Friday, March 17, 2017

குரானை முழுமையாகப் படித்திருந்தால் ??????
சில மாதங்களுக்கு முன்பாக வாட்ஸப்பில் படித்தது.

நானும் என் குடும்பத்தினரும் காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு கும்பல் எங்களை மடக்கியது. தாங்கள் ஐ.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களை கொல்வதுதான் தங்கள் முக்கியப்பணி என்று சொன்னார்கள்.

நானும் இஸ்லாமியன்தான் என்று சொன்னேன். அப்படியானால் குரானிலிருந்து ஏதாவது சொல் என்று சொன்னார்கள். நானும் சொன்னேன். எங்களை புறப்பட்டு போகச் சொல்லி விட்டார்கள்.

கார் சிறிது தூரம் சென்றதும் என் மனைவி சொன்னார். "நீங்கள் பைபிளை சொன்னபோது நான் மிகவும் அச்சப்பட்டேன். நீங்கள் சொல்வது குரான் அல்ல என்று தெரிந்து கொண்டு நம் அனைவரையும் கொன்று விடுவார்களோ என்று நடுங்கிக் கொண்டிருந்தேன்"

"குரானை முழுதுமாக படித்திருந்தால் அவர்கள் ஏன் இப்படி கொலைகாரர்களாய் மாறி இருக்கப் போகிறார்கள்"  என்றேன் நான். 

 
கோவையில் பாரூக் என்ற பெரியார்  திராவிடர் கழகத் தோழரை இன்னொரு இஸ்லாமியர் படுகொலை செய்ததையும் பாரூக் இறை மறுப்பாளர் என்பதே அதற்குக் காரணம் என்ற செய்தியை படிக்கும் போது எனக்கு மேற்கண்ட செய்திதான் நினைவுக்கு வந்தது.

மதத்தின் பெயரால், மத வெறியர்கள் செய்யும் அராஜகம் கண்டிக்கத் தக்கது, அது எந்த மத வெறியராக இருந்தாலும். 

ஆர்.எஸ்.எஸ் செய்யும் அக்கிரமங்களைக் கண்டிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாரூக் படுகொலையையும் கண்டிக்க வேண்டும். மதத்தின் பெயரால் இது போன்ற கொடுமைகள் நிகழ்வதை தடுக்க உரக்க குரல் கொடுப்போம். 

தோழர் பாரூக்கிற்கு அஞ்சலி.

 

"அனைத்து மதங்களும் போதிப்பது அன்பைத்தான்"  என்ற வாக்கியத்தையே மத அடிப்படைவாதிகள் கேலிக்குரியதாய் மாற்றி விடுகிறார்கள். 
 

8 comments:

 1. மிருகங்களுக்கு மதமில்லை. மணிதமுமில்லை.

  ReplyDelete
 2. "அனைத்து மதங்களும் போதிப்பது அன்பைத்தான்"
  ---மிகச்சரி. இதுதான் மதங்ககளின் அடிப்படை.

  இந்த அடிப்படையை பின்பற்றாத எவரும் மத அடிப்படைவாதிகளாக இருக்கவே முடியவே முடியாது. ஆகவே, மத அடிப்படையை பின்பற்றாத வஞ்சகர்களுக்கு தயவு செய்து மத அடிப்பட்வாதி என்ற பட்டத்தை சூட்டாதீர்கள் சகோ. நெஞ்சு வலிக்குது.

  இவண்...
  இஸ்லாமிய அடிப்படைவாதி.

  ReplyDelete
 3. Muslim matha veriyargalin kolai veri

  ReplyDelete
 4. ஜனநாயநாடுகளின் முதலாளித்துவ கொள்கைகள், கம்யூனிச கொள்கைள் எல்லாமே திவாலாக போகின்றன.
  எமது மதமே உலகை ஆளும் என்ற மதவெறி கொள்கையை நிராகரித்த பகுத்தறிவாளர் பாரூக்கிற்கு வீர வணக்கம்.
  அனைத்து மதங்களும் போதிப்பது அன்பைத்தான் என்பது ஒரு நகைச்சுவையே.

  ReplyDelete
 5. மதங்களின் தேவை, பல்வேறு மொழி/இன/கலாச்சார, கொள்கை மக்களிடையே இணைப்பையும் அன்பையும் உருவாக்கவே. அதற்குப் பயன்படா மதங்கள், மதங்களே அல்ல!

  சகோதரர் ஃபாரூக்கினை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்கள். அவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கட்டுமாக.

  சகோதரர் ஃபாரூக்கினைப் படுகொலை செய்த கொடியவர்களுக்குக் கடும் கண்டனங்கள். கொடியவர்களுக்கு உரிய தண்டனை விரைந்து கிடைக்கவேண்டும்.

  ReplyDelete
 6. சென்ற வாரம் ரயில் பயணத்தின் போது ஒரு தமிழர் தானாக என்னிடம் வந்து அன்பை போதித்தார்(தாங்க முடியாத அளவுக்கு அறுத்தார்).இந்தியாவின் ஆதி மதமே கிறிஸ்தவம் தான் என்றும், நீங்கள் எல்லாம் அதை தவறாக வெள்ளையர்களின் மதம் என்று நம்புகிறீர்கள்,ஆனால் அது தான் உங்களது முன்னோர்கள் மதம் என்றார்.

  ReplyDelete