Saturday, February 11, 2017

என்ன செய்வீர்கள் திருமதி சசிகலா?



உங்களுடைய இன்றைய பேட்டியில் "ஓரளவுதான் பொறுமை காக்க முடியும். இல்லையென்றால் செய்வதைச் செய்வோம்"   என்று சொல்லியுள்ளீர்கள்.

அதற்கு என்ன அர்த்தம் அம்மணி?

உங்கள் அம்மா சென்னாரெட்டிக்கு செய்தது போல ஆளுனர் மீது அபாண்ட பழி ஏதாவது சொல்வீர்களா?

மத்தியில் உள்ளவர்களோடு இது நாள் வரை நடந்த பேரங்கள் (தேர்தல் கண்டெய்னர் உட்பட) அம்பலப்படுத்திவீர்களா?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை கலைத்தது போல ஓ.பி.எஸ் வீட்டின் மீது ஏதாவது படையெடுப்பீர்களா?

ஓ.பி.எஸ் பின்னணியில் இருப்பதாக நீங்கள் சொல்லும் திமுக மீது ஏதாவது வழக்கு தொடுப்பீர்களா?

ஆளுனர் இல்லாமலேயே நீங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வீர்களா?

இல்லை உங்களிடம் இருக்கும் நூற்றுக்கணக்கான ரௌடிகள் கொண்டு பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து தமிழகத்தையே தவிக்க வைப்பீர்களா?

உங்கள் மிரட்டல் யாருக்கு? யாரால் உங்களுக்கு பாதிப்பு?

மத்திய அரசுக்கு எதிராக இதுவரை நீங்கள் சுண்டு விரலைக் கூட உயர்த்தவில்லை என்பதை மனதில் கொண்டு ஒரு அறிவுரை சொல்கிறேன். கேளுங்கள்.

ஒரு விஷயம் மட்டும் புரிந்து கொள்ளுங்கள். ஓ.பி.எஸ்ஸை பலர் ஆதரிக்கின்றார்கள் என்றால் அது ஏதோ அவர் ஒன்றும் உத்தம புத்திரன் என்பதால் அல்ல. உங்கள் மீதான வெறுப்பு, அவர் மீதான வெறுப்பை விட பல மடங்கு அதிகமாக உள்ளது என்பதால்தான்.

மக்கள் மீது சிறு கீறல் விழுந்தால் கூட இனி எக்காலத்திலும் உங்களால் அரசியலே செய்ய முடியாது.

இதை உங்க ரௌடிகளுக்கும் சொல்லி விடுங்கக்.

 

 

4 comments:


  1. ஒரு விஷயம் மட்டும் புரிந்து கொள்ளுங்கள். ஓ.பி.எஸ்ஸை பலர் ஆதரிக்கின்றார்கள் என்றால் அது ஏதோ அவர் ஒன்றும் உத்தம புத்திரன் என்பதால் அல்ல. உங்கள் மீதான வெறுப்பு, அவர் மீதான வெறுப்பை விட பல மடங்கு அதிகமாக உள்ளது என்பதால்தான்.well said.she should understand this.adanguma

    ReplyDelete
  2. தோழரே அவங்க சொன்னத நீங்களுமா முழுசா கவனிக்கலை.

    ReplyDelete
  3. சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டர்கள்! இந்தக் கும்பல் இத்தோடு அரசியலில் இருந்து அகலவேண்டும் என்று மனம் விழைகின்றது. காலம் நமக்கு நல்ல பதிலை சொல்லட்டும்.

    ReplyDelete
    Replies
    1. சார், யார் நீங்க? கொஞ்சம் விபரம் சொல்லுங்க. இல்லைனா நானே எனக்கு பின்னூட்டம் எழுதினதா கதை கட்டிடுவாங்க

      Delete