Thursday, April 16, 2015

ஹிந்துவிற்கு ஏன் இந்த அவசியமற்ற கவலை?






 http://i.ytimg.com/vi/pyA9Ft2LLPs/hqdefault.jpg

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தன் யூகங்களோடு ஹிந்து நாளிதழ் இன்று முதல் பக்கத்திலும் பத்தாவது பக்கத்திலுமாக இரண்டு செய்திகள் வெளியிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் இருபத்தி ஓராவது அகில இந்திய மாநாடு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை நாட்டின் நிலைமை, தனது ஸ்தாபன நிலைமை, தன்னுடைய லட்சியங்களை நிறைவேற்ற வகுக்க வேண்டிய வியூகம், நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்து முன்னேற்றத்திற்கான முடிவுகளை எடுப்பது ஆகியவைதான் ஒரு மாநாட்டின் பிரதான அம்சங்கள்.

தாலுகா அளவிலான மாநாடு முதல் அகில இந்திய மாநாடு வரை மாநாட்டின் முக்கியமான விவாதப் பொருட்கள் இவைதான். புதிய பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது மாநாட்டின் ஒரு அம்சம். சொல்லப் போனால் ஒரு சின்ன்ஞ்சிறிய விஷயம்.

மாநாட்டுப் பிரதிநிதிகள் தாலுகா குழு, மாவட்டக் குழு, மாநிலக் குழு, மத்தியக் குழு ஆகியவற்றுக்கான புதிய குழுக்களை அந்தந்த மட்ட்த்திற்கு ஏற்ப  தேர்ந்தெடுப்பார்கள். தாலுகா குழு, மாவட்டக் குழு, மாநிலக் குழு, மத்தியக் குழு என அனைத்து மட்டங்களிலும் போட்டியிட பிரதிநிதிகளுக்கான ஜன்நாயக உரிமை உண்டு. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய குழுவின் உறுப்பினர்கள் தங்களுக்கான செயலாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

கிளை முதல் அகில இந்திய அளவு வரை ஒருவர் மூன்று முறை மட்டுமே செயலாளராக இருக்க முடியும் என்ற விதி, கடந்த அகில இந்திய மாநாட்டில்
ஜன்நாயகபூர்வமாக முன்வைக்கப் பட்டு விவாதிக்கப்பட்டு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட்து.

தோழர் பிரகாஷ் காரத் மூன்று முறை செயலாளராக செயலாற்றிய காரணத்தால் இம்முறை புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.ஆனாலும் சில ஊடகங்கள் தோழர் பிரகாஷ் காரத் பொதுச்செயலாளராக தொடர மாட்டார் என்று கிசுகிசு பாணியில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களின் எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகள் மார்க்சிஸ்ட் கட்சி பற்றிய நல்ல செய்தியை வெளியிட மாட்டார்கள் என்பது ஊரறிந்த உண்மை. இந்த கிசுகிசு கலாச்சாரத்தை ஹிந்து நாளிதழும் எதற்கு கையிலெடுத்துள்ளது என்று தெரியவில்லை.

அவரா இல்லை இவரா இல்லை வேறொருவரா என்றெல்லாம் தானும் குழம்பி வாசகர்களையும் குழப்பியுள்ளது. பிரகாஷ் காரத் பிடி கொடுத்து பேசவில்லை என்றும் அங்கலாய்த்துள்ளது. மாநாட்டுப் பிரதிநிதிகளும் மத்தியக் குழுவும் ஜன்நாயக பூர்வமாக எடுக்க வேண்டிய முடிவைப் பற்றி அதற்கான நேரம் வருவதற்கு முன்பாக யாராலும் சொல்ல முடியாது என்பது ஹிந்து இதழிற்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் புலம்பியுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக யார் வந்தால் என்ன? அது என்ன திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற முதலாளித்துவக் கட்சிகளா? தனி நபர் சொல்வதே வேத வாக்கு என்று ஒருவரை மட்டும் நம்பி செயல்படுகிற கட்சியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அடுத்த மூன்றாண்டுகளுக்கு கட்சி எத்திசை வழியில் செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்கப் போவது கட்சியின் அகில இந்திய மாநாடு. அதை அமலாக்கும் பொறுப்பு மாநிலக் குழுக்களும் மத்தியக் குழுவிற்கும் உண்டு. முடிவுகளை செயல்படுத்த வேண்டிய இட்த்தில் பொதுச் செயலாளர் இருப்பார். அவ்வளவுதான். அது யாராக இருந்தால் ஹிந்துவிற்கு என்ன?

பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு யார் வந்தாலும் அவர்கள் மாநாடு தங்களுக்கு இட்ட பணியைச் செய்யப் போகிறார்கள். அவ்வளவுதான். இவரோ இல்லை அவரோ இல்லை வேறொருவரோ, அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வழி நட்த்தப் போவது மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள்தான்.

ஆகவே மார்க்சிஸ்ட் கட்சியின் அடுத்தப் பொதுச்செயலாளர் என்ற கவலை ஹிந்து நாளிதழிற்கு அவசியமில்லை.

இந்த கிசுகிசு பாணி செய்திகளை விட்டு விசாகபட்டிணம் மாநாடு, மாநாட்டில் தலைவர்கள் ஆற்றிய உரைகள், தீர்மான்ங்கள்  ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிடுவது அதற்கும் நல்லது. நாட்டிற்கும் நல்லது.

12 comments:

  1. நன்றாகச் சொன்னீர்க்ள்

    ReplyDelete
  2. ஸ்தாபன நிலைமை---- company status??

    -Y.Anna

    ReplyDelete
  3. தம்பி, ஸ்தாபன நிலைமை என்றால் அமைப்பின் வலிமை, செயல்பாடுகள் என்று அர்த்தம். முகம் காண்பிக்க முடியாத உனக்கெல்லாம் எங்க கட்சியை நக்கல் செய்ய வயசு பத்தாது. கொஞ்சம் ஓரமா போய் விளையாடு

    ReplyDelete
    Replies
    1. Mugam matrum
      Vaarisu-mugam kaanbikka

      naan onnum blog "Owner"
      illenga sir!!

      -Y.Anna- 70 yrs young.

      Delete
    2. எழுபது வயசுக்கு ஏங்க இப்படி இருக்கீங்க. உங்கள் வயதிற்கு உங்கள் வார்த்தைகள் பொருத்தமாக இல்லை.

      Delete
    3. உங்கள் வயதிற்கு உங்கள் வார்த்தைகள் பொருத்தமாக இல்லை.
      you may ask the same Q yourself (not Mr Raman) sir!

      for ex. today post https://puthiyavasagan.wordpress.com/2015/04/18/jaya-admk-thapa-cpi/
      - Y.Anna

      Delete
    4. என்னுடைய பதிவிற்கு தொடர்பில்லாத பின்னூட்டம் இது. சி.பி.ஐ தோழர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி

      Delete
  4. For a already dead entity whether a General Secretary necessary

    ReplyDelete
    Replies
    1. சோவியத் யூனியன் வீழ்ந்த போதும் இப்படித்தான் வக்கிரமாக பேசினீர்கள். இன்று லத்தீன் அமெரிக்காவில் தொடங்கிய சிவப்பு அலை ஐரோப்பாவிற்கும் பரவிக் கொண்டிருக்கிறது. எங்களின் மரணத்தை எதிர்பார்த்தவர்கள்தான் மரணத்தை தழுவியிருக்கிறார்கள்

      Delete
  5. திரு Y. அண்ணா அவர்களே, நீங்கள் எழுபது வயது இளைஞரா இல்லை பதினேழு வயது கிழவரா என்பது எனக்கு தெரியாது. முகத்தை மூடிக் கொண்டு நக்கல் செய்பவர்களுக்கு நான் எப்போதும் மரியாதை கொடுப்பது கிடையாது. They don't deserve it. நையாண்டி செய்பவர்களுக்கு முகத்தைக் காண்பிக்கும் தைரியமும் வேண்டும். அது இல்லாமல் Y. அண்ணா என்பது உங்கள் பெயர் என்று நான் நினைக்கவில்லை. நக்கலாக ஏன் அண்ணா என்று கேட்கிறீர்கள் என்று புரிந்து கொண்டேன். அதனால் தம்பி எனறு அழைத்தேன். ஆனால் வாரிசு முகம், ஓனர் என்ற வார்த்தைகள் ஓவர். அனாமதேயங்களுக்கு இதற்கெல்லாம் அருகதை கிடையாது

    ReplyDelete
    Replies
    1. 17 vayadhu kilavan-
      Paat-tali udambu appadithaan theriyum,
      Yean yenil ulaippu appadi sir! idhu LIC velay illey! vivasaayam!

      Anaamadeyam-
      Non owner illey! vaarisu valarka!
      Athanal indha vaarthai sariye! thank you!

      Arugadhai-
      idhu ungalukku mattumey unndu!! because
      Neengal oru computer Varga pooraaali!

      சி.பி.ஐ தோழர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி-
      orey kolgai udaya communist patri theriyadu !
      aaanaal...
      yella topic/leaders patri-mattum vimarisinam seiveenga?

      Thanks for teaching modern communism!

      En thai Tamilil- Aduthavarai Madhikka theriyada arasaanga Ouliyar!

      yours friendly,
      Y. Anna
      (Yadavan Anna)- Ex-communist.

      Delete
    2. காவிக்கூட்டத்தை விட முன்னாள் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை எழுபது வயது இளைஞரான நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். நான் மீண்டும் சொல்கிறேன். முகத்தை மறைத்து வன்மத்தை உமிழும் அனாமதேயங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான அருகதை அவர்களுக்குக் கிடையாது.

      கன்னாபின்னாவென்று எழுத முடிகிற அனாமதேயங்களால் ஏன் உண்மையான முகத்தைக் காண்பிக்க முடியவில்லை? அதற்கான தைரியம் ஏன் இல்லை. ஏன் ஒளிந்து கொள்கிறார்கள்? அப்படிப்பட்ட அனாமதேயங்களுக்கு ஏன் நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள்?

      உங்களையே கேட்கிறேன், நீங்கள் பேசுவது அபத்தமாக இல்லை? வலைப்பக்கம் எழுதினால் ஓனரா? அதிலே ப்ரொஃபைல் போட்டாவில் மகனின் படத்தைப் போட்டால் வாரிசா?

      இதை சரியென்று சாதிக்கும் உங்களுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. வக்கிரப் பிதற்றல்களை கைவிட்டு ஆரோக்கியமான விவாதத்திற்கு உங்களால் என்று வர முடிகிறதோ, அப்போது வாருங்கள் பேசுவோம்.

      இது திமிர் அல்ல, தார்மீக கோபம். புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

      மத்தியதர வர்க்க ஊழியர்களின் மீதுள்ள பொறாமையை கைவிடுங்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், மத்தியதர வர்க்க ஊழியர்கள், வணிகர்கள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு போராட வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

      போராட்டக் களத்திலிருக்கும் கம்யூனிஸ்டுகளை நையாண்டி செய்து கொண்டு காலத்தை ஓட்டாதீர்கள்.

      மனசாட்சியுள்ள மனிதரென்றால் உங்களுக்கு அது சாத்தியம்


      Delete