Tuesday, February 7, 2017

இன்று தமிழகத்தின் சாலைகளெங்கும் . . . . . .










தமிழகத்தின் முக்கிய நகரங்களில் முக்கிய சாலைகளில் சென்றவர்கள் ஒரு காட்சியைக் கண்டிருக்கலாம். கண்டபடியே அதனை கடந்தும் சென்றிருக்கலாம். இவர்களுக்கு வேறு வேலை கிடையாது என்று சிலர் மனதுக்குள் அலுத்துக் கொண்டிருக்கக் கூடும்.

தமிழகத்தின் விவசாயிகள் பிரச்சினைகளுக்காக, வறட்சியை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி, தற்கொலையெனும் கொடிய தீர்வை நோக்கி விவசாயிகள் நாடாமல் தடுத்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகமெங்கும்  இன்று நடைபெற்ற மறியல் போராட்டத்தின்  காட்சிகள் அவை.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விவசாயிகளின் கோரிக்கைகள் பற்றிய முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு முன்பாகவும் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கட்சி. இப்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் விவசாயிகளுக்காக மறியல் செய்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு போராட்டமென்பது வெறும் ஒரு வார விழா அல்ல. தொடர்ந்து கொண்டிருக்கும் சுவாசத் துடிப்பு.

“இவர்களுக்கு வேறு வேலை கிடையாது” என்று அலுத்துக் கொண்டிருந்தவர்கள் யாராவது இதைப் படித்துக் கொண்டு இருந்தால் அவர்களுக்காக சில வார்த்தைகளை சொல்லியாக வேண்டும்.

ஆம். மார்க்சிஸ்டுகளுக்கு பின்வரும் முக்கிய வேலைகள் கிடையாது.

அரசியல் என்ற பெயரில் ஊழலில் ஈடுபட்டு லஞ்சம், கமிஷன் எல்லாம் வாங்கி பிழைப்பு நடத்தும் வேலை கிடையாது.

மதத்தின் பெயரிலும் கடவுளின் பெயரிலும் மக்களை ஏமாற்றி அவர்கள் மத்தியில் பிரிவினையை தூண்டுகிற அபாய வேலை கிடையவே கிடையாது.

ஜாதிய உணர்வுகளை தூண்டி விட்டு ஆதிக்கம் செய்கிற வேலை கிடையாது.

அரசியல் போர்வை போர்த்திக் கொண்டு சேர்த்து வைத்த மூலதனத்தை பாதுகாக்கிற, அதிகரிக்கிற வேலை கிடையாது.

தலைவர்களின் கால்களில் வீழ்ந்தே கிடக்கிற மானம் கெட்ட வேலை கிடையாது.

வெறியைக் கிளப்புகிற எரிச்சல் மூட்டும்  வேலைகளும் கிடையாது.

இப்படிப்பட்ட முக்கியமான வேலைகள் ஏதுமில்லாத  காரணத்தால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  இந்நாட்டின்  உழைப்பாளி மக்களுக்காக கவலைப்படுகிறது. கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடுகிற்து. பல சமயங்களில் காவல்துறையின் கொடூரத் தாக்குதல்களில் அடி வாங்கி மண்டை உடைந்து மருத்துவமனையிலும் சேர்க்கப்படுகிறது.

பின் குறிப்பு : மேலே உள்ள படங்கள் மறியல் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கமாகச் சொல்லும். கீழே உள்ள படங்கள் இன்று வேலூரில் நடந்த மறியல் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டவை.








2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Unworthy Comment of an Undeserving Person went to garbage bin, the rightful place

      Delete