Thursday, March 2, 2017

சங்கிகளே, கெண்டைக்கால் ரோமத்தின் நுனியைக் கூட . . .

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மத்தியப்பிரதேச மாநிலத் தலைவரான டாக்டர் சந்திராவத் என்பவர்  கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின்  தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் மங்களூரில் நடைபெற்ற மத நல்லிணக்கப் பேரணியில் தோழர் பினராயி விஜயன் பேசியதில் ஒரு பகுதியை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

“நான் ஒன்றும் ஒரே நாளில் வானத்தில் இருந்து குதித்து முதலமைச்சர் ஆகவில்லை. கல்லூரியிலிருந்து வெளி வந்த காலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வாள்களைக் கடந்துதான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே இந்த மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம்”

கேரளாவின் அமைதியை சீர்குலைக்க தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிற பல சதிகளை அந்த அமைப்பில் இருந்தவர்களே இன்று அம்பலப் படுத்தி வருதால் பாவம் பதற்றத்தில் இருக்கிறார்கள். மங்களூர் பேரணியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயன்று தோற்றுப் போனார்கள். அந்த தோல்வி வெறி கொலை வெறியாக மாறியுள்ளது.

கொலை செய்வது ஒன்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு புதிதல்ல. மகாத்மா காந்தியிலிருந்து கொலைக் கணக்கை துவக்கியவர்கள் அல்லவா?

ஆனால் இந்த மிரட்டல் எல்லாம் தோழர் பினராயி விஜயனிடம் எடுபடாது. அவரின் கெண்டைக்கால் ரோமத்தின் நுனியைக் கூட அவர்களால் நெருங்க முடியாது.

எனக்கு ஒரே ஒரு கேள்வியும் ஒரே ஒரு கவலையும்தான்.

ஒரு மாநில முதல்வரை கொல்வேன் என்று வெளிப்படையாக சொல்லும் தைரியம் எங்கிருந்து வந்தது? மோடி பிரதமராக, மத்தியில் ஆட்சியில் இருப்பதால் கிடைக்கிற ஆணவம்தானே?

எனது கவலை வேறு தலையை எடுப்போம் என்று சொன்னதை கண்டு கொள்ளாமல் ரோமம் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளதை ஆபாசம்  என்று பெரியவர் கோபாலகிருஷ்ணன் பின்னூட்டம் எழுதி விடுவார் என்பதுதான்.

7 comments:

 1. உண்மை தான்....கொலை செய்வது அவர்களின் வழக்கம் தானே....

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. திரு கோபாலகிருஷ்ணன், முந்தையதொரு பதிவில் புழுதிவாரி தூற்றி விட்டுப் போனீர்கள். அதற்கு நான் விரிவானதொரு விளக்கம் கொடுத்தவுடன் ஒளிந்து கொண்டீர்கள். இப்போது எதுவுமே தெரியாத அப்பாவி போல நியாயம் பேச வந்து விட்டீர்கள். இதுதான் சங்கிகளின் கலாச்சாரம்.

   என் மீது நீங்கள் சுமத்திய அபாண்ட பழியை நிரூபியுங்கள். அது வரை உங்கள் பின்னூட்டம் எதையும் பிரசுரிக்கப்போவதில்லை

   Delete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. நான் நினைத்தை விட கேவலமான மனிதராய் இருக்கிறீர்கள். உங்களைப் போன்ற பொறாமைக்கார ஜென்மங்கள், மனித குலத்திற்கே இழுக்கு. வயதிற்கேற்ற அறிவோ, முதிர்ச்சியோ இல்லாதவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். சங்கியால் மட்டுமே இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடியும். உங்கள் செயல்,எழுத்து எல்லாமே ஆபாசமானது.

   Delete
 5. திரு கோபாலகிருஷ்ணன், உங்களால் ஏன் கார் வாங்க முடியவில்லை. ஏன் கடன் இருந்தது, மூவாயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்க முடியவில்லை என்பதற்கான காரணங்களை என்னாலும் எழுத முடியும். ஆனால் உங்களைப் போன்ற கேவலமான ஜென்மம் நான் கிடையாது. இனி உங்கள் வயதுக்கும் மரியாதை கிடையாது.

  ReplyDelete