Monday, March 23, 2015

இளையராஜாவின் ஆஸ்கார் பாடல் வரிசை




பன்னீர் புஷ்பங்கள் படத்தில் வரும் "ஆனந்த ராகம் கேட்கும் காலம்" பாடல் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான பாடல் என்று சில நாட்கள் முன்பாக பதிவிட்டிருந்தேன்.

ஆஸ்கர் விருது பெற்ற சில இசைக் கோர்வைகளை தேடிப் பிடித்து கேட்ட போது அதிலே இசை எப்படி கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் பார்க்கையில் ராஜாவின் ஏராளமான பாடல்கள் ஆஸ்கர் விருதிற்கு தகுதியானவையே. நேற்று ஆரணி, திருவண்ணாமலை இன்று சென்னை என இரண்டு நாட்களும் பயணத்திலேயே கழிந்தது. மூன்று பதிவுகளுக்கான அனுபவம் இன்று மட்டுமே கிடைத்தது. அதை வரும் நாட்களில் எழுதுகிறேன்.

பயணம் எப்போதுமே எனக்கு இளையராஜா பாடல்களோடே நடைபெறும். அதனாலாயே ஆஸ்கர் பாடல் வரிசை என்று என்னுடைய மனம் கவர்ந்த பல பாடல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று இசையமைப்பாளர் கனவில் மிதக்கும் இளைஞன்   உருவாக்கிய இந்த பாடல் அருவியாய் பொழியும். எந்த அணையாலும் கட்டுப்படுத்த முடியாத இசைப் பிரவாகம்.

என்ன ஒரு கொடுமையென்றால் கிடார் இசைக்கும் மஞ்சள் உடை தேவதைகளைப் பார்த்தால் ஆஸ்கர் குழு பயந்து போயிருக்கும்.

3 comments:

  1. அருமையான பாடல் மடை திறந்து! தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பார்வையை!

    ReplyDelete
  2. நீங்க எழுதுவது இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டமே.

    கிடார் இசைக்கும் மஞ்சள் உடை தேவதைகள் பயமுறுத்தி தான்இருக்காங்க.

    ReplyDelete
  3. முக நூலில் சாரு நிவேதிதாவை பகடி செய்து ஆவாஸ் அன்ஜிங் என்பவர் எழுதியுள்ளது கீழே இருக்கிறது.

    \\கில்மா நாலல்களை நான் 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். அதிலேயே நான் வடிவேலு என்ற கிரேக்க இசைக் கலைஞரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். அவர் வெறும் இசைக் கலைஞர் மட்டும் அல்ல. மாபெரும் இசை அறிஞரும் ஆவார். sing in the rain என்று இவர் பாட ஆரம்பித்தால் மெய் மறந்து ரசிக்கலாம் .கணிதத்தையும் இசையையும் இணைத்தவர் அவர்(எட்டணா இருந்தா எட்டு ஊரு- பாடல் ஒரு உதாரணம்). அவருடைய இசையைக் கேட்பதற்கே உங்களுக்கு மிகப் பெரிய ஒரு மனத் தயாரிப்பு வேண்டும். உலகத்தில் வடிவேலு போன்ற கலைஞரை நீங்கள் வேறு எங்கேயும் பார்க்க முடியாது.ஏன் என்றால் அவரைப் போல் அவர் ஒருவரே தான் இருக்கிறார். நிலவில் நீங்கள் தனியாக நடக்க நேர்ந்தால், விண்வெளியில் தனியாக நீங்கள் மிதக்க நேர்ந்தால் உங்களுக்கு என்ன அனுபவம் ஏற்படுமோ அதே அனுபவத்தை வடிவேலு வின் இசையில் நீங்கள் அடையலாம். உதாரணமாக, அவருடைய மிகப் புகழ்பெற்ற METASTASIS என்ற இசைப்படைப்பைக் கேட்டுப் பாருங்கள். லிங்க் இதோ:
    https://www.youtube.com/watch?v=LWfnfmTQ2JA

    ReplyDelete