Monday, March 6, 2017

சப்பாணியின் கோபத்திலாவது நியாயமுண்டு மிஸ்டர் ஜக்கிஜி

ஜக்கி பற்றி ஏராளமாக எழுதி விட்டோம். மீண்டும் மீண்டும் அவரோடேயே உழன்று கொண்டிருக்க வேண்டுமா என்ற சிந்தனையில் இருந்த என்னை மீண்டும் அரிவாளை தூக்க வைத்து விட்டார்.

சப்பாணி என்று கூப்பிட்டவர்களை கோபால கிருஷ்ணன் சப்பென்று அறைந்த பதினாறு வயதினிலே திரைப்படக் காட்சிதான் அந்த காணொளியைப் பார்க்கையில் நினைவுக்கு வந்தது.

என்னை எதற்கு ஜக்கி, ஜக்கி என்று அழைக்கிறீர்கள், சத்குரு என்று அழையுங்கள் என்று கோபப்படுகிறார் அந்த சாமியார்.

சத்குரு என்றால் உண்மையான குரு என்று அர்த்தமாம். அவரை யார் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளார்களோ, அவர்கள் வேண்டுமானால் அவரை அப்படி அழைக்கட்டும். அனைவரும் அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரத்தை யார் அளித்தார்கள்? ஜகதீஷ் என்ற பெயரை அவரேதானே சுருக்கிக் கொண்டார். அதை சொல்வதில் ஏன் அவருக்கு அவ்வளவு கோபம் வருகிறது?

என்னை சத்குரு என்று அழையுங்கள் என அவர் கட்டளையிட்டது அந்த பத்திரிக்கையாளருக்கு மட்டும் என்று எடுத்துக்கொள்ள முடியாது. அந்த பேட்டியின் மூலம் எல்லோருக்கும் சொல்கிற செய்தி அது. உங்களை ஏற்காத, உங்களின் ஆன்மீகத்தை போலி என்று நிராகரிக்கிற, உங்கள் செயல்களை நியாயப்படுத்த நீங்கள் அவிழ்த்து விடும் கற்பனைக்கதைகளை நம்பாத ஆட்களால் உங்களை எப்படி சத்குரு என்று சொல்ல முடியும்? ஜக்கி என்பது உங்கள் பெயர்தானே? அதைச் சொல்வதில் உங்களுக்கென்ன அத்தனை பதட்டம்? உங்களுக்கு வக்காலத்து வாங்கி பத்து கட்டுரைகள் எழுதிய ஜெமோ கூட அனைத்திலும் ஜக்கி என்றுதான் சொல்லியுள்ளார்.

கோபாலகிருஷ்ணன் என்ற சொந்தப் பெயர் இருக்க, உடல் ஊனத்தை குறிக்கும் சப்பாணி என்ற பெயரில் அழைத்ததற்கு பதினாறு வயதினிலே கதாநாயகன் கோபித்துக் கொண்டதில் அர்த்தம் உண்டு. உங்கள் பெயரைச் சொன்னால் நீங்கள் கோபித்துக் கொள்வதில்  எந்த அர்த்தமும் கிடையாது மிஸ்டர் ஜக்கி வாசுதேவ்.

ஆமாம், இந்த சத்குரு என்ற பெயரை வேறு யாராவது சூட்டினார்களா? இல்லை நீங்களே சூட்டிக் கொண்டீர்களா?

‘வேதம் புதிது” படத்தில் “பாலுங்கறது உங்க பேரு. தேவர்ங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா” என்று அந்த சிறுவன் கேட்பது போல படித்து வாங்கிய பட்டமா?

அவர் பற்றி இன்னொரு பதிவும் எழுத வேண்டிய அவசியத்தை வேறு உருவாக்கி விட்டார். அது நாளை.

3 comments:

 1. ஜக்கி இல்லை பக்கி

  ReplyDelete
 2. ஒரு துறவி எல்லாவற்றையும் துறந்து, மக்களுக்காக உலக நன்மைக்காக வாழ்ந்து, ஒரே இடத்தில இருந்தால் பற்று வந்து விடும் என்று தேசாந்திரமா திரிந்து , தான் எப்போது உயிர் நீங்க வேண்டும் என்பதை அறிந்து ஜீவ சமாதி அடைந்தது ஒரு காலம். பெயருக்கு மட்டுமே துறவும், மீடியா வெளிச்ச வாழ்வும், ஜாதி அபிமான சாமிகளும், 10 தலைமுறைக்கும் சொத்து சேர்த்து ,ஊரையே வளைக்கும் அனந்தாக்களும்,, ஸ்ரீ ஸ்ரீ களும், அரசியல்வாதியோடு கை கோர்த்து, என்னை நீ ஒன்னும் புடுங்க முடியாது என்று மறைமுக சவால் விடும் பக்கி குருமார்களும் , போலி பக்தர் இருக்கும் வரையில் போலி குருமார் இருப்பார்கள்.

  ReplyDelete
 3. Sathguru Visiting Duabi next week. tickets are avl in online....rush for your chances. front rows premium / platinum / gold are already booked......only thagaram avl for AED 75.00.

  enre kadaisi....ponal varathu....

  ReplyDelete