பைத்தியம் பிடித்த வெறியர்கள் அதிகமாகிக் கொண்டுள்ளனர். மாட்டுக் கறிக்கு எதிராக முதலில் பொங்கினார்கள். பிறகு அசைவ உணவே கூடாது என்றார்கள். இப்போது தயிர் வடையையே அசைவமாக்கி விட்டார்கள்.
இந்த காணொளியை பாருங்கள்.
சரி, தயிர் வடை எப்படி அசைவமாகும்? அப்படி சொன்னது எந்த சாஸ்திரம்? சூரியனுக்கு பல் இல்லாத காரணத்தால் பொங்கல் (தப்பு, தப்பு, அவங்க சொன்னது சங்கராந்தி) அன்று உளுந்து வடை நெய்வேத்தியம் படைத்ததாக நிர்மலா அம்மையார் ஒரு முறை ட்விட்டரில் பதிவு போட்டார். புனிதமான பஞ்ச கவ்யம் என்று சங்கிகள் சொல்வதில் கோமியத்தோடு, பால், நெய் ஆகியவற்றோடு தயிரும் சேர்க்கப்படுகிறதாம்.
சூரியனின் நெய்வேத்தியம் + பஞ்ச கவ்யம் மூலப் பொருள் காம்போ எப்படி அசைவமாகும்? கொஞ்சம் விளக்குய்யா பார்ப்போம் . . .
இந்த மாதிரி கிறுக்கனுங்களை தட்டி வைக்கலைன்னா நம்மை எதையுமே ருசியோட சாப்பிட விட மாட்டானுங்க . . .
சூரியனுக்கு பல் கிடையாதுன்னு நிர்மலா சீத்தாராமன் சொன்னாங்களா? அடிச்சி விடாதீங்க
ReplyDeleteஹலோ, நாளைக்கான கண்டெண்ட் கொடுத்தமைக்கு நன்றி. ஆதாரத்துடன் எழுதுகிறேன்
Delete