Tuesday, April 2, 2024

வியாழன் கிரகத்து கோயிலும் வாரணாசி கோயில் அபத்த வாதமும் . .

 


மேலே உள்ளது அயோக்கிய சங்கிகள் உருவாக்கி அடிமுட்டாள் சங்கிகள் பரப்பிக் கொண்டிருக்கிற ஒரு அநியாயமான வதந்தி.

தற்போதுள்ள கோயில்களின் வடிவமைப்பில் 13 பில்லியன் வருடங்கள் முன்பாக வியாழன் கிரகத்தில் பிரகஸ்பதிக்கு கட்டப்பட்ட கோயில் என்று நாசா சொல்வதாக பரப்புகிறார்கள்.

வியாழனுக்கு இவர்கள் யாரும் போகப் போவதில்லை என்பதால் இந்த பொய்யை சிரித்து கடந்து விடலாம்.

ஆனால் இதே ரேஞ்சில் வாரணாசி ஞானவாபி மசூதி விஷயத்தில் ஒரு மிகப் பெரிய பொய்யை உச்ச நீதிமன்றத்தில் வாதமாக முன் வைத்துள்ளனர்.

லிங்கம் என்று இவர்கள் சொல்லும் நீரூற்று (FOUNTAIN) அடங்கிய கோயில் சத்ய யுகத்திலேயே கட்டப்பட்டதாம். 

அவர்களின் புராணத்தின் படி

முதலில் சத்ய யுகம் இதன் காலம் 17,28,000 வருடங்கள்

பிறகு திரேத யுகம்   இதன் காலம் 8,64,000 வருடங்கள்

அப்புறமா துவாபர யுகம் இதன் காலம் 12,96,000 வருடங்கள்

இப்போ கலி யுகம். இதன் காலம் 4,32,000 வருடங்கள்

ஆக குறைந்த பட்சம் 20 லட்ச வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் என்று சொல்கிறார்கள். பின்பு இதுதான் எங்கள் நம்பிக்கை என்பார்கள். நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கச் சொல்லி வலியுறுத்துவார்கள்.

கடவுளின் பெயரால் அடுத்த கலவரத்துக்கு வித்திடுகிறார்கள்.

பாஜகவை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கு இது போன்ற பொய்களின் அடிப்படையில் மத உணர்வுகளை உசுப்பேற்றுவதும்தான். 


No comments:

Post a Comment