Friday, March 20, 2015

பரவாயில்லை, திமுக விற்கு தைரியம்தான்

 
ப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகள் பற்றியும் அவை அதிமுக வைக்கும் அம்மா(!) பேனர்களுக்கு மட்டும் அவை பொருந்தாது என்பது பற்றி நான் பல முறை  பதிவு செய்துள்ளேன்.

கலைஞர் பிறந்தநாளுக்காக 2013 வருடம் திமுக வைத்த அனுமதி பெறாத பேனர்களை காவல்துறை பறிமுதல் செய்து விட்டதால் கடந்த வருடம் அடக்கி வாசித்தார்கள் என்பதையும் ஏதோ ஒரு பதிவில் எழுதிய நினைவு உள்ளது.

ஆனால் பரவாயில்லை, இந்த வருடம் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எங்கள் சத்துவாச்சாரி பகுதியில் திமுக இளைஞர் எழுச்சி நாள் விழா மார்ச் 11 அன்று நடத்தியது.அதற்காக நிறையவே பேனர்களை வைத்தார்கள். அதில பல நேற்று இரவு வரை கூட எடுக்கப்படவில்லை. திமுகவிற்கு  வந்துள்ள தைரியம் பாராட்டத்தக்கது.

பொதுவாகவே எந்த ஒரு புதிய பேனர் வைக்கப்பட்டாலும் அதிலே பேனர் வைப்பதற்கான அனுமதிக் கட்டணம் கட்டிய ரசீதும் இடம் பெற்றுள்ளதா என்று பார்ப்பது வழக்கமாகி விட்டது.  அதிமுக வைக்கிற பேனர் என்றால் கண்டிப்பாக இருக்காது. அது போலவே வேலூர் தங்கக் கோயில் சாமியார் பேனர் என்றாலும் பெரும்பாலும் இருக்காது.

இந்த முறை வித்தியாசமாக திமுக வைத்த பேனர்களிலும் அந்த அனுமதிக் கட்டண ரசீது இல்லை.  அதிமுகவைப் போலவே திமுகவையும் காவல்துறை கண்டு கொள்ளாமல் விட்டது ஒரு முன்னேற்றமே. இதை அப்படியே மற்ற அமைப்புக்களுக்கும் விரிவு படுத்தினால் நல்லது.

நெடுஞ்சாலைத்துறை, காவல் நிலையம், மாநகராட்சி என்று ஒரு பேனர் வைக்க ஒன்பது நாள் அலைவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.

No comments:

Post a Comment