கேரள மீனவர்களைக் கொன்ற இத்தாலி மாலுமிகளை
உடனடியாக இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும்,
இல்லையென்றால் உறவே கெட்டு விடும் என்று
மன்மோகன்சிங் எச்சரித்துள்ளதைப் பார்த்தால்
பலருக்கும் மெய் சிலிர்த்திருக்கும்.
இந்த வீரம் ஏன் தமிழக மீனவர்களைக் கொல்லும்
போதெல்லாம் வரவில்லை என்று சிலர் 'கேட்கிறார்கள்.
மாலுமிகளை இத்தாலிக்கு அனுப்பினால் அவர்கள்
மீண்டும் வரமாட்டார்கள் என்ற புரிதல் கூட
அரசுக்கு கிடையாதா என்றும் சிலர் கேட்கிறார்கள்.
அவர்களை அனுப்பி விட்டு இப்போது ஏன் அவஸ்தைப்
பட வேண்டும், தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க
ஏன் கஷ்டப் படவேண்டும் என்றும் சிலர் ஆதங்கப்
படுகின்றார்கள்.
இப்போது மன்மோகன் முழங்கியதே ஒரு நாடகம்
என்று தோன்றவில்லையா?
சோனியா காந்தியின் இத்தாலி நாட்டை பகைத்துக்
கொள்ளும் தைரியம் அவருக்கு உண்டா என்ன?
இந்திய நாட்டு சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று
இத்தாலி வெளிப்படையாக சொன்னதைக் கண்டிக்கும்
துப்பு மத்தியரசில் ஒருவருக்கும் இல்லையே!
எந்த வழக்கும் இல்லாமல் அவர்களை அப்படியே
திருப்பி அனுப்பினால் பிரச்சினை வருமே என்பதற்காக
ஏதோ இந்த இரண்டு கொலைகாரர்களும் இத்தாலி
போய் வோட்டு போட்டால்தான் இத்தாலியில் ஜனநாயகம்
நிலை நாட்டப்படும் என்று அனுப்பி வைத்து விட்டு
இப்போது நாடகமாடுகிறார்.
வேறு பிரச்சினை வந்தால் இது மறந்து போய்விடும்
என்று நம்பிக்கை இவர்களுக்கு. அப்படி திசை திருப்ப
எதுவும் இல்லையென்றால் யாரையாவது
தூக்கில் தொங்க விட்டு இவர்களே திசை திருப்பி
விட்டு விடுவார்கள்.
இவர்கள் நல்லவர்கள் என்று நம்புகிற முட்டாள்களாக
நம்மை நினைத்துள்ளார்கள்.
நாம் அப்படித்தான் இருக்கப் போகிறோமா?

No comments:
Post a Comment