மோடியின் அமலாக்கப் பிரிவு நேற்று முன் தினம் தேர்தல் சகுனி பிரஷாந்த் கிஷோரின் ஐ.பேக் நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகத்திலும் பிரஷாந்த் கிஷோரின் கூட்டாளி பிரதீக் ஜெயின் வீட்டிலும் ரெய்ட் நடத்தியுள்ளது. மம்தாவிற்கு இப்போது வழிகாட்டுவது பிரதீக் ஜெயின் தான்.
ரெய்ட் நடத்திய இரண்டு இடங்களுக்கும் தன் குண்டர்களோடு சென்ற மம்தா பானர்ஜி பல முக்கியமான ஆவணங்களை தூக்கிக் கொண்டு வெளியே வந்து விட்டார்.
அந்த ஆவணங்களில் என்ன ரகசியம் இருந்தது என்பது அவருக்கே வெளிச்சம்.
அமலாக்கப்பிரிவை ஏவுவது என்பது மோடியின் அராஜகம். உள்ளே புகுந்த ஆவணங்களை தூக்கி வருவது மம்தாவின் அராஜகம்.
இது போல முன்பு எப்போதாவது நடந்துள்ளதா?
ஆம்.
அதுதான் தமிழ்நாட்டின் பெருமை.
ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவையில் கலைஞரின் உடல் குறைபாட்டை நக்கலடித்து அமைச்சர் பதவியை பெற்றவர் விஜயபாஸ்கர். எடப்பாடி காலத்திலும் அவர் சுகாதாரத்துறை அமைச்சர்.
அவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட் நடத்திய போது அவரது செயலாளர்களில் ஒருவர், பல முக்கியமான ஆவணங்களை தூக்கி வந்து வெளியே வீச, காத்திருந்த தோண்டர்கள் அதனை தூக்கிக் கொண்டு ஓடி விட்டார்கள்.
ஆக அடாவடி செய்வதில் விஜயபாஸ்கர் முன்னோடியாக இருந்துள்ளார்.

No comments:
Post a Comment