Saturday, January 31, 2015

உமாசங்கரோடு நடவடிக்கை நிற்கக் கூடாது.

எந்த விதமான மதப் பிரச்சாரமும் செய்யக் கூடாது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கருக்கு தமிழக தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதம் காலம் தாழ்ந்த நடவடிக்கையானாலும் சரியான நடவடிக்கை என்பதை மறுக்க முடியாது.

அரசு அதிகாரிகள் மதத்திற்கு அப்பாற்பட்டே நிற்க வேண்டும். தனிப்பட்ட வாழ்வில் மதத்தை பின்பற்றுவதற்கும் தான் சார்ந்த மதத்தையோ அல்லது கடவுளையோ பிரச்சாரம் செய்வது என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசியல் சாசனம் சொல்லியிருக்கிற மதச் சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய கடமை அரசு இயந்திரத்தின் ஒரு பகுதியான நிர்வாகத்திற்கு கண்டிப்பாக உள்ளது.

உமாசங்கரைப் பொறுத்தவரை அவர் கிட்டத்தட்ட மனநிலை பிறழ்ந்தவர் என்ற நிலைக்கு எப்போதோ வந்து விட்டார். “உத்தர்கண்டில் வெள்ளம் வந்து மக்கள் செத்துப் போவார்கள், அது நான் அளிக்கும் தண்டனை” என்று தன்னிடம் ஏசு சொன்னதாக அவர் சொன்ன போதே தெரிந்து விட்டது உமாசங்கரின் மறை கழன்று விட்டது  என்று.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர காவிக்கும்பலும் உமாசங்கரை எதிர்க்கிற ஒரே காரணத்தினாலேயே அவரை ஆதரிக்கும் மன நிலைக்கு சிலர் தள்ளப்பட்டுள்ளனர். அது அவசியமற்றது. மாறாக உமாசங்கரை எதிர்ப்பவர்களிடம் நாம் சில கேள்விகளைக் கேட்டாலே போதுமானது.

அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு அதற்கு மாறாக

வர்ணாசிரம தர்மத்தை பிரச்சாரம் செய்யும் இந்து மத நூலான பகவத் கீதையை மட்டும் எல்லோருக்கும் பரிசளித்துக் கொண்டிருக்கும் மோடி,

பகவத் கீதையை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் சுஷ்மா ஸ்வராஜ்,

மங்கள்யான் விண்கலத்தின் மாதிரியை திருப்பதியில் வைத்து வழிபட்ட ஐ.எஸ்.ஆர்.ஓ ராதாகிருஷ்ணன்.

பல்வேறு அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிற ஏராளமான அதிகாரிகள்

ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவீர்களா என்று கேட்டால் போதுமானது.

ஒரு உமாசங்கர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது சரியானது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய உமாசங்கர்கள் ஏராளமாகவே உள்ளனர்

5 comments:

 1. if you want to punish somebody put him in Pentecost prayer, OMG he will commit suicide.

  -Yarow-

  ReplyDelete
 2. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  ReplyDelete
 3. நடவடிக்கை முடியவில்லை. உமா சங்கரின் மேல் தண்டனை வைத்தால்தான் நடவடிக்கை முடிந்ததெனலாம்.

  ''தொடர்ந்து என் பிரச்சாரம் நீடிக்கும் அதை நான் விடுமுறை நாட்களில்களில்தான் செய்வதால் என் தொழிலுக்கு எப்பாதிப்புமில்லை. தன் தொழிலைப்பாதிக்காவண்ணமிருக்கலாகென்றுதான் அரசியல் சாசனம் சொல்கிறது. அரசு வேலையில் எனக்கு வேலையென்று எதுவும் தராமல் வைத்திருக்கிறார்கள். அதாவது நான் என்ன செய்தாலும் என் வேலைக்குப்பாதிப்பே வராது - வேலை இருந்தால்தானே பாதிப்பு வர? அரசு ஊழியர்கள் 24 மணினேரமும் அரசின் அடிமைகளல்ல என்றும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அரசு அழைத்தால் போய் வேலை செய்யவேண்டும்; ஆனால், அழைக்காதபோது அரசு ஊழியர் தன் விருப்பப்படி நேரத்தைச் செலவு செய்யத்தடையில்லை. இருக்கின்ற வாரநாட்களிலேயே எனக்கு வெட்டி ஆபிசர் வேலை. பின் எப்படி சனி ஞாயிறுகளில் அழைப்பார்கள்? ''

  என்று சொல்கிறார்.

  அரசியல் சாசனம் சொன்னது செகுலரிசம். செகுலரசம் என்றால் நாத்திமன்று. ஒரு அரசு ஊழியன் கோயிலுக்குச் செல்லக்கூடாதென்று சொல்லவில்லை.. அரசு ஊழியன் என்பவன் 24 மணினேரமும் ஊழியன் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இருக்கடடும். ஆனால், நான் என் வீட்டில் என் மனைவி குழந்தைகளுடன் இருக்கும்போது அரசுக்கு அடிமையா என்று கேட்கிறார். நாமென்ன சர்வாதிர்கார நாட்டிலா வாழ்கின்றோம்?

  உத்ராகண்டில் வெள்ளத்தைப் பற்றி ஒரு சாமியாரும் சொன்னார். அதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஒரு காளியின் கோயில் அங்கு பழைமையாக இருந்துவந்தது. அதை இடித்துவிட்டு சிவனை வைத்தார்கள். எனவே காளியின் கோபத்துக்கு ஆளானார்கள் என்றார். ஒரு தனிமனிதன் (நாத்திர்கரைத் தவிர) ஒரு பெரும் சோகம் நிகழ்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் மடியும் போது, இறைவனின் கோபம் என்று நினைப்பது வழக்கம். க்ருத்துவரென்றால், சஙக்ர் சொன்னதுபோலவும் சொல்லலாம். இசுலாமியரும் சிலைவணக்கம் செய்ததால் இப்படியாச்சு எனலாம். அவரவர் மதப்படி அவரவர் நினைக்கிறார்கள். சங்கர் ஒரு கிருத்துவ ஊழியக்கூட்டத்தில்தான் அப்படி பேசினார். அரசு ஃபைலிலிலோ இந்துக்கள் மத்தியிலோ சொல்லவில்லை.

  1962ல் டிவிசன் பென்சு ஒன்றின் தீர்ப்பைக்காட்டி அரசு ஊழியர் மதக்கூட்டங்களில் பேசத்தடையில்லை என்கிறார். நினைவிருக்கட்டும்: சேஷன் தேர்தல் ஆணையராக இருக்கும்போது காஞ்சி சங்கராச்சாரியர் இறுதியாத்திரைக்கும் தில்லியிலிருந்து விமானத்தில் பறந்து வந்து, ஆச்சாரியரின் பாடை தூக்கும் நால்வரில் ஒருவராக இருந்தார். படங்கள் வந்தன. சாயிபாபாவின் பக்தர்கள் ஏராளம் ஐ ஏ எஸ் அதிகாரிகள். அவரகள் கூட்டத்தில் பிரச்சாரம் செய்ய்வில்லை. ஆனால் அவர்கள் தொழிலுக்கு அவர் யாத்திரைகள் இடைஞ்சலா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியுமா?

  ஒரு அரசு ஊழியர் மதப்பிரச்சாரம் செய்யலாமா எனபதை அவர் மீது நடவடிக்கை முழுப்பெற்றதும் அவர் கோர்ட்டுக்குபோவார். அப்போது வரும் தீர்ப்பே சரி. அரசும் ஏறக‌ வேண்டும். அதுவரை அவரவருக்குப் பிடித்தமாதிரி சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

  ReplyDelete