Thursday, January 29, 2015

கைதான வேட்பாளர், முன் ஜாமீன் வேட்பாளர் - ஸ்ரீரங்கம் தேர்தல்


 
கடந்த வாரம் சில தொலைக்காட்சிகளில் ஸ்க்ரோல்  ஓடிய இரண்டு விஷயங்கள்.

ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் கைது என்ற செய்திக்கு சொந்தக்காரர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் கே.அண்ணாதுரை. ஒபாமா வருகையைக் கண்டித்து போலீஸ் தடையை மீறி  நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு  தலைமை தாங்கியதால் அவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக அவர் கைது செய்யப்பட்டது பெருமைக்குரிய விஷயம். தேர்தல் பணிகள் பாதிக்கப்படும் என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் கோரிக்கைகளுக்கான பல போராட்டங்களில் ஏற்கனவே அவர் பல முறை சிறை சென்றுள்ளார் என்பதும் சிறப்பானது.


இன்னொரு செய்தி சென்னை உயர்நீதி மன்றம் பாஜக வேட்பாளர் எம்.சுப்ரமணியத்திற்கு அளித்த முன் ஜாமீன். தன் கல்லூரியில் கணிணி பயிற்சி அளித்த நிறுவனத்திற்கு பணம் தராமல் ஏமாற்றிய மோசடிக்காக கைதாகாமல் முன் ஜாமீன் வாங்கியுள்ளார் இந்த மனிதர்.

சி.பி.எம் மிற்கும் மற்ற முதலாளித்துவக் கட்சிகளுக்கும் இடையேவுள்ள மாபெரும் வித்தியாசம் இதுதான்.

மக்கள் பணி செய்பவருக்கு மார்க்சிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பளித்துள்ளது. பாஜக வோ ஒரு ஏமாற்றுப் பேர்வழிக்கு சீட் கொடுத்துள்ளது. இதற்கு அந்த மலை விழுங்கி மகாதேவனிடம் எவ்வளவு தேற்றினார்களோ?
 

1 comment:

  1. நல்லதொரு விடயத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள் நண்பரே ஆனால் இது மக் '' கல் '' தலையில் ஏறமாட்டுதே..... என்ன செய்வது ?
    தங்களுக்கு நேரமிருப்பின் எமது குடிலுக்கு வருகை தரவும்
    கில்லர்ஜி

    ReplyDelete