Thursday, March 26, 2015

ஓ ! அவரோட ஹோட்டல்தானே?திங்கள் கிழமையன்று எனது அக்கா கணவரின் அறுபத்தி ஒன்றாவது பிறந்த நாள். சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகள் எதுவும் நடத்தவில்லை.

மிக நெருங்கிய உறவினர்களோடு ஒரு Get together ஆக சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் மதிய உணவிற்கு என் அக்கா பையன் ஏற்பாடு செய்திருந்தான். எந்த ஹோட்டல் என்பதை மட்டும் பிறகு உறுதிப்படுத்துவதாக சொல்லியிருந்தான்.

அது போல சென்னை டி,நகரில் உள்ள “அகார்ட் மெட்ரோபாலிடன்” என்று அவன் தகவல் சொன்னதும் நான் கேட்ட முதல் கேள்வி
 http://www.freevisuals4u.com/photos/2011/12/Accord-Metropolitan.jpg

“வெங்கடேஷ் பட் வேலை செய்யற ஹோட்டல்தானே?”

அவன் கடுப்பாகி விட்டான்.

“யாரந்த வெங்கடேஷ் பட்? எல்லோருமே இதே கேள்வியைக் கேட்கறீங்களே?”

எனக்கு முன்பாக அவன் யாருக்கெல்லாம் தகவல் சொன்னானோ, அவர்கள் அனைவரும் கூட இதே கேள்வியைத்தான் கேட்டுள்ளார்கள். (இதே போல வேறு ஒரு சூழலில் மற்றவர்கள் கேட்ட அதே கேள்வியை நானும் ஒருவரிடம் கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட சோகக் கதையை வேறொரு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்)

அவர் விஜய் டி.வி யில் சமையல் நிகழ்ச்சிக்கு வரும் சமையல் கலைஞர் என்று சொன்னதும் “ஓ, அவரா எனக்கும் தெரியுமே” என்றான்.
 http://www.thehindu.com/multimedia/dynamic/00134/26BGMBHAT1_134722f.jpg

ஒரு ஹோட்டல் அதன் உரிமையாளர்களை விட அதில் பணியாற்றும் சமையல் கலைஞர் மூலமாக அதிகம் அறியப் படுகிறது என்றால் அது ஒரு ஆரோக்கியமான அம்சம். அதற்கு ஊடக வெளிச்சமும் ஒரு காரணம்.

சும்மா சொல்லக் கூடாது.


உணவின் சுவை அற்புதமாகவே இருந்தது. வடக்கத்தி பாணி உடை அணிந்த ஒரு பையனின் சேவையும் சிறப்பாக இருந்தது. நாங்கள் அங்கே இருந்த போது திரு வெங்கடேஷ் பட்டும் அங்கே வந்தார். அவரது நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பவர்கள் என்று அறிமுகமும் செய்து கொண்டோம். உங்கள் சமையல் குறிப்புக்கள் புத்தகமாக வந்துள்ளதா என்று கேட்டதற்கு மே மாதம் வரவுள்ளது என்றார்.

வர வேண்டும், சீக்கிரமாகவே வர வேண்டும். அப்போதான் நாமும் அதிலிருந்து புதிது புதிதாக முயற்சி செய்து கொண்டே இருக்க முடியும்.

ஒரே ஒரு விஷயம் அவரிடம் சொல்ல நினைத்து பிறகு வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன். விஜய் டிவி யில் அவரது குறிப்புக்கள் எழுத்து வடிவில் ஒளிபரப்பாகும் போது எழுத்துப் பிழைகள் ஏராளமாக இருக்கும். 

தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத அவர் அதற்கு காரணமல்ல, தொலைக் காட்சியின் தவறுதான் என்பதால்தான் அதைச் சொல்லவில்லை. 

நூலாக வரும் போது தமிழ் நன்றாக அறிந்த ஒருவரிடம் கொடுத்து சரி பார்க்கச் சொல்ல வேண்டும். அந்த பணிக்கு மட்டும் அவர் விஜய் டிவி ஆட்களை நம்பக் கூடாது.

3 comments:

  1. வெங்கடேஷ் பட்டின் யூட்யூப் விடியோக்களைக் கண்டு ரசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. oru sappadukku evala-vu aachu thozar??

    ReplyDelete
  3. அவரு சமையலாளர் மட்டுமில்லை, அந்த ஓட்டலின் சிஇஓவும் அவர்தானாம். அது போக 15+ பெங்களூர், பூனே ரெஸ்டாராண்டுகளின் ஓனராம். இன்னோரு விடயம் ஆசாமி பிராமணர்- ஆகவே சுத்த சைவம்- அசைவத்தை சுவை பார்க்காமலேதான் சமைக்கிறாராம் - பேத்தேவன் காது கேட்காத போதும் சிம்பனி எழுதியது போல!!!

    ReplyDelete