Saturday, January 17, 2015

அந்த கட்சி எம்.பி வேற என்ன செய்வாரு?





போக்குவ்ரத்து விதியை மீறி  யு.டர்ன் எடுக்கக் கூடாத இடத்தில் ஒரு கார் திரும்பியது. அங்கே இருந்த போக்குவ்ரத்து கான்ஸ்டபிள் அந்த காரை நிறுத்தச் சொல்லியுள்ளார். அந்த காரின் ஓட்டுனர் "உன்னால்  முடிந்ததைப்  பார்  என்று திமிராக சொல்ல, அந்த கான்ஸ்டபிள் அந்த காரின் எண்ணை குறித்துக் கொள்கிறார்.

உடனே காரில் அமர்ந்திருந்தவர் வெளீயே வருகிறார். அந்த டிராபிக் கான்ஸ்டபிளை நடு ரோட்டில் வைத்து கன்னத்தில் அறைகிறார்.

ஏனய்யா அறைந்தாய் என்று கேட்டார்கள்.

அந்த கான்ஸ்டபிள் ஒரு மன நோயாளி என்று பக்கத்தில் உள்ளவர்கள் சொன்னார்கள். அதனால் ஒரு அறை கொடுத்து அவரை சரியான மன நிலைக்கு கொண்டு வந்தேன் என்று ஒரு விளக்கம் வேறு கொடுத்தார்.

இதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.

ஆமாம்

அவரது கட்சி பாரம்பரியம் அப்படி.

அந்த எம்.பி யின் பெயர் பிரசுன் பானர்ஜி.

சம்பவம் நடந்த இடம் : கொல்கத்தா

அவரது கட்சி திரிணாமுல் காங்கிரஸ்.

அதன் தலைவி மம்தா பானர்ஜி.

பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்ட பெண்ணையே ஒழுக்கமற்ற நடத்தை  உடையவள் என்று கதை கட்டியவரல்லவா.....

மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே....

இந்த கட்சி எம்.பி மட்டும் எப்படி யோக்கியராக இருக்க முடியும்?

2 comments:

  1. yeppadio!

    Oru communisa

    (katt) aatchi meendum angu
    vandhaaal sari!!

    ReplyDelete
    Replies
    1. கம்யூனிச ஆட்சி வர வேண்டும் என்ற உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      காட்டாட்சி என்று சொல்வது தவறான புரிதல் என்று கண்டிக்கிறேன்

      Delete