இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்த செய்தி வெளியாகியிருந்தது. அந்த புகைப்படம் ஜெய்சங்கரின் முகத்தில் தென்பட்ட கவலை ரேகைகளை நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தது.
இந்தியப் பொருட்களின் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 % வரி, ஹெச்1பி விசாக்கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தியது போன்ற அமெரிக்க ஜனாதிபதி கிறுக்கன் ட்ரம்பின் முடிவுகள் மிகப் பெரிய இடியாக விழுந்துள்ள நிலையில் இவற்றை எப்படி மாற்ற வைக்க முடியும் என்ற கவலையெல்லாம் இருக்குமல்லவா! அதுதான் அவர் முகத்திலும் வெளிப்படுகிறது.
ட்ரம்பும் மோடியும் நண்பர்கள் அல்லவா! அப்படி இருக்கையில் மோடிக்கு வலி கொடுக்கும் முடிவுகளை எப்படி ட்ரம்ப் எடுக்கிறார் என்ற கேள்வி இயல்பாக எழலாம்.
ஆமாம். மோடியும் ட்ரம்பும் நண்பர்கள்தான்.
எப்போது ?
ட்ரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் . . .
அவர் இரண்டாவது முறையாக போட்டியிட்ட போது அவரது வெற்றிக்காக மோடி மிகவும் பாடுபட்டார். "நமஸ்தே ட்ரம்ப்" என்ற பெயரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் எல்லாம் செய்தார். சங்கிகள் இந்தியாவில் யாகம் எல்லாம் செய்தார்கள். அவர் மூன்றாவது முறையாக போட்டியிட்ட போதும் சங்கிகள் யாகம் செய்தனர்.
ஆனால் இரண்டாவது முறை போட்டியிட்ட தேர்தலில் தோற்றுப் போன பின்பு மோடி அவரை கண்டுகொள்ளவில்லை. ஜனாதிபதி ஜோ பைடனின் நல்ல புத்தகங்களில் ( GOOD BOOKS ) இடம் பெறவே விரும்பினார். ஜோ பைடனின் மனைவிக்கு மோடி அளித்த நாற்பது லட்ச ரூபாய் வைர நெக்லஸ் ( அது ஒன்றும் தாமோதர்தாஸ் வீட்டு சொத்தல்ல, இந்திய கஜானாவிலிருந்து செலவழிக்கப்பட்டதுதான்) எல்லாம் கிறுக்கன் ட்ரம்பை எரிச்சலூட்டியிருக்கும்.
அது மட்டுமா ட்ரம்ப் மூன்றாம் முறையாக போட்டியிட்ட சமயத்தில் மோடி அமெரிக்கா சேன்ற போது "மோடி என்னை சந்திக்கவுள்ளார்" என்று ட்ரம்ப் சொன்ன போது அப்படியெல்லாம் எந்த திட்டமும் இல்லை என்று அவசரம் அவசரமாக மறுத்தார்.
இதன் விளைவாகவே ட்ரம்பின் பதவியேற்பு விழாவிற்கு மோடிக்கு அழைப்பே கிடையாது. இந்திய வரி விதிப்பு முறையையும் எரிச்சலோடு கண்டித்தார்.
இந்திய பாகிஸ்தான் போரை நான்தான் தடுத்தேன் என்று இருபதுக்கும் மேற்பட்ட முறை ட்ரம்ப் சொல்லியும் மோடி அதனை ஏற்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
அது மட்டுமா ஒபாமா போல தானும் நோபல் அமைதி விருது பெற வேண்டும் என்று ஆசைப்படுகையில் அதற்கான போட்டியாளராக மோடியை அவரது அல்லக்கைகள் முன்னிறுத்துகின்றனர்.
இவையெல்லாம் நினைவுக்கு வருகிறதா மோடி?
மோடிக்கு ஞாபகம் இல்லையென்றாலும் உங்களுக்கு நினைவில் உள்ளதல்லவா ஜெய்சங்கர்?
மோடி மத உணர்வை உசுப்பேற்றும் கிறுக்கனென்றால் ட்ரம்ப் இன உணர்வை உசுப்பேற்றும் கிறுக்கன்.
இந்த இரண்டு கிறுக்கன்களின் கிறுக்குத்தனத்தால் பாதிப்பு என்னமோ சாதாரண மக்களுக்குத்தான்.
இந்த பிரச்சினைகள் தீர என்ன வழி?
அது அந்த இருவருக்கே வெளிச்சம் . . .
சூப்பர்👍
ReplyDelete