Tuesday, March 3, 2015

மக்களவையில் ஒரு மோசடி

 http://www.thehindu.com/multimedia/dynamic/01437/24PARLIANEW_1437356g.jpg
மோடி அரசு இன்சூரன்ஸ் சட்ட (திருத்த) மசோதா 2015 என்ற ஒரு மசோதாவை இன்று மக்களவையில் அறிமுகம் செய்துள்ளது. 
 
ஏற்கனவே சிதம்பரம் காலத்தில் மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப் பட்ட  இன்சூரன்ஸ் சட்ட (திருத்த) மசோதா 2008 இன்னும் நிலுவையில் உள்ளது. நாடாளுமன்றத்தின் ஒரு அவையில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதா அங்கே நிறைவேற்றப்படாமல் இன்னொரு அவைக்கு வர முடியாது என்பது விதி.
 
இருந்தாலும்  இன்சூரன்ஸ் சட்ட (திருத்த) மசோதா 2008 மாநிலங்களவையில்  இருக்கும் போதே மோடி அரசு   இன்சூரன்ஸ் சட்ட (திருத்த) மசோதா 2015 ஐ  மக்களவையில் கொண்டு வந்துள்ளது ஒரு அப்பட்டமான விதி மீறல். 
 
இன்சூரன்ஸ் சட்ட (திருத்த) மசோதா 2008 ஐ திரும்பப் பெறுவதற்காக மத்திய அரசு மாநிலங்களவையில் முயற்சி எடுத்தது. ஆனால் அது வெற்றி பெறவில்லை.

தவறு என்று தெளிவாக தெரிந்த பின்னும் ஒரு காரியத்தை செய்வதை மோசடி என்றழைக்காமல் வேறு எப்படி சொல்வது?

இந்த அரசு நேர்மையாக நடந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்க முடியாதல்லவா?

No comments:

Post a Comment