நடிகர் சரத்
குமார் ஒரு வார இதழிற்கு அளித்த பேட்டியில் சேகுவாரா மட்டும்தான் புரட்சியாளரா,
இன்றைய இளைஞர்கள் பகத்சிங், வாஞ்சிநாதன், ஜான்சிராணி ஆகியோரின் படங்கள் போட்ட
சட்டைகளை ஏன் அணிவதில்லை என்று கேள்வி கேட்டுள்ளார்.
பகத்சிங்,
வாஞ்சிநாதன், ஜான்சிராணி ஆகியோரை இன்றைய இளைஞர்களுக்கு அவ்வளவாக தெரிவதில்லை என்ற
அவரது ஆதங்கம் கூட நியாயமாக தெரியலாம். இவர்களைப் பற்றி இளைஞர்கள் அறிந்து கொள்ள
இவர் இது வரை என்ன செய்துள்ளார். இவரது திரைப்படங்களிலாவது ஏதேனும் காட்சிகள்,
வசனங்கள் வைத்ததுண்டா?
ஆனால்
செகுவாரா படம் போடுவது வேதனையாக உள்ளது என்ற வார்த்தைதான் உதைக்கிறது. செகுவாராவை
வணிக நோக்கங்களுக்காக சிலர் பயன்படுத்துகின்றனர். ஒரு புரட்சியாளனை இப்படி வணிக
பிம்பமாக பயன்படுத்துகின்றார்கள் என்று வேதனைப் பட்டால் அது சரியாக இருக்கும்.
ஆனால்
செகுவாராவை போற்றுவது இவருக்கு வேதனையாக உள்ளதாம்.
சில மாதங்கள்
முன்பு காவிப்படை முகநூலில் நடத்திய அதே விஷப் பிரச்சாரத்தை சரத்குமாரும் செய்வதன்
உள் நோக்கம் என்ன?
அது சரி
செகுவாரா என்ன சரத் குமார் போல அவ்வளவு பெரிய ஆளா என்ன
ஏதோ
அர்ஜெண்டினாவில் பிறந்தார், கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகார எழுச்சிக்கு எதிராக
நடைபெற்ற புரட்சியில் பிடல் காஸ்ட்ரோவிற்கு தோள் கொடுத்தார். உலகெங்கும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக புரட்சியை உருவாக்க நாடு நாடாக சென்றார். காங்கோ
புரட்சிகர இயக்கத்திற்கு உதவி செய்ய ஆப்பிரிக்கா சென்றார்.
கியூப
புரட்சிகர அரசில் அமைச்சராக, ரிசர்வ் வங்கி தலைவராக கிடைத்த பொறுப்புக்களை உதறித்
தள்ளி பொலிவிய நாட்டு புரட்சிக்கு உதவி செய்ய சென்று அமெரிக்கப் படைகளால்
தந்திரமாய் சுட்டுக் கொள்ளப்பட்டார்.
இதுதான் சே.
அவர் என்ன
நாட்டாமை படத்தை அனுமதி இல்லாமல் ஜேஜே (இன்றைய ஜெயா டிவி) யில் வெளியிட்டதற்காக
திமுக வில் சேர்ந்தாரா?
இல்லை திருச்செந்தூர் தொகுதியில் திமுக உள்கட்சி மோதலால்
தோற்கடிக்கப்பட்டாரா?
இரண்டாவது
முறை ராஜ்யசபா சீட் கிடைக்காததால் கோபித்துக் கொண்டு அம்மாவோடு சேர்ந்தாரா?
இல்லை
அங்கிருந்து பல்டி அடித்து தனிக்கட்சி ஆரம்பித்து ஜாதிய அரசியல் செய்தாரா?
காமராஜருக்கு
மணிமண்டபம் கட்டுகிறேன் என்று சொல்லியே காலத்தை ஓட்டுகிறாரா?
ஓ.பி.எஸ்ஸை
மிஞ்சும் அளவிற்கு அம்மா புகழ் பாடுகிறாரா? (ஆனால் தா.பா விற்கு ஈடு இணையில்லை)
இது போல என்ன
தியாகம் செய்தார் சேகுவாரா?
ஆகவே
இளைஞர்களே,
இனிமேல்
சேகுவாரா
வேண்டாம், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் படம் போட்ட சட்டை போடுங்கப்பா........
பின் குறிப்பு : சரத்குமார் சட்டையில் சேகுவாரா படத்தை
ஒட்டி வைத்தது எனது கைங்கர்யம்தான்.
What is wrong in promoting Indian Patriots?
ReplyDelete