Sunday, March 26, 2017

"அறம்" அழித்த ஜெமோ




புனைவுக்கு பொய் அழகு.
ஜெமோவுக்கோ எல்லாவற்றிலும் பொய்தான் அழகு.

சுஜாதா தொடங்கி தஞ்சை பிரகாஷ் வரை இறந்தவர்களைப் பற்றி தவறாகப்  பேசி வாங்கிக் கட்டிக் கொண்டாலும்

நிமிராத வாலோடு

அசோக மித்திரன் எழுத்தாளர் இந்துமதிக்கு காரோட்டியாய் வேலை பார்த்தார் என்றும் அவரது மனைவி அப்பளம் செய்து விற்றார் என்று சொல்லப் போக அது அவரது கற்பனை மட்டுமே அசோகமித்திரனின் மகனும் அம்பலப்படுத்தி விட்டார்.

ஆசானே,

இறந்து போனவர்களை ஏதாவது சொல்லி இழிவுபடுத்துவது உங்கள் இயல்பா இல்லை உங்களுக்கு வந்திருக்கும் வியாதியா?
 
இன்னும் எத்தனை நாள் இப்படி அசிங்கப்பட்டுக் கொண்டே இருக்கப் போகிறீர்கள்?

"அறம்" என்பது பற்றியெல்லாம் காகிதம் கிழிய  நீங்கள் எழுதாமல் இருந்திருக்கலாம். அதனால்தான் உங்கள் பொய்கள் எல்லாம் கடுமையான எதிர்வினைக்கு உள்ளாகிறது.

ஆனாலும் என்ன?

என்னை வசை பாட நினைத்தவர்கள் இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டனர் என்று சொல்லி  முகத்தை துடைத்துக் கொண்டே போகப் போகிறீர்கள்.

எத்தனை அடித்தாலும் தாங்குகிற "ரொம்ப நல்லவர்" நீங்கள்.

 

2 comments:

  1. ஏன் இந்த பிழைப்பு இவருக்கு

    ReplyDelete
  2. பொய் சொல்வது ஜெயமோகனுக்கு வழக்கம்தான். பலரும் அவரது பொய்களை அம்பலப்படுத்தி விட்டதும் எழுதிய கட்டுரையிலாவது வருத்தம் தெரிவிப்பதுடன் நிறுத்தி இருக்கலாம். அதை செய்யாமல் அசோகமித்திரனின் பிராமண சமூகம் தன்னை தாக்கி எழுதுவதாக எழுதியது ஜெயமோகனின் கேவலமான மன நிலையை காட்டுகிறது.

    ReplyDelete