Tuesday, September 30, 2025

கரூர் : சதி என கட்டமைக்கப்படும் சதி

 


கரூர் நெரிசல் மரணங்களுக்குக் காரணமான முதன்மைக் குற்றவாளியான விஜய்யை தப்புவிக்கவும் தவெக கட்சியின் தற்குறித்தனங்களை மடை மாற்றவும் விஜய்யின் மறைமுகக் கூட்டாளிகள் இப்போது தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ வும் திமுகவின் கரூர் மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி உடனடியாக மருத்துவமனை சென்றார், அன்பில் மஹேஷ் பொய்யாமொழி ஏன் உடனடியாக திருச்சியிலிருந்து கரூர் சென்றார், முதலமைச்சர் ஏன் கரூர் போனார், துணை முதல்வர் துபாயிலிருந்து ஏன் திரும்பினார்  போன்ற அபத்தமான கேள்விகளை அறிவார்ந்த கேள்விகள் என்று நினைத்து சங்கிகளும் அதிமுகவினரும் தவெக தற்குறிகளும் நாதக தம்பிகளும்  கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். அதே நேரம் இலங்கைப் பயணத்திலிருந்து பாதியில் வந்த ஆட்டுக்காரனை பாராட்டுகிறார்கள். 

எந்த ஒரு இயற்கைச் சீற்றமானாலும் பேரழிவாக இருந்தாலும் அதைப் பற்றி கவலையே படாத மோடி, ஆணவத்தின் மறு வடிவமான நிர்மலா அம்மையாரை அனுப்பி வைக்கிறார். தன் சொந்த மாநிலங்களில் நடக்கும் துயரங்களையே கண்டு கொள்ளாமல் ஒப்பனையில் கவனம் செலுத்தும் ஹேமாமாலினி, டெல்லி கலவரக் குற்றவாளி அனுராக் தாகூர், பிஞ்சிலேயே வெம்பிய தேஜஸ்வி சூர்யா ஆகியோரையெல்லாம் கொண்ட ஒரு குழுவை அனுப்பப்போகிறார். இப்படி ஒரு குழு மணிப்பூருக்குச் செல்லவில்லையே! இரண்டாண்டுகளுக்குப் பிறகு இவர் சென்றும் எதுவும் கிழிக்கவில்லை என்பது வேறு கதை.

சம்பவ இடத்திலிருந்து விஜய் ஓடிப் போன பின்பு  இறந்து போனவர்களின் சடலங்களையும் காயமடைந்தவர்களையும் ஆம்புலன்ஸ்கள் ஏற்றிச் செல்கையில் தவெக கட்சியின் இரு பெண்கள் "எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காத போது எதற்கு இங்கே இத்தனை ஆம்புலன்ஸ்கள்?" என்று கேட்கும் காணொளி ஒன்றை பார்த்தேன். அவ்வளவுதான் அவர்களின் அறிவு!

விஜய் மூலமாக அரசியல் அறுவடை நடத்தலாம் என்று ஆசைப்பட்டு அவருக்கு மறைமுக ஆதரவு கொடுத்து வந்த அழிவு சக்திகள் எல்லாம் இந்த கரூர் நெரிசல் மரணங்கள்  மூலமாக ஆடிப் போய் விட்டன. விஜய் ஓடிப் போனதும் அதிசயமாக அரசு  இயந்திரம் வேகமாக செயல்படத் தொடங்கியதும் அந்த ஆட்டத்தை அதிகமாக்கி விட்டது.

அதனால்தான் அபத்தமான கேள்விகளை எழுப்பி கரூர் சம்பவமே ஒரு சதி என்று கட்டமைக்கப் பார்க்கிறது. இதன் மூலமாக விஜய்க்கு அனுதாபம் தேடித்தரவும் முயல்கிறது.

ஆனால் இந்த சதிகாரர்கள் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிற்பார்கள் என்பதை எதிர்காலம் உணர்த்தும். 




No comments:

Post a Comment