Friday, February 14, 2025

ஆரெஸெஸ்.ரெவியை மணிப்பூருக்கு அனுப்புங்கய்யா

 


கலவரத்தை தூண்டி விட்டு அதை அடக்க துப்பில்லாத பிரேன்சிங் மணிப்பூர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாததால் சட்டப்பேரவையை முடக்கி விட்டு அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் ஆட்சி என்பது யதார்த்தத்தில் ஆட்டுத்தாடியின் ஆட்சிதான்.

தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி ரெவி நாகாலாந்து கவர்னராக இருந்தபோது நாகாலாந்தில் அதை கிழித்தார், இதை கிழித்தார் என்று சங்கிகள் பீற்றிக் கொள்கிறார்கள். 

ரெவி அவ்ளோ பெரிய அப்பாடக்கர் என்றால் கலவரபூமியான மணிப்பூருக்கு மாறுதலில் அனுப்புங்கள் 56 இஞ்ச் மோடி. அந்தாள் மணிப்பூரில் என்ன கிழிக்கிறார் என்று பார்ப்போம். 

அப்படி ஒரு நிலை வந்தால் ரெவியின் மனநிலை எப்படி இருக்கும்?

நகர்ம்=மறுபக்கம் வடிவேலு போல மோடி காலில் விழுந்து கதறுவார்.

ஆமாம்.

மோடி போல ரெவியும் ஒரு வெத்து வேட்டு டுபாக்கூர்தான் . . .

Thursday, February 13, 2025

இதுதான் ஒரிஜினல் தொழிலா ஆட்டுக்காரா?

 


அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவாமல் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று சொல்லியுள்ள ஆட்டுக்காரா, இதற்கு முன்பும் கோவையில் லூலூ மாலில் ஒரு செங்கல்லைக் கூட விட மாட்டேன் என்று சொல்லியிருந்தாய்.

 


அப்படியென்றால் நீ

அரசியல் காமெடியன் கம் வில்லனாகும் முன்பு

அதற்கு முன்பு

ஆடு வளர்ப்பதாக சீன் போடும் முன்பு

அதற்கும் முன்பு

சிரிப்பு போலீஸாகும் முன்பு

 

வீடுகளில் கன்னக்கோல் வைத்து கொள்ளையடிக்கும் கூட்டத்தில் இருந்தாயோ நீ?

அந்த பழைய நெனப்பில்தான் செங்கல்லை உருவுவேன், ஒரு செங்கல்லை கூட விட மாட்டேன் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறாயோ!



Wednesday, February 12, 2025

யாருக்கு தர்ப்பணம் செய்தீர் மோடி?

 


அலகாபாத்தில் மோடி கங்கையில் குளித்து தண்ணீரை தாரை வார்க்கும் புகைப்படத்தை பார்த்தவுடன் எனக்கு "காதலன்" படக் காட்சிதான் நினைவுக்கு வந்தது.

தன்னுடைய அடியாள் ரகுவரண் மூலம் கொல்லப்பட்டவர்களுக்கு காசியில் பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்வார் தமிழ்நாட்டின் ஆட்டுத்தாடியாக நடித்த கிரீஷ் கர்னார்ட்.

அது போல மோடி யாருக்காவது தர்ப்பணம் செய்திருப்பாரா?

குஜராத்தில் இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள்,

குஜராத்தில் சரிந்து வந்த செல்வாக்கை மீட்க போலி எண்கவுண்டர்கள் மூலம் கொல்லப்பட்டவர்கள்.

மாற்றுக்கருத்து கொண்டமையால் கொல்லப்பட்ட குஜராத் உள்துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா,

செல்லா நோட்டு விவகாரத்தில் வங்கி வரிசையில் நின்றே செத்துப் போன நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்.

மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று அடித்துக் கொல்லப்பட்ட முகமது அக்லக் உள்ளிட்ட ஏராளமானவர்கள். 

உளவு அறிக்கை இருந்தும் தேர்தல் ஆதாயத்திற்காக அதனை அலட்சியப்படுத்தியதால் புல்வாமாவில்  மாண்டு போன  மத்திய ரிசர்வ் படை வீரர்கள்.

இப்படி பெரிய பட்டியலே உள்ளது மோடியின் கையில் படிந்துள்ள ரத்தக்கறைக்கு காரணமாக. . .

இவர்களில் யாருக்காவது தர்ப்பணம் செய்தீரா மோடி?

இதான் கர்மாவா மோடி?

 


கீழேயுள்ள காணொளிதான் இன்று வைரல். 

ஆமாம். பிரான்ஸில் அவர் அலட்சியம் செய்ய்ப்பட்டதைத்தான் சொல்கிறேன்.


இந்த காட்சியைப் பார்த்து ஒருவர் மகிழ்ந்திருப்பார். அவர் எல்.கே.அத்வானி.

இன்று அலட்சியப்படுத்தப்பட்ட மோடியால் அன்று அலட்சியப்படுத்தப் பட்டவர்.

அதையும் பார்த்து விடுங்கள்.


சங்கிகளின் மொழியில் இதனை கர்மா என்று சொல்லலாம். 

அதை விட இன்னும் சிறப்பாகவும் வள்ளுவர் சொன்னதை சொல்லலாம்.


“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா 

பிற்பகல் தாமே வரும்”

Tuesday, February 11, 2025

ஆட்டுக்காரனையும் எச்.ராசாவையும் கைது செய்யுங்கள்

 


தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்ட காவிக்கயவர்கள் இப்போது திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து புதிய வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசின் சொதப்பல்கள் காரணமாக மதுரையில் ஒரு கூட்டத்தை கூட்டிய தெனாவெட்டில் மீண்டும் பல வதந்திகளை பரப்பத் தொடங்கி உள்ளனர்.

அந்த வதந்தி என்னவென்று கீழேயுள்ள படங்கள் சொல்லும். (படங்கள் உதவி திரு முகமது பஷித்)

மிக முக்கியமாக கடைசியில் உள்ள படங்களை பார்க்கவும்.











ஆக, காவிக்கயவர்கள் போட்டோஷாப் மோசடி செய்து மதுரையில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

முதலமைச்சர் உறுதியாக சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சங்கிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்ய வேண்டும்.

சங்கி குணாம்சத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிற சேகர் பாபுவின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்.

கலவரத்தை தூண்ட சதி செய்யும் எச்.ராசா, ஆட்டுக்காரன், காடேஸ்வரா சுப்புரமணி, அர்சுன் சம்பத் போன்றோரை கைது செய்து கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்கள் வெளியே வராதவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியார் மண் என்பதை வாயால் மட்டும் சொல்லிக் கொண்டிராமல் செயலிலும் காண்பிக்க வேண்டும், 

அது ஒரு நிலாக்காலம்

 



இன்று தைப்பூசம். அலுவலகத்திற்கு விடுமுறை. பயணத்தில் முக்கால்வாசி முடித்த நூலை முடித்தது, மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சங்கி சிகண்டிகளோடு போட்டுக் கொண்டிருந்த சண்டையும் ஒரு கட்டத்தில் போரடித்து விட்டது.

அப்போதுதான் ஒரு தைப்பூச நாள் நினைவுக்கு வந்தது. 

அது 1999 ம் வருடம். அப்போது வாஜ்பாய் அரசு கொண்டு வந்திருந்த ஐ.ஆர்.டி.ஏ மசோதாவிற்கு எதிராக நாடு முழுதும் கையெழுத்து இயக்கம் நடந்து கொண்டிருந்தோம்.

எங்கெங்கு மக்கள் கூடுகிறார்களோ, அங்கெல்லாம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்க்ள், பிரசுரத்தோடும் கையெழுத்து படிவம் உள்ள அட்டையோடும் இருப்பார்கள்.

கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், கண்காட்சிகள், சந்தைகள், பேருந்து, ரயில் நிலையங்கள் என எல்லா இடங்களிலும் எங்களை பார்த்திருப்பீர்கள்.

1999 ம் வருட தைப்பூச நாள், அன்று முழு நிலவு நாளும் கூட. மக்கள் அதிகம் திரளக்கூடிய திருவண்ணாமலை கிரிவலத்தின் போதும் வடலூர் தைப்பூசத்தின் போதும் கையெழுதுக்கள் திரட்டுவது என்று முடிவு செய்தோம். திருவண்ணாமலை, வடலூர் ஏன் என்றால் இரண்டு பகுதிகளும் எங்கள் கோட்டப்பகுதிக்குள் இருப்பவை.

வேலூரிலிருந்தும் கிட்டத்தட்ட முப்பது தோழர்களுக்கு மேல் திருவண்ணாமலை சென்றிருந்தோம். திருவண்ணாமலை கிளையில் இருந்தும் வந்திருந்தார்கள். அதே போல வடலூருக்கு கடலூர் மற்றும் நெய்வேலி தோழர்கள் சென்றார்கள். வேலூரிலிருந்து கூட நான்கு தோழர்கள் சென்றார்கள்.

ஒரு மூன்று மணி நேரம் மட்டுமே எங்களால் கையெழுத்துக்களை திரட்ட முடிந்தது. அப்போது திரட்டிய கையெழுத்துக்கள் 25,000. அதை விட அதிகமானவர்களிடம் எங்கள் செய்தி சென்றது. 

இப்போதையை அவசர உலகில் மக்கள் பொறுமையாக நின்று கையெழுத்திட்டு செல்வார்களா? அரசுக்கு எதிரான இயக்கத்தை ஏவல் துறை அனுமதிக்குமா?  சங்கிகள் எப்படிப்பட்ட இடையூறுகள் செய்வார்கள்? என்பதையெல்லாம் யோசித்து பார்க்கையில் நிச்சயமாக அது ஒரு நிலாக்காலம்தான். . . 

Monday, February 10, 2025

இந்த முட்டாள்களே மோடியின் மூலதனம்

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் பார்த்த காமெடி பதிவு கீழே.


அதானி மீதான வழக்குகள் விஷயத்தில் கருணை காண்பிக்குமாறு ட்ரம்பிடம் மன்றாட அமெரிக்கா செல்லும் மோடி எதற்காகப் போகிறார் என்று இவர்களே கொடுக்கும் பில்ட் அப் இருக்கிறதே! முடியலை.

இந்த முட்டாள்களே மோடியின் மூலதனம் !!!!