மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்குகளில் பவனி வருவது இழிவாக பார்க்கப்படும் காலகட்டம் இது.
ஏதோ ஒரு ஆதீனம் பல்லக்கில்தான் பட்டிணப் பிரவேசம் செய்வேன் என்று அடம் பிடித்ததையும் அதற்கு வக்காலத்து வாங்கிய ஆட்டுக்காரன் நானே பல்லக்கை தூக்கி வருவேன் என்று சொன்னதை எள்ளி நகையாடிய மாநிலம் தமிழ்நாடு.
சடலங்களை நான்கு பேர் சுமப்பது என்பது கூட காலப்போக்கில் மிகவும் குறைந்து விட்டது.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு காணொளியை பார்க்கையில் எரிச்சலாக இருந்தது.
அதிலிருந்து இரண்டு படங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
வேலூருக்கு அருகாமையில் உள்ள மகாதேவமலை என்ற இடத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இப்படிப்பட்ட தேர்ப்பவனியை, தங்களை மனிதர்கள் இழுத்துச் செல்வதை இந்தியாவின் இரண்டாம் குடிமகன் அனுமதிக்கலாமா?
அசிங்கமாக இருக்கிறது.
இவ்வளவு பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்டவருக்கு தமிழ்நாட்டு எம்.பிக்கள் ஓட்டு போடவில்லை என்று மோடி ஆதரவாளர்கள் ஒப்பாரி வேறு வைக்கிறார்கள்.
👌👌👌👌👌
ReplyDeleteஎவ்வளவு துப்பினாலும் துடைத்துக்கொண்டே பவனி வருவார்கள்
ReplyDelete