Wednesday, April 17, 2024

மோடியின் அதிசயமல்ல, பழய டெக்னிக்

 



சங்கிகள் இன்னிக்கு புளகாங்கிதம் அடைந்து கொண்டிருப்பது சூரிய திலகம் பற்றித்தான்.

அயோத்தி ராமர் கோயிலில் இன்று ராமர் சிலை மீது நெற்றிப் பொட்டு போல சூரிய ரேகை விழுவது போல ஐ.ஐ.டி பொறியாளர்களைக் கொண்டு மோடி ஏற்பாடு செய்து விட்டாராம். 

சங்கிகள் இப்படித்தான் தாங்கள் முட்டாள்கள் என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள்.


1956 கன்னியாகுமரியில் கட்டப்பட்ட  காந்தி நினைவகத்தில் மகாத்மாவின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த மேடையின் மீது சரியாக அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரிய ரேகை விழுவது போல பொறியாளர்கள் அமைத்துள்ளனர்.

அறுபத்தி எட்டு வருடம் முன்பே பயன்படுத்தப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தை ஒரு அதிசயம் போல கொண்டாட சங்கி முட்டாள்களால் மட்டும்தான் முடியும்!

இந்துக்களை ஏமாற்றி வோட்டு வாங்க என்னவெல்லாம் வித்தை காட்டறான் அந்தாளு!

ஆமாம், வெயில் காலமானதால் ராமர் சிலைக்கு பருத்தி ஆடைகள் மட்டும்தான் அணிவிக்கப்படும், ரொம்ப நேரம் தரிசனம் கொடுத்தா சிரமப்படுவார், அதனால் ஓய்வு தரோம் என்றெல்லாம் அக்கறையோடு பேசிக் கொண்டிருந்தீர்களே, இந்த வெயில் காலத்தில் நேரடியாக சூரியனின் ரேகை பட்டால் கஷ்டப்பட மாட்டாரா? 

No comments:

Post a Comment