Saturday, March 11, 2017

உபியை விட பெரும் வேதனைஉத்தரப் பிரதேசத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றி கவலை அளிக்கிறது. அம்மாநில மக்கள் இன்னும் அறியாமையில் மூழ்கி இருப்பதன் அடையாளமாக  இது தெரிகிறது. இந்த வெற்றி மூலம் மோடி வகையறாக்கள் இன்னும் என்னவெல்லாம் ஆடப் போகிறார்களோ? எதையெல்லாம் அடகு வைக்கப் போகிறார்களோ? 

பஞ்சாபிலும் கோவாவிலும் பாஜக கூட்டணி ஆட்சியை இழந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் உபி வெற்றி நிச்சயமாக கவலையளிக்கிறது.

உபி தேர்தல் முடிவை விட கவலையளிப்பது மணிப்பூரில் ஐரோம் ஷர்மிளா அடைந்துள்ள படுதோல்விதான்.

மணிப்பூர் மாநில மக்களின் உரிமைக்காக, அவர்களை நசுக்கும் அடக்குமுறைச் சட்டத்திற்காக பதினாறு வருடங்கள் போராடிய அவருக்கு வெறும் 90 பேர் மட்டுமே வாக்களித்தது மக்கள் மீதான நம்பிக்கையை குறைக்கிறது என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக மக்கள் இருப்பதுதானே மோடி, அமித்ஷா, சசிகலா வகையறாக்களுக்கெல்லாம் ஊக்கம் தெரிகிறது.

இன்று செய்த தவறுக்காக மக்கள் மீண்டும் துயரத்தை அனுபவிப்பார்கள். அப்போதாவது அவர்களுக்கு ரோஷம் வருகிறதா என்று பார்ப்போம்.

11 comments:

 1. Another very good new with the election is the communist party got Zero seats. Hard working people recoginized the anti-naional communal facist communists. The disease is still prevailing in Kerala and it has to be erradicated ASAP.

  ReplyDelete
  Replies
  1. முகத்தை காண்பிக்க துப்பில்லாத கோழையெல்லாம் கம்யூனிஸ்டுகளைப் பற்றி பேசுது. போங்கடா. உங்களைப் போல பொய் சொல்லி, பிராடு செஞ்சு, வெறி ஏத்தி, மக்களைப் பிரிக்கிற கேவலமான பிழைப்பு எங்களுக்கு அவசியமில்லை. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட தொடர்ந்து செயல்படுவோம். முட்டாளாகவே வைக்க நீங்க எல்லா அயோக்கியத்தனமும் செய்வீங்க. உங்க அயோக்கியத்தனத்தை நாங்க அம்பலப்படுத்திக்கொண்டே இருப்போம். தேர்தல் தோல்வியை வைத்து நாங்க அழிந்திடுவோம் என்று நினைக்காதீர்கள் முட்டாள்களே, எங்களை அழிக்க உனக்கெல்லாம் வயசு பத்தாது. ஓரமா போய் விளையாடு தம்பி.

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
  3. கோரமான முகத்தை மறைத்தாலும் இந்திய ஹிட்லருக்காக துடிக்கும் அசிங்கமான இதயத்தை மறைக்க முடியாத சங்கியின் பின்னூட்டம் நீக்கப்படுகிறது.

   Delete
 2. //மணிப்பூர் மாநில மக்களின் உரிமைக்காக, அவர்களை நசுக்கும் அடக்குமுறைச் சட்டத்திற்காக பதினாறு வருடங்கள் போராடிய அவருக்கு வெறும் 90 பேர் மட்டுமே வாக்களித்தது மக்கள் மீதான நம்பிக்கையை குறைக்கிறது என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.//
  உண்மை தான்.ஐரோம் ஷர்மிளா உண்மையான வீரப்பெண்.

  ReplyDelete
 3. தோல்வியைத் தழுவியது ஷர்மிளா அல்ல
  அம்மாநில மக்களே

  ReplyDelete
  Replies
  1. முற்றிலும் உண்மை.

   Delete
 4. தோழரே, நீங்கள் மோடியைப் பற்றியும் அவருடைய கூட்டத்தின் தில்லுமுல்லுகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதினாலும் எதுவும் மாறிவிடப் போவதில்லை., மக்களை ஏமாற்றுவது எப்படி, அவர்களை உசுப்பேற்றி விட்டு ஓட்டு வாங்குவது எப்படி என்று காவிக்கூட்டம் பல வருடங்களாக திட்டமிட்டு அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
  துரதிருஷ்டவசமாக, மதசார்பற்ற கட்சிகளிடம் இவர்களுடைய உத்தியை எதிர்கொண்டு, சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிகிற ஆயுதமும் இல்லை. அதை செய்யக்கூடிய தலைவரையும் கண்ணுக்கெட்டிய தூரம் காணவும் முடியவில்லை. செய்யக்கூடிய நிலையில் இருக்கிற ஒரே கட்சியான காங்கிரஸ் சரியான தலைமையின்றி அதல பாதாளத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது (இன்னும் அவர்கள் ராகுல் காந்தியை விடுத்தது வேறொரு தலைமையை சிந்திக்கக்கூட மனமற்று இருப்பதையே காணமுடிகிறது).
  காவிக்கூட்டத்தின் ஒவ்வொரு உத்தியையும் பட்டியலிட்டு அதை முறியடிப்பதற்கான பலமான மாற்று உத்தியை உருவாக்கி மிகக் கவனமாக செயல்படுத்தாத பட்சத்தில், 2019-லும் மோடி பிரதமராக வந்து, காவிக்கூட்டம் அதிக தைரியத்துடன் இந்த தேசத்தின் பன்முகத்தன்மையை, அமைதியை அழிப்பதை நம்மால் தடுக்கமுடியாது. பார்த்து கையை பிசைந்துகொண்டு , தமிழ்மணத்தில் எழுதிக்கொண்டிருப்பதை தவிர வேறொன்றும் செய்யமுடியாது.

  ஐரோம் ஷர்மிளா பற்றி...இப்படிப்பட்ட தியாகிகளுக்கு இந்த தேசம் தகுதியற்றது. மோடி, லல்லு, ஜெயா, சசி, கருணா போன்றவர்கள் தான் இந்த நாட்டுக்கு மக்களுக்கு உகந்த தலைவர்கள்.

  இந்த நாட்டு மக்களுக்காக வேதனைப்படுவதை தவிர வேறேனொன்றும் செய்ய இயலாத ஒரு சாதாரண இந்தியன் - சுரேஷ்

  ReplyDelete
 5. //ஜெயா, சசி, கருணா போன்றவர்கள் தான் இந்த நாட்டுக்கு மக்களுக்கு உகந்த தலைவர்கள்.//
  இதில் கருணா என்றால் யார் கலைஞர்,முன்நாள் தமிழக முதல்வரா?
  தெளிவாக சொல்லலாமே.

  ReplyDelete
  Replies
  1. சீமான் தெரிவித்ததாக ஒரு செய்தி, கருணாவும் ஒரு தமிழன் தானே என்பது.
   கலைஞர் கருணாநிதி தமிழர் கிடையாது என்கின்றவர்களின் தமிழர்கள் யார் என்பதை முடிபு செய்யும் பெரும் தலைவன் சீமானே கலைஞர் கருணாநிதியும் தமிழன் தானே என்று சொல்லிட்டாரே என்பதை நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்களோ,நீ வேறு, சீமான் சொன்னது இலங்கையில் உள்ள எல்டிடிஈ தீவிரவாத அமைப்பின் இரண்டாவது தவைர் கருணாவை பற்றி, ஏனெனில் முதலாவது தலைவரின் வாரிசு தான் சீமானாம் என்றார்கள்.
   ஆகவே மக்களே, தமிழகத்திலும் கருணா என்ற தமிழ்பட நடிகர் புலிப்படை என்ற அமைப்பை வேறு வைத்திருப்பதாலும், பெயர்களை சொல்லும் போது தெளிவாக சொல்லுங்கள்.

   Delete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete