Tuesday, March 28, 2017

நீங்க என்ன வேலை செய்யறீங்க எச்.ராஜா?



தமிழகத்தில் நாக்கில் விஷத்தை வைத்துக் கொண்டு அலைபவர்கள் இருவர். ஒருவர் ஜெயமோகன். இன்னொருவர் எச்.ராஜா.

தந்தை பெரியார் தொடங்கி தோழர் திருமா வரை அனைவருக்கும் தேசத்துரோகி முத்திரை குத்திய எச்.ராஜா, இப்போது தமிழர்களுக்கு சோம்பேறி முத்திரை குத்தியுள்ளார்.

கட்டுமான வேலைகளை ஒரிசாக்காரர்களும் பீகாரிகளும் செய்கிறார்களாம். ஹோட்டல்களில் அஸ்ஸாமியர்களும் நேபாளிகளும் வேலை பார்க்கிறார்களாம். வெட்டியாக  உள்ள தமிழர்கள் பொழுதைக் கழிக்க  போராட்டம் நடத்துகிறார்களாம்.

மத்தியரசு தமிழர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதற்கு எதிராக நடத்தும் போராட்டங்கள்  பாஜககாரர்களுக்கு உவப்பாக இருக்காதுதான். அதனால் ஒட்டுமொத்த தமிழர்களையும் வெட்டியாக இருக்கிறார்கள் என்று கொச்சைப் படுத்தும் அளவிற்கு வாய்க்கொழுப்பு எப்படி வந்தது இந்த எச்.ராஜாவிற்கு?

அவரின் ஆணவப் பேச்சுக்களுக்கு இடதுசாரிகளைத் தவிர விசிக தவிர வேறு யாரும், குறிப்பாக தமிழினக் காவலர்கள் என்று சொல்லும் பிரதானக் கட்சிகள் எதிர்வினையாற்றாமல் இருப்பதால் கிடைக்கிற தைரியத்தால் தொடர்ந்து இப்படி பேசிக் கொண்டே இருக்கிறார்.

சரி, சில நாட்களுக்கு முன்பாக பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை ரேஷன் கடைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தினாரே, அது கூட அவர் வெட்டியாக இருப்பதால்தானா?

ராஜா கூட ஏதோ போராட்டம் நடத்தி கைதானாரே (எதற்கு என்று நினைவில்லை, ஆனால் அவர்களை தங்க வைத்திருந்த கல்யாண மண்டபத்திற்கு ஒரு இஸ்லாமியர் குண்டு வைக்க வந்ததாக புரளி கிளப்பியது நினைவில் உள்ளது)

அப்படி என்றால் நீங்கள் நடத்திய போராட்டமும் பொழுதைக் கழிக்கத்தானா? உங்களுக்கு எந்த வேலையும் இல்லாமல் வெட்டியாகத்தான் இருக்கிறீர்களா?
  
ராஜா ஏதாவது உருப்படியாக வேலை பார்த்தாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் அப்பா அப்படி கிடையாது.

1972 முதல் 1982 வரை நாங்கள் காரைக்குடியில் சுப்ரமணியபுரம் ஒன்பதாவது வீதியில் இருந்தோம். அதே வீதியில்தான் எச்.ராஜாவின் குடும்பமும் இருந்தது. அழகப்பா பயிற்சிக் கல்லூரியில் (Alagappa Training College) உடற்கல்வி (Physical Education) விரிவுரையாளராக இருந்த அவரது அப்பா ஹரிஹரன், கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை திரைப்படத்து எம்.ஜி.ஆர் போல தலையில் தொப்பி, கூலிங் க்ளாஸ், கலர் கலராய் சட்டை அணிந்து சைக்கிளில் செல்வார். அவரே ஓய்வு பெற்ற பின்பு தலையில் குடுமி வைத்துக் கொண்டு புரோகிதம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

தமிழ்நாட்டில் யாரும் அப்படி ஒன்றும் வெட்டியாய் இருக்க விரும்ப மாட்டார்கள் என்பதை தன் தந்தையைப் பார்த்தாவது எச்.ராஜா உணர்ந்திருக்க வேண்டாமா?



9 comments:

  1. அவன் பொறுக்கி என்கிறான். இவன் சோம்பேறி என்கிறான். இவர்கள் வாய்க்கு வந்தபடி தமிழர்களைத் திட்டுவார்களாம். அதே நேரம், தமிழ்நாட்டில் ஆட்சிக்கும் வர வேண்டுமாம். எவ்வளவு அறிவு பார்த்தீர்களா?

    ReplyDelete
  2. பொன்னார் மீது ஏவப்பட்டது இவர்கள் மீதும் ஏவப்பட்டிருந்தால் அடங்கலாம்

    ReplyDelete
  3. ஹெச்.ராஜாவின் அப்பா புரோகிதராக இருந்தார் என்பதை இங்கே சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன? அப்படி இருந்தால் அதில் என்ன தவறு?

    ReplyDelete
    Replies
    1. அதை நான் ஒன்றும் தவறு என்றே சொல்லவில்லை. பணி ஓய்விற்குப் பிறகும் கூட அவர் வெட்டியாக இல்லை என்றுதானே சொல்லியுள்ளேன்

      Delete
    2. இன்னொரு விஷயமும் நினைவுக்கு வந்தது. ஒரு சீனியர் புரோகிதரிடம் ஜூனியராகச் சேர்ந்து காலப்போக்கில் அவரை ஒதுக்கி வைத்து விட்டு இவரே சீனியர் புரோகிதராக மாறி விட்டார் என்று தகவல் கிடைத்தது. நாங்கள் காரைக்குடியை விட்டு 1982 ல் வெளியே வந்து விட்டதால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை

      Delete
  4. இந்தாள் ஒரு வட மாநிலத்தான் சர்மா என்று படித்த யாபகம். தமிழர்களை சோம்பேறி என்கிறார் அதுவும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ரொம்ப தைரியம் தான் தோழர்.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. I remember him as a thug with a few young bramin teenagers with him sitting in type institute near second beat in Karaikudi. Complaining about the whole world as it was against the bramin community. He is famous for being Murattu kaalai's anna. Never worked in a job and all on a sudden became 'All India politician!'

    ReplyDelete
  7. எச்.ராஜாவை பலரும் எச்சி ராஜா என்று எழுதுவது வாயிலிருந்து சதா நேரமும் தெறிக்கின்ற எச்சில் போல அருவருப்பைத் தரும் வார்த்தைகளை கொட்டிக் கொண்டே இருப்பதால் தான்.தோளில் ஒரு காலி கோணிப்பையை எடுத்து போட்டுக்கொண்டு ஒரு வயதான மூதாட்டியோ முதியவரோ சாலைகளில் குப்பையாக கிடக்கின்ற காகிதங்களையும்,பிளாஸ்டிக் போத்தல்களையும் பிரித்து போட்டுக் கொண்டு சுமந்து திரிபவர்கள் அன்றைய நாளில் பெறப்போகும் ‘ஊதியம்’ நூறு ரூபாயை ஒரு நாளும் தாண்டாது.அந்த நூறு ரூபாயை உழைத்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் முதுமையிலும் சமூகத்தில் கேவலமாக பார்க்கப்படும் குப்பையை கிளறி வாழ்கிறார்கள்.இதெல்லாம் ராஜாவின் கண்களுக்கு தெரிந்தாலும் கூட புத்தியில் உறைக்காது.அந்தளவிற்கு கொழுப்பேறி இருக்கிறது அவரது சிந்தனை.

    இந்த பதிவின் வழியாகவும் பெயரில்லா நண்பரின் பின்னூட்டம் வழியாகவும் ராஜா ஒரு வேலைக்கும் போகாத கோர்ட்டுக்கும் போகாத(வக்கீல் தானா?)இந்த ஆள் இந்தி தெரிந்து கோண்டு மொழி பெயர்ப்புக்கு ஆள் இல்லாத அந்த கால கட்சியின் தலைவர்களின் உரைகளை தமிழ் மொழி பெயர்ப்பாளராக மேடைகளில் ஏறி ஒரு ‘தலைவராகி’ விட்டவர்.இதன் மூலமாக மட்டுமே மையைத்தலைமையுடன் அறிமுகமும் அதன் வழியே வளர்ச்சியும் பெற்ற ஆள்.இவர் உழைப்பை பற்றி பேசுவது என்பது மிக அவமானம்.

    ReplyDelete