Sunday, March 17, 2013

மருதமலை ஏட்டு வடிவேலுவும் மன்மோகன்சிங்கும்




இத்தாலி கொலைகார மாலுமிகளை இத்தாலிக்கு திருப்பி
அனுப்பி ஏமாந்து அல்லது ஏமாந்தது போல் நடிக்கும்
மன்மோகன்சிங் பற்றி சில தினங்கள் முன்பு நான் எழுதியதைப்
பார்த்த என் மனைவி சொன்ன கமெண்ட் இது.

" என்ன கதை இது! மருதமலையில் வடிவேலு கைதியை
கோட்டை விட்ட காமெடி போலவே இருக்கு!"

யோசித்து பார்த்தால் சரியாகத்தான் இருக்கிறது.
திரைப்படத்தில் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று
அழுகிற கைதியை வடிவேலு வீட்டிற்குள் அனுப்பி வைப்பார்.

பல நிமிடங்களுக்குப் பின்னும் அவன் வராததால் கதவை
திறந்து பார்த்தால் அங்கே வீடு இருக்காது. வெட்ட வெளிதான்
இருக்கும். கைதி எப்போதோ தப்பித்து போயிருப்பான்.

திரையில் அம்மா பாசம்,
நிஜத்தில் தேர்தலில் ஓட்டு போட என்று ஒரு காரணம்.

திரையில் வடிவேலு முட்டாள்தனமாய் ஏமாந்திருப்பார்.

இங்கே ஏமாந்ததாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரி எங்கே புறப்பட்டு விட்டீர்கள்?

அர்ஜூன் வடிவேலுவை திட்டியது போல்
மன்மோகன்சிங்கை திட்டவா?
 
 

1 comment:

  1. அண்ணே இது சூப்பர் ...
    மேலும் இதுவே தமிழனாக இருந்தால் இத்தாலியர் கைதே நடந்திருக்காது ...நாம் தான் இளிச்சவாய் புன்னகை மன்னனாக உள்ளோமே..

    ReplyDelete