யப்பட பயங்கரவாத விடுதலைப்புலிகளின் கைகூலிகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறார்கள் அந்த லிஸ்டில் இந்த அரசியல் முட்டாள் கருணாநிதியும் இந்த தள்ளாத காலத்தில் சேர்ந்திருப்பது நகைப்புக்குரியது

    ReplyDelete